Secular Song 146
History is the record of those who succeeded. This is not limited to who established great kingdoms by winning others. So many individuals become immortal through their contribution for the upliftment of humanity as a whole and individuals on a personal level. They stand unique among all other human beings. Who will fit this description is left to every individual to decide.
146 யார்வுண்டு?
அறிவால் வென்றவர் உலகில் பலருண்டு
அன்பால் வென்றவர் உலகில் எவருண்டு
பண்பால் உயர்ந்தவர் பாரினில் பலருண்டு
பிறர் வாழ தனைத்தந்தோர் மாந்தரில் எவருண்டு
உலகில் மேன்மை அடைய வழியுண்டு
உழைப்பால் உயர்ந்தேற திறமைகள் பலவுண்டு
மதியால் உலகாள வாய்ப்புகள் பலவுண்டு
மானுடர் உய்ந்திட வந்தவர் எவருண்டு
பார் ஆண்ட வேந்தர்கள் பலநூறு பேருண்டு
படிப்பால் உயர்ந்த சான்றோர் பலருண்டு
தவத்தால் தன்னை வென்ற ஆன்றோர் இங்குண்டு
தன்னையே உவந்தளித்த தகையாளர் எவருண்டு
தம்தனித் தன்மையால் தனித்து உயர்ந்தோரே
தம்போல் பிறர் வெல்ல வழி பல சொன்னார்
அழியாப் புகழெய்தி நிலைத்து நின்றார்
அழிவின்று நாமுய்ய வழி சொல்லி சென்றார்
17-2-16, (18-2-16) இரவு, 12.15 மத்திகிரி
146 Who is their equal?
Many are there who won the world through their knowledge
But who is there who won the world through their love?
Many become great in this world through their noble character
But who is there who gave the very life for others to live?
There are many ways to become great in this world
There are many ways to become successful through toil
There are many chances to rule the world through buddhi
But who is there who came to redeem the world?
Many are the Kings who ruled the world
Many are the noble person who excelled through their learning
Many overcame themselves through their penance
But who is there who gave himself joyfully for others?
Only those who became great because of their uniqueness
And who showed the path others to become great like them
They alone become immortal by achieving great fame
And they showed the path for us to be redeemed.
17-2-16, (18-2-16) 12.15 am. Mathigiri
Secular Song 147
Human life is an unending race. Whoever created it or how it began, it will continue though individuals might disappear after running their part. This is a never ending story like Mega TV serials, though somehow started by a director or producer not knowing how to end.
147 முடியாத ஓட்டம்
ஓடித்தான் ஆக வேண்டும்
ஓட்டம் கூட நின்ற பின்னும்
ஆடித்தான் ஆக வேண்டும்
ஆட்டமெல்லாம் முடிந்த பின்னும்
நாடித்தான் செல்ல வேண்டும்
நாட்டமெல்லாம் இழந்த பின்னும்
தேடித்தான் போக வேண்டும்
தேவையெல்லாம் முடிந்தபின்னும்
முடியா தென்ப தெல்லாம்
முடிவான முடிவு மல்ல
முயன்று பார்க்கும் எண்ணம்
மனதில் உள்ள மட்டும்
முடிந்தது என்று எண்ணி
முடிக்க விரும்பி முயன்றும்
முடிவில்லாத வாழ்வு கூட
முடிவின்றி தொடர்ந்து செல்ல–ஓடித்தான்…
இதனிடை நம் பங்காக
என்னவோ ஓடினோம் நாமும்
இடையில் இணைந்து சிலரும்
ஓடினர் தம்பங் கிற்காக
அவரவர் ஆட்டம் முடிய
அடுத்தவர் தொடர்ந்து ஓட
முடிவறியா ஓட்டமாக
முடிவின்றி ஓடும் வாழ்வில்–ஓடித்தான்….
20-2-16, (21-2-16) 12.10 am, Mathigiri
147 Unending Race
Though the race is finished
Yet we have to run
We have to dance
Though the program came to an end
We need to long continuously
Though we lost interest in longing
We continue to seek
Though the needs came to an end—we need to run
Impossibility is
The final say
Not the final one
As long as we have
The longing to attempt
Though we long to complete
Thinking that it came to an end
Yet we need to continue to run in the life
As the unceasing life continuous permanently—we need to run
We too join the race
To do our part in it
Those who joined with us in the middle
also ran as part of their share
as each one’s running came to an end
and to give room for others to run
like an unceasing race
in this life which runs without any end—we need to run
20-2-16, (21-2-16) 12.10 am, Mathigiri
148. அலசடிப் படுவோமே
எவருக்கில்லை துன்பம்
எவருக்கிலை துக்கம்
என் வரை மட்டுமே நான்
எண்ணலாகுமோ மனமே?
