Secular Songs 151 to 155

151. இன்னிசை

இன்னிசை கேட்டால்

இதயமும் உருகாதா

இயற்கையும் இணைந்தால்

இனிமையும் பிறக்காதா

மெல்லிய பனி தூவ

யாழிசை மெருகேற்ற

புள்ளினம் இசை கூட்ட

மேனியும் சிலிர்க்காதா

அழகிய இல்லாளும்

அமைதியாய்ப் பணிசெய்ய

சிறு சிறு நிகழ்வுமே

சிந்தையை நிரப்பாதா

இரை தேடும் பறவைக்கு

தன் கையால் பரிமாற

பிரிவின்றி அவன் படைப்பு

போற்றி மகிழாதா

மாண்புடன் இல்லத்தில்

இசையெனும் விருந்தோம்ப

இயற்கையைக் கொண்டாடி

வாழட்டும் துணையோடு

11-3-16. Mathigiri, 10.55 am.

151. Sweet music

When we listen to sweet music

Won’t our hearts melt?

Once the nature too joined

Won’t it become more pleasant?

As the snow gently fall

And Sitar music adding beauty to it

With birds’ background music

Won’t our hair stand still?

(Brisling of the hair of the body)

As the beautiful House wife

Serving silently

Even small small things

Won’t make our mind to meditate

As she feeds the birds

By her own hand

Won’t His creation

Hail His Name

Celebrating the nature

By serving music feast

Let the woman live (long)

With her husband at her home

11-3-16. Mathigiri, 10.55

As I listened to Sitar music in Rag ‘Meg’ , a rainy raga, performed with a background of snow in the garden of their home by a bhakta, I listened to it again and again. The way his wife feeds the birds and the way they come and pick up without any fear made me think how God’s creation can come together to celebrate such harmony of His creation along with nature.  The way she displayed her kitchen and served hot tea demonstrated the way she could relate the way she takes care of birds and others with a motherly touch.  As I like snow very much, with its background the ‘Meg’ rag really becomes more beautiful in a new environment.  Not only the music but also the season is really a feast for all music lovers.  May the couple serve many more such feasts in the days to come with such innovative ideas.

Song 152

152. கண்ணீர் வடிப்பார்

காரணம் புரியாது கண்ணீர் விடுகிறார்

கருத்துக்கும் புரியாது கலக்கம் அடைகிறார்

மனமே விரும்பாது வேதனைப் படுகிறார்

மனித வாழ்வின் அர்த்தமும் தேடுறார்

வந்த காரணம் அவர்க்கும் புரியாது

போகும் நேரமும் அவர்க்கும் தெரியாது

இடையில் வாழ்ந்திடும் வாழ்வும் கூட

இப்படி யானால் எவர் என்ன செய்வது?

நல்லதை நாடித்தான் நன்மையும் செய்யுறார்

நாலுபேர் வாழவே முடிந்ததை புரிகிறார்

ஆயினும் இடையினில் சுயமும் குறுக்கிட

அமைதி தன்னை முதலில் இழக்கிறார்

தன்சுகம் தேடுதல் குற்றமே இல்லை

தன் தேவை குழைபதில் தவறேதும் இல்லை

அதற்காய் பிறர் நலம் பறிக்க முயன்றால்

அவரே இழப்பார் ஏனிது புரியல

இதை உணராது பிறர் மீது பழி கூறி

இடையினில் தன் செயலை நியாயப் படுத்தி

எப்படியேனும் தப்பிக்க முயன்றால்

இப்படித்தான் நிதமும் கண்ணீர் வடிப்பார்.

21-3-16, மத்திகிரி, காலை, 9.45

152. Will shed tears

Not knowing the reason they shed tears

Unable to understand they are troubled (in heat)

They experience sorrow even though they don’t like it

And began to search for the meaning of human life

They don’t understand the reason for their coming on earth

And they don’t know when they will be taken back

And if the life which is lived in between these two

What else can others do (for them)?

They help others seeking only others’ welfare

And they do their best for others to live

But when their own selfishness interfere

They lost their peace of mind first

Nothing wrong in seeking one’s own comfort

And it is not wrong to toil for one’s own needs

But for it if they deprive others welfare

They will lose their own and why don’t they understand this?

Not realising this, if they blame others

And if they began to justify their own acts

And try to escape (from their responsibility)

Finally they will shed tears like this every day.

21-3-16, Mathirigi, 9.45 am.

Though sinful nature often mars our good intention, yet the other side of the coin is that compassion is there in everybody’s heart and each one tries to help others as much as possible.  But several times when ‘ego’ clashes, it finally ends up doing any help or charity for selfish reasons.  Then we lose our inner peace and not get satisfaction in our charity and help for others. 

