Secular Song 541 to 545

Secular Song 541

Some people are very smart in their talk to get things done as per their wish.  They will talk in such a way that you won’t even feel that you are getting trapped in it.  In fact, they will try to communicate that what they try to do is only for our needs and good.  Once they accomplish their task when we sit and calculate the losses, then it will be too late.  As one such incident happened in our neighbourhood I wrote this song thinking about such people.

Secular song 541 ஏமாந்து போவோம்

எத்தனை எளிதாய்

ஏமாந்து போகிறோம்

எண்ணத்தில் தெளிவு

இல்லாது போனதால்

எடுப்பார் கைப்பிள்ளை

ஆக்கி விடுகிறார்

எளிதாக நம்மை

ஏமாற்றி விடுகிறார்

பேச்சில் எத்தனை

இனிமையும் இருக்குது

பேசினால் பேசிச்சில்

தேனும் ஒழுது

அந்த பேச்சிலே

அடுத்தவர் மயங்க

அந்நேரம் பார்த்து

காரியம் சாதிப்பார்

காலம் கடந்து

விழித்திடும் போது

காரியம் கைமீறி

போயும் இருக்கும்

காரியம் முடிந்து

ஏய்ப்பவர் போனபின்

கணக்கு பார்த்தால்

பயனென்ன இருக்கும்

எவர் வந்து எதற்காக

எப்படி பேசுறார்

என்பதை முதலிலே

யோசித்துப் பார்க்கணும்

எளிதாக பதிலேதும்

நாமும் தாராமல்

யோசித்து பதில்

அதற்கேற்பத் தரணும்

இல்லாது போனால்

எளிதாக ஏமாந்து

எப்போதும் போல

முட்டாளாய் வாழ்வோம்

மத்திகிரி, 21-2-2020, இரவு, 11.10

Secular Song 541 We will be cheated

How easily we are

Deceived by some

When we don’t have

Clarity in our thinking

They will make us

To dance according to their tune

And they easily

Cheat us

How sweet is

Their talk

And when they talk

Even honey is dripping

When others are

Enticed by such talk

They will

Accomplish their task

When we are

Awakened very late

Things might have

Gone beyond our control

What is the use?

Calculating the account

Once the cheaters

Have gone away

We should

Think first

Who come and

What they talk

Not giving

Any quick response

We should respond

Thinking properly

Otherwise

We will be easily be cheated

And we will live

Always as a fools

Mathigiri, 21-2-2020, 11.10

Secular Song 542

For the first time I experienced the pain of betrayal by someone whom I brought up as my own grandchild.  No need to narrate the story, as every betrayal has the same result—back stabbing.

முதன் முதலாக  பெற்ற அல்லது வளர்த்த பிள்ளைகள், வயதான காலத்தில்  பெற்றவர்களுக்கு செய்யும் துரோகத்தின் வலியை உணர்ந்த போது எழுதிய பாடல்.

Secular Song 542 பட்டபின் புரிந்தேன்

எண்ணிட என்னிடம் எண்ணம் இல்லை

ஏதினி செய்வது புரியவும் இல்லை

எத்திசை செல்வது தெரியவில்லை

எதையும் செய்திடத் தெம்பும் இல்லை

சுழலிடை அகப்பட்ட துரும்பு போல ஆனேன்

சூழ்நிலை கைதியாய் சிறைப்பாட்டுப் போனேன்

விரும்பிய விடுதலை தேடி வந்தாலும்

வெளியே செல்ல ஏனோ பயந்தேன்

வேண்டாத காரியம் வீணாக செய்தேன்

வேதனை தன்னை விலைக்கு வாங்கினேன்

நன்மை செய்வதாய் நானும் எண்ணி

சொந்த காசில் சூனியம் வைத்தேன்

எரியும் விறகாலே தலையைச் சொறிந்தேன்

பட்ட புண்ணால் நிம்மதி இழந்தேன்

மருந்து எத்தனை தடவிய போதும்

பட்ட காயம் ஆறவும் காணேன்

இறுதி காலத்தில் ஏனிந்த தொல்லை

எப்படிப் புலம்ப, தெரியவும் இல்லை

எவ்விதம் தப்பிக்க வழியே இல்லை

ஆயினும் சுமக்கத் துணிவும் இல்லை

இத்திலொரு பாடம் நானும் கற்றேன்

அதற்கான விலையை நானும் தந்தேன்

சுடுமெனத் தெரிந்தும் விரலை வைத்தேன்

சுட்ட பின்னால்தான் வலியைப் புரிந்தேன்

மத்திகிரி, 23-2-2020, இரவு, 10.30

Secular Song 542 I learnt through experience

I don’t have a mind to think any more

I don’t know what to do further

I don’t know which direction I should go?