தன்னையே சுற்றிவந்து
தன் வரை வாழ்ந்திருந்து
தனியாகிப் போவோமே
தனித்தே நிற்போமே
அந்நேரம் நம்பாரம்
சுமப்பவர் எவருமின்றி
அலைகடல் துரும்பாகி
அலசடிப் படுவோமே
அடுத்தவர் நலனெண்ணி
அவரின் வாழ்வெண்ணி
அனுசரித்து வாழ்ந்தாலே
அடைவோம் நலமே
நாமாகப் பிறக்கவில்லை
நாமாக வளரவில்லை
நாலுபேர் துணையின்றி
ஊர் போய் சேர்வதில்லை
இதையும் புரிந்து கொண்டு
இசைவுடன் நடந்துகொண்டு
இயன்றமட்டும் உதவிசெய்து
இயல்பாய் வாழ வேண்டும்
4.3.16, மத்திகிரி, மதியம் 2.30
148. Get tossed
Who does not have suffering?
And who does not have sorrows?
Can I think only about me?
O my mind?
Living for oneself
And focusing on oneself
Will make us to become lonely
And we will stand alone
And we will be tossed
Like a dust on the wave
Without any one
To share our burden
Thinking about others’ welfare
And thinking about their life
If we cooperate with others
We too will be comforted
We never born on our own
And we never grew on our own
Without the help of others
We will never reach our destiny
Realizing this
And cooperating with others
Helping others as much as possible
We need to live naturally.
4.3.16, Mathirigi, 2.30 pm.
As I lay down, I was just recalling my own life in which I have to run the race on several levels. Then I thought: ‘now too I have to continue to run as there are no other options. However, several physical limitations can slow the race,’ I said, the first line in Tamil that I have to run though I claim that my running came to an end. Then I wrote this song reflecting life as a whole. Like most of the songs, I find it difficult to convey what I have written in Tamil in English. The way I use the same word with different meanings is difficult for me to translate in English.
Song 149
Another song out of frustration thinking about the issues and problems that stand in queue. As there is no escape from any kind of responsibility. For me, reflecting on them and pouring down my frustration through a poem is the best relief.
149. பாரம்
பாடுகள் படுவது யாருக்குப் பிடிக்கும்
பாரம் சுமப்பது எவருக்கு பொறுக்கும்
பாரின் வாழ்வும் மாபெரும் பாரமே
பட்டது போதும் தப்பித்தால் போதுமே
ஒன்று போனால் ஒன்று வந்திடும்
ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையில் நின்றிடும்
எதை முடித்தாலும் நிம்மதி இல்லை
இப்படி வாழ்வதால் பயன் ஏதும் இல்லை
ஆயினும் எதை விட்டு ஓடிட முடியும்
அவசரப் பட்டால் காரியம் கெடும்
பொறுமை காத்திட துணிவும் வேண்டும்
“பொறுத்தார் ஆள்வார்” புரிந்திட வேண்டும்
முடிந்ததை முதலிலே செய்திட வேண்டும்
முடிக்க அதனுடன் ஊக்கமும் பிறக்கும்
அனுபவம் மூலம் ஆக்கத்தைப் பெருக்கி
அடுத்தவர் துணையுடன் பாரத்தை சுமக்கணும்
4-3-16, மத்திகிரி, மதியம் 2.40
149. Burden
Who would like struggles in life
Who can tolerate carrying a burden?
The life on earth is very heavy one
Better to get escaped as we carried enough
If one is gone another will come
Each one will stand in line following each other
Whichever is accomplished, there is no peace
And there is no use living like this
But where to run leaving anything?
Frustration will spoil the game
We need courage to have patience
Those who have patience will rule.
First we need to accomplish which is possible one
Once we complete that work, we will get encouragement
Then through experience pulling up the sacks
With the help of others we need to carry the burden.
4-3-16, Mathigiri, 2.40 pm.
Self pity often forces one to think about oneself and concentrate more on the issue that she faces. That time many try to play the victim card or lament that no one understands them. Though we need not compare our life with others, yet the traditional wisdom is to compare the difficulties and challenges others face more than us and pull up the sacks to cope with the reality of life. And the best way to overcome self pity and depression is to reach out to those who suffer more than us—not to feel some comfort that ‘I am better than others’ but to understand the unique principle that ‘human are social animal’. That life would be a natural one and remaining aloof from others is unnatural to human nature and need. This reaching out to others need not be limited only through physical act, but that is the best one as per my understanding. At the same time, when other’s seek our help in any other form, we should give our time to them without giving any excuses that we don’t have time.
Song 150
150கொள்கை
கூவி அழைத்தே பல கொள்கையும் பேசுறார்
கூட்டம் போட்டு அதைக் கூறியும் காட்டுறார்
நாடகம் முடிந்து வேடமும் கலைந்த பின்
வேடிக்கை பொருளாகிப் போனதைப் பார்க்கிறார்
உணர்ச்சியின் வேகத்தில் உளறிடும் வார்த்தைகள்
உதவாது என்பதை உணரவும் மறுக்கிறார்
கூட்டத்தோடு நின்று கோஷங்கள் போட்டவர்
கூடிய வேகத்தில் களைந்துமே போகிறார்
கொள்கை எதுவென்று கொஞ்சமும் புரியாது
கூறிடும் வழிகளும் முறையாக இல்லாது
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியே
எதையும் சாதிக்க இயலாது போகிறார்
கொண்ட கொள்கையை தெளிவாகப் புரிந்து
கூவி அழைப்பதில் உறுதியாய் இருந்தால்
இறுதிவரை தனித்து இருந்திட நேரினும்
எதிலும் சமரசம் என்றும் செய்திடார்
சரித்திரம் படைப்பதாய் எண்ணி சிலமுறை
சரியாக சிந்தித்து செயல்பட அறியாமல்
போன போக்கிலே பேசிடும் பேச்செல்லாம்
போய்விடும் காற்றோடு கூட்டமும் போனபின்
கொண்ட கொள்கையை தன்னிலே தொடங்கணும்
தனித்து அதற்கு விலையும் கொடுக்கணும்
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் எல்லாம் ஓய்ந்தபின்
அமைதியாய் அதையும் நடைமுறைப் படுத்தணும்
6-3-16, மத்திகிரி, இரவு 11.00
150 Ideology (conviction)
They proclaim so many ideologies
And promote them by arranging meetings
Once the drama ends and the crowd get dispersed
They become an object of ‘thamasha’.
They refuse to understand that
The words which they babbled out of emotion won’t withstand
And those who gathered to shout slogans along with them
Also disappear in the same speed as they gathered
Not understanding what does it mean to have conviction?
And the methods to proclaim it also not proper
Just making tall claims
They unable to achieve anything
Having a clear understanding about the principle which they have
And remain firm in their call for others to follow
Though left alone till the end
They won’t make any compromise
Without thinking properly and act
Thinking that they are creating ‘history’
All the talks which they utter in passing
Will be gone along with the wind, once the crowd is gone
One should begin the ideal within oneself first
And ready to pay a cost for it
Once the emotion and commotion come to an end
Remaining calm they should try to implement it.
6-3-16, Mathigiri, 11.00 pm.
As the competition among the 24X7 media become intense to keep their TRP, now society is facing so many new problems. One among such is the media hype. One best example that comes to my mind is the famous fasting of Anna Hazari in 2014. In the name of presenting the ‘TRUTH’ nothing but ‘TRUTH’ what all the medias present is their own version that suits their (idealistic) purpose. In the recent past several such media hypes which promoted so many people either as heroes or victims (be it govt. versus others; or group versus groups; etc). Once they served their purpose, they too threw away those who helped them to create such hypes. And people who with initial zeal and enthusisam taking both the crowd and media as the true supporters for their cause, began to make big speeches and promise to fight till the end. But without having personal conviction for which one need to pay a high cost, based on mere commotion and emotion, cannot withstand the test of the time. All cannot be Gandhji who LIVED UP TO HIS CREED’. How many time we hear the TV anchors praising the resilient spirit of certain individuals or group promised to keep their struggle alive completely dumped them within few days. The same is the case with many followers. Those who have personal conviction alone can with stand till the end to fight for the cause to which they committed.
###
Leave a Reply