Song 153

153.  அவர் அவர் பங்கு

ஆயிரம் கவலைகள்

அனுதினம் பாடுகள்

அணிவகுத்து வந்தால்

வாழ்வதும் எவ்விதம்

உடல் தேவை ஒருபுறம்

உளத்தேவை மறுபுறம்

இவற்றின் இடையே

பிறர் தேவை குறுக்கிடும்

தனக்கென வாழ்வது

தரணியில் முடியாது

தனித்தே வாழ்வதும்

எவராலும் இயலாது

தன்தேவைக் காகவே

பிறருக்கு உழைக்கணும்

தான் வாழ எண்ணினால்

பிறருடன் உழைக்கணும்

பிறருக்கு உழைத்திட

தன் தேவை நிறைவேறும்

பிறருடன் வாழ்ந்திட

தன் வாழ்வும் நிறைந்திடும்

ஆயினும் இதுவொன்றும்

எளிதான தல்ல

அங்குதான் தொடங்கும்

போராட்டம் மெல்ல

எப்படி முயன்றாலும்

தப்பிக்க முடியாது

எங்கு போயினும்

போராட்டம் ஓயாது

முடிந்ததைச் செய்ய

முயற்சி பண்ணணும்

முடியா தென்பதை

முற்றிலும் தவிர்க்கணும்

அவரவர் பங்கை

அவரவர் செய்ய

அன்றாட வாழ்வும்

நன்றாக முடியும்

இதை உணராது

இடையூறு செய்தால்

அனைவர் வாழ்வும்

கவலையில் முடியும்

மத்திகிரி, 21-3-16, இரவு, 11.30

153.  Each one’s contribution

How to live

If thousands of worries

And struggles

Come in line?

Along with physical need

And the need of heart

Other’s needs also

Often interfere

Living for oneself

Is impossible on this earth

And none can live

“Alone” in life

For one’s own need

We need to toil for others

If one wants to live

They have to work with others

When we toil for others

Our needs get fulfilled

Once we began to live with others

Our life too became complete

But this is not

That much easy (as said)

There alone struggle

Will slowly emerges

However we try

We cannot escape

Wherever we run

Struggle won’t end

We should try

To do what we can do

We should completely avoid

Which is impossible for us?

(Particularly in old age)

If each one

Do her part

Everyday life

Will become smooth

Not realizing this

If we began to give trouble

Everybody’s life

Will end in a mess.

Mathigiri, 21-3-16, 11.30 pm.

The mystery in human life is to understand one within and also understand each other in Interpersonal relationship.  Both are necessary to have a balanced life.  Without having personal understanding about oneself—strengths and weaknesses as well as a minimum understanding about others, we cannot even survive. And better than understanding about oneself, mutual understanding alone enhances both. For this mutual contribution and co-operation is very important.

 Song 154

154. எவருக்கும் புரியாது

வலியும் வேதனையும் வந்தால் தான் புரியும்

வாழ்வின் பாரம் சுமந்தால்தான் தெரியும்

நாம் படும் துயரம் பிறர்க்குப் புரியாது

புரிய வைக்க நம்மாலும் முடியாது

எத்தனை மனிதர் துணைக்கிருந் தாலும்

எவ்விதம் தாங்கி சுமந்திருந் தாலும்

நம் போராட்டம் நமக்குத்தான் புரியும்

நாமதைக் கூற (பல) கேள்விதான் பிறக்கும்

அறிவுரை ஆயிரம் பலர் வந்து கூறுவார்

ஆலோசனபல இலவசமாகத் தருவார்

அவர் தரும் இவற்றிலே தவறேதும் இல்லை

ஆயினும் அவற்றால் பயனேதும் இல்லை

பிறர் தரும் அறிவுரை கேட்டிட வேண்டும்

பிறருடன் கூடி வாதிக்க வேண்டும்

இறுதியில் காரியம் வருகின்ற போது

சரியெனப் படுவதை செய்திட வேண்டும்

இறுதி பலன் எதுவாக இருந்தும்

ஏற்று அதன்படி சென்றிட வேண்டும்

அனுபவம் தந்த படிப்பினை கொண்டு

தவறுகள் திருத்தி வாழ்ந்திட வேண்டும்

27/28-3-16,  இரவு, 12.30, மத்திகிரி

154. Others cannot understand

Pain and suffering can be understood when they come to us

The burden of the life can be recognized only when we carry it

Others cannot understand our suffering

And we too cannot make them to understand

Though many will be there to give us company

However they might uphold us by carrying us

We alone can understand our struggle

When we try to communicate it, only questions alone will come

Thousand of advice others will give

And they will provide free counselling also

Nothing wrong in these services provided by them

But there is no use out of them.