And I don’t have strength to do anything

I become like a dust caught in a whirlpool

I become a prisoner of circumstance

Though the freedom which I long came on its own

Somehow, I am afraid to go outside

I have done one unnecessary thing in vain

I bought pain by paying my own money

Thinking that I am doing good

I have done black magic against me on my own cost

I scratched my head with a burning stick

I lost the peace of mind because of the wound

Though I applied much medicine

The wound is not healed

Why this trouble in this old age

I don’t know how to lament about it

There is no means to escape by any means

But I don’t have the courage to carry it anymore

But I learnt one good lesson through this

I paid the cost for that

Knowing that it will burn my finger I put it in fire

I realized only after my finger get burned

Mathigiri, 23-2-2020, 10.30 p.m.

Secular Song 543

For comments see the article: ‘Oral tradition vs written text’.

543 எழுத்து

எல்லோரும் படிக்க

எழுதிட முடியாது

எவரேனும் படிப்பார்

என்று எண்ணாது

எழுதிடும் எதையும்

தனக்காக எழுதணும்

அதன்படி உண்மையாய்

இருந்திட வேண்டும்

காற்றோடு போகும்

பேச்சாக இல்லாமல்

கருத்தோடு எழுதும்

எழுத்துக்கள் யாவும்

என்றேனும் ஒரு நாள்

பயன்தரக் கூடும்

எவரேனும் ஒருவர்

நலன் பெறக் கூடும்

யோசிக்க மறந்து

பேசிடும் பேச்சால்

எத்தனை தீமைகள்

வருது அதனால்

பலமுறை யோசித்து

எழுதிடும் போது

பக்குவம் வந்திடும்

வாழ்வினில் தன்னால்

ஆகவே எழுதிட

பழகிட வேண்டும்

அதிலுள்ள நன்மையை

உணர்ந்திட வேண்டும்

அதன்பின் எழுதிட

துணிய வேண்டும்

அத்துடன் தயக்கமும்

நீங்க வேண்டும்

மத்திகிரி, 10-3-2020, இரவு 11.10

Secular Song 543 Writing

We cannot write

Thinking that everyone will read

We should not write thinking that

Someone will read

Whatever we write

We should write for us

And we should try

To be true to it

Unlike the spoken word

That goes along the wind

All the written words

That written meaningfully

One day will be

Useful to us

Someone will be

Benefited by them

When we speak

Not thinking properly

How much harm

Are coming because of that

When we write

After thinking several times

Maturity will come

In life because of that

Therefore, we should

Learn to write properly

We should know the

Benefit in it

Then we should take

Courage to write

And we should remove

Any hesitation in it

Mathigiri, 10-3-2020, 11.10 p.m.

Secular Song 544

The Corona pandemic is teaching one lesson to humanity—THE IMPORTANCE OF HUMAN TOUCH.  I don’t mean not only the physical touch but also the human approach in our relationship with others.  Yesterday I received one distress call and another message from youngsters expressing their fear about this pandemic in India.  We the senior citizens have the responsibility to stretch our moral support to them with encouraging words.

Every sneezing or slight cough or cold is not a symptom of Corona.  At the same time, we should not take them very lightly either. This pandemic has some kind of psychological impact in our mind creating some crisis.  Even some began to feel some kind of irritation in their throat and pain even though there is no such symptom.  Too much information, particularly about the symptoms of  Corona created some kind of psychological fear in people’s minds. 

So during this period of ordeal we all need to come together—keeping the social distance to help each other by reaching each other through messages, telephone calls, video talk etc. and co-operate with the government to overcome this situation.

28-03-2020

544 கொரோனா

கையைக் குலுக்கி வரவேறோர்

கும்பிடு போட்டு பேசுகிறார்

கட்டித் தழுவி உறவு கொண்டார்

எட்டி நிற்க சொல்கின்றார்

நிற்க நேரம் இல்லாமல்

நின்று பேச முடியாமல்

நாலு காசு பார்ப்பதற்கு

நாயைப் போல அலைந்தவர்கள்

நேரம் இப்போ நின்றுவிட

ஒன்றும் பேச இயலாமல்

வீட்டுக்குள்ளே கிடக்கின்றார்

வெளியே செல்ல ஏங்குகிறார்

காலாற நடந்து விட்டு

காற்றும் கொஞ்சம் வாங்கிவிட்டு

ஊர் வம்பு பேசிவிட்டு

ஊரைச் சுற்றி வந்தவரும்

நடக்கக் கூட இடமின்றி

காற்று வாங்க வழியின்றி

பிறர் காற்றும் படாமல்

முகக் கவசம் போடுகின்றார்

எளிதாய்க் கிடைத்த பல செயல்கள்

எட்டாக் கனியாய்ப் போனபின்னே

உண்மை நிலையை புரிந்து கொண்டு

உறவின் மேன்மை அறிகிறார்

வர்க்க பேதம் இல்லாமல்

வறியவர்—உள்ளவர் பாராமல்

அனைவரையும் தன் ஆளுகைக்குள்

கொண்டு வந்த கொரோனாவால்

தூய்மை இந்தியாத் திட்டம் கூட

தொய்வில்லாமல் நடக்கிறது

மனிதர் தொட்ட இடமெல்லாம்

தெளிப்பான் வந்து துடைக்கிறது

ஆனால் இந்த களேபரத்தில்

அரசியல் செய்ய இயலாமல்

ஏதும் பேச இடமின்றி

எதிர் கட்சித் தவிக்கிறது

சீனாக்காரன் தொடங்கிவைக்க

உலகே இன்று தவிக்கிறது

எதிலே போய் இது முடியும்

என்று எண்ணிக் கலங்கிறது

ஆனால் அறுபது வயதானோர்

எவ்வித அலட்டலும் இல்லாமல்

வழக்கம் போல வாழ்கின்றார்

பிறரை தட்டிக் கொடுக்கின்றார்

மோடி சொன்ன ஊரடங்கு

முற்றும் சரி என்கிறார்

மறந்து போன உறவுடன்

மீண்டும் வாழ்ச் சொல்கின்றார்

மத்திகிரி, 24-3-2020, இரவு, 11.00

Secular Song 544 Corona

Those who welcomed by shaking hands

Now talk with each other by saying ‘namaste’

Those who had fellowship hugging each other

Now request to keep some distance away from them

Unable to stand for a moment

Unable to talk with others

In order to earn money

Those who roamed like dogs

As now time stands still

Unable to do anything

They are confined within the house

And long to go outside

Going leisurely for walking

And enjoying cool breeze

Those who went around the town

Gossiping with others

Without any place to walk

And unable to enjoy the cool breeze

Not allowing others’ breath to touch them

Now use mask to cover their face

Many things which are within easy reach

As now become remote to them

Understanding the reality of the situation

They now understand the importance of relationship

Not showing any kind of discrimination

Not discriminating between rich and poor

Because of Corona which brought everyone

Under its control

Even ‘Clean Indian’ scheme also

Going on well without any break

And spray now cleans

Every place which human beings touched

But in this commotion

Unable to do any kind of politics

Without any opportunity to make comments

The opposition party is frustrated

As the Chinese started it

The entire world is troubled now

Not knowing where this will end

All are troubled very much

But those who passed 60 years

Without showing any kind of frustration

Live the life as usual

And they encourage others also

They say that the curfew which Modiji declared

Is correct one

And they advise others to live

With relatives whom they forgot in the past

Mathigiri 24-3-2020, 11.00 p.m.

Secular Song 545

Though success can bring confidence and joy in life, still it is defeat which alone can bring ‘wisdom’ to face many realities in life.  We might forget the success soon and over confidence might blind our eyes to see the pitfall in front of us.  But defeat will alert us to be careful and wise enough to take steps cautiously.  Of course as overconfidence is dangerous, over cautiousness also might discourage us to proceed further.  But there is no other option but to get back from a fall and walk further keeping the goal in front of us.

Secular Song 545 தோல்வி

தோல்வியைக் கண்டால்

துவண்டு தான் போவோம்

தோல்வியை ஏற்றால்

மடிந்து போவோம்

ஆயினும் தோற்காமல்

வாழ்க்கையும் இல்லை

அதன்மூலம் கற்றபின்

தோல்வியே இல்லை

தோற்காத மனிதர்

உண்டோ சொல்லு

துவண்டு நின்றால்

வெற்றியும் ஏது

தோல்வியை மட்டுமே

எண்ணியே நின்றால்

சிந்தையும் முடங்கும்

என்பதை உணரு

விழுந்தால் எழுந்து

நிற்கத்தான் வேண்டும்

விழுந்த இடத்தை

கடக்கத்தான் வேண்டும்

கொண்ட குறிக்கோள்

கைதட்டி அழைக்க

அதை நோக்கி

ஒட்டத்தான் வேண்டும்

இடையில் எத்தனை

தடைகள் வந்தாலும்

எத்தனை முறை

இடறி விழுந்தாலும்

துணைக்கு வந்தார்

தயங்கி நின்றாலும்

தொடர்ந்து ஓடி

இலக்கை அடையணும்

இலக்கை அடைந்தபின்

தேங்கி விடாமல்

புதிய இலக்கினை

வைத்திட்ட வேண்டும்

இறுதி  வரையில்

இதுபோல் வாழ்ந்து

தோல்விக்கு தோல்வியை

தந்திட வேண்டும்

மத்திகிரி, 2-4-2020, இரவு, 11.45

Secular Song 545 Defeat

When we face defeat

We will be depressed

But if we accept defeat

We will be finished

But there is no life

Without any defeat

Once we learn through it

There is no further defeat

Tell me, is there anyone

Who never faced defeat in life?

If we get depressed because of defeat

Where is the hope for success?

If we think

Only about defeat

Even our mind

Will stand still

If we fell down

We need to get up to stand

We need to go further

Away from where we fell

As the goal

Calls us to come

We need to

Run towards it

How many hurdles

Might come on the path

How many times

We fell down

Even those who accompanied us

Stands still

We need to run

To reach our goal

Once we reached our goal

Not get struck there

We need to fix

New goal for us

Living like this

Till the end

We need to give defeat

Even to the defeat

Mathigiri, 2-4-2020, 11.45 p. m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *