Secular Song 555 எது என் அடையாளம்
எதற்காக வேண்டும்
எனக்கொரு அடையாளம்
எப்படிப் பெறுவது
அதையே நானும்
பிறர் பார்த்து எனக்கு
தருவதே அல்லாமல்
எப்படி நானாக
அதைத்தேடக் கூடும்
தமிழ் என் தாய்மொழி
அதனால் தமிழனா
பார்ப்பனப் பிறப்பால்
ஆரியன் ஆனேனா
இந்தியக் குடிமகன்
எனவே இந்தியனா
அத்துடன் மதத்தால்
நானொரு இந்துவா
இத்தனை அடையாளம்
எனக்கு இருக்கையில்
எதை முன்வைத்து
நானும் வாழ்வது
தமிழன் ஆரியன்
இந்தியன் இந்து
இவற்றில் எதைத்தான்
தேர்வு செய்வது
மனிதனாய்ப் பிறந்தேன்
மனிதனாய் மடிவேன்
இறுதியில் எதைச் சொல்லி
என்னையும் எரிப்பார்
உடலும் அழிந்து
சாம்பலாய் மாற
அதன்பின் எதற்கு
அடையாளம் தருவார்
எந்த அடையாளம்
எனக்கு தந்தாலும்
போன உயிருக்கு
அடையாளம் இல்லை
காற்றோடு கலந்து
மூச்சும் போனபின்
எவ்வித அடையாளம்
எனக்கு இல்லை
மத்திகிரி, 6-10-2020, இரவு, 11.30
Secular Song 555 What is my identity?
Why I need
An Identity
How can I
Get it?
Unless others
Give it to me
How can I
Seek on my own?
Am I Tamilian?
Because Tamil is my mother tongue
Did I become an Aryan?
Because of my birth as a Brahmin
Am an Indian
Because I have Indian citizenship
Added to these am I a Hindu
Because of Hindu religion
As I have
So many identities
How to live
Keeping which one first?
Tamilian, Aryan
Indian and Hindu
Which one
I have to choose
I born as a human
And will die as a human
By selecting which one
How they will cremate me
Once the body is perished
And becomes mere ash
Then which identity
They will give to me
Whichever identity
Others might give to me
There is no identity
For the breath which has gone
Once the breath mingles
And gone with wind
There is no
Identity for me
Mathigiri, 6-10-2020, 11.30. p.m.
Leave a Reply