We need to listen to others advice

And we should discuss (our problems) with others

Finally, when the time of implementation comes

We need to do what we feel is correct.

Whatever might be the final result?

We need to accept and act accordingly

Learning through our experience

We need to correct our mistakes and live accordingly.

27/28-3-16, 12.30 am. Mathigiri

As I saw my mother lying down with much pain on her body due to old age related issues (I too have lower back pain), I went back to my room to pray for her. That time I reflected on her life which I remember from the age of 7 or 8. She struggled a lot along with my father to give proper life to us.  After my father passed away, she lived alone for several years.  Finally she came to live with me in 2000. 

Though I tried to serve her at my best, she never liked to stay in our ashram. So in order to give her a life which she would like to live, giving up my idealism and desire to live a life of a recluse in a remote place away from people, I moved back to a busy city with all kinds of noises.  But now she suffers due to her old age (now running 91, coming June she will be 92).

Though I do all I could do to give relief from her pain, yet as it is part of her body which is becoming weak day by day, I thought, ‘however I try to comfort her and serve her, yet others cannot understand her suffering’. Then I took a vow that I will continue to do my best—whichever cost that I need to pay for that, at least I should do my dharma as a son.  Then I wrote this song for my mother.

Song 155

155. புலம்பல்

என்னதான் சொல்வது

எவரிடம் செல்வது

என்ன சொல்லியினி

யாரிடம் அழுவது

மனிதர்கள் யாவரும்

மாறுவார் நொடியிலே

மனதில் கொள்ளுவார்

மாற்றமே தன்னாலே

எழுதியே காட்டிட

எண்ணத்தை கொட்டிட

வார்த்தைகள் தேடியும்

வகையாக கிடைக்கல

பேசியே தீர்த்திட

பாரத்தை இறக்கிட

ஆட்களைத் தேடியும்

எவருமே சிக்கல

தனித்தே அமர்ந்து

தன்னிலே புலம்பிட

தைரியம் கூட

சிலருக்குப் போதல

ஆனால் புலம்புறார்

ஆத்திரம் கொள்கிறார்

ஏதேனும் செய்துமே

நாட்களை ஓட்டுறார்

தன்னுள்ளே அமைதியை

தானே இழந்தாலே

எவர் வந்து தாங்கினும்

ஒன்றுக்கும் உதவாது

வாய்மூடி மௌனமாய்

வார்த்தையில் கவனமாய்

எதையும் எண்ணாமல்

இருப்பதே நல்லது

ஆயினும் இது மட்டும்

அனைவருக்கும் முடியாது

ஆகையால் புலம்பலை

அடக்கவும் முடியாது

இறுதி வரையில்

பாரமே சுமக்கிறார்

எத்தனை சொல்லியும்

புரிய மறுக்கிறார்

ஆகையால் தன்போக்கில்

அவரவர் வாழட்டும்

அதற்கு மேலாக

நானென்ன சொல்லட்டும்

2-4-16, மத்திகிரி, மதியம் 2.20

155. Lamentation

What to say

And to whom we to say

How to lament

By telling which one?

Men will change

Within few seconds

They will find change

Automatically in the heart

In order to pour my thought

And give in writing

However I search

I couldn’t find words

None is available

To share my burden

And to

Unload it

Some even don’t

Have the courage

To sit and

Lament alone

Still they are lamenting

And become upset

Doing something

They spend their days

As one has lost

The inner peace on her own

Whoever might come to uphold

Nothing will help her

It is better

To remain silent

By not thinking

Too much about anything

But this is not

Possible for everyone

Therefore they cannot

Stop their lamentation

Till the end

They carry the burden

However we try to tell

They refuse to understand

Therefore let each one live

Their life in their own way

What else is there?

For to say further

2-4-16, Mathigiri, 2.20 p.m.

Once we lost our inner peace and tranquility, none can help us to face the challenge of life.  One problem in old age is ‘loliness’.  They always seek some company to talk and expect others to listen to them, particularly all their problem related with physical ailment and suffering in life.  Though others need to understand and should help as much as possible, yet, no body can satisfy the demand of the old people—particularly to over come their loliness. Expecting that this is invitable to everyone, better we should train our heart and mind to ‘engage’ in our lonliness in a differet and useful way.  Here no body can recommed any uniform solution as each person has to workout her own method based on her aptitute and nature.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *