Secular songs 166 to 170

Song 166

166 வாழ்வெனும் வண்டி

வாழத்தான் பார்க்கிறேன்

வையகம் தனிலே

வழி மட்டும் அதற்கு

வகையாகத் தெரியலே

தேடித்தான் பார்க்கிறேன்

தெளிவாகத் தெரியலே

தெரிந்தவர் சொன்னாலும்

மூளைக்கு ஏறல

வண்டி என தாயினும்

ஓட்டவோ தெரியல

சாவி என்னவோ

பிறரின் கையிலே

எப்போ விருப்பமோ

அப்போ ஓட்டுவார்

இடம் இருந்தால் மட்டுமே

ஏறிடச் சொல்கிறார்

எங்கே போகணும்

என்பதைக் கூட

என்னைக் கேட்டு

முடிவு பண்ணல

இடையிலே கூட

இறக்கி விடுகிறார்

ஏனென்று கேட்டால்

வம்புக்கு வருகிறார்

வண்டி போல் எனது

வாழ்க்கையும் ஆச்சு

வாங்கியே போட்டும்

பயனற்றுப் போச்சு

சும்மா வைச்சாலும்

துரு ஏறிப் போகுது

பிறர் எடுத்து ஓட்ட

வீணாகிப் போகுது

இதற்கு மேலே

என்னதான் செய்ய

வாங்கியே போட்டது

தப்பாகி போனது

விற்க முயன்றாலும்

யாருமே வாங்கலே

சும்மா தந்திட

மனதும் இல்லே

தேவைப் படும்போது

தேடி வருகிறார்

எரிபொருள் நானிட

ஓட்டியும் செல்கிறார்

எதுவரை ஓடுமோ

அதுவரை ஓட்டும்

எவர்கேனும் சற்று

உதவியாய் இருக்கட்டும்

14-5-16, மத்திகிரி, மதியம் 2.55

166 Life like a vehicle

I try to live

On this earth

But I don’t find

Way for it

I search diligently

But it is not clear

Those who knew about it give advice

But it is not entering in my mind

Though the vehicle is mine

I don’t know how to drive

Key is in

Other’s hand

Whenever they want

They take it for driving

Only if there is place

They ask me to get in

They won’t

even consult me

before they decide

Where to go

Half way through

They ask me to get down

If I ask ‘why’

They began to fight with me

My life too became

Like that vehicle

There is no use for me

Thought I bought it

If I keep it not using

It will be rusted

And if others take for driving

It will be spoiled

What else can I do

Now beyond this?

Buying the vehicle

Became a mistake

Even if I try to sell it

No one is ready to buy it

At the same time

I don’t want keep not using it

[At the same time

I don’t want to give it freely]

When they need it

They came asking for it

After I fill the gas

They take it for driving

Let it run

As long as it will run

Let it be useful

At least for others

14-5-16, Mathigiri, 2.55 pm.

 Song 167

167 துறவு

துணிவு வேண்டும் துறக்க

சொந்த பந்தம் வெறுக்க

சுயத்தைக் கூட அறுக்க

தன்னைத் தானே மறுக்க

துறவின் உண்மைத் தன்மை

சொல்லில் வடித்த தில்லை

துறந்து சென்ற எவரும்

“தன்” துறவை சொன்னதில்லை

உலகம் அறிய வேண்டாம்

உறவும் புரிய வேண்டாம்

தானும் உணர வேண்டாம்

பிறர்க்குச் சொல்ல வேண்டாம்

துறக்க விரும்பு வோர்க்கு

“துறக்க” ஏதும் இல்லை

“துறக்க” முயன்று துறந்தால்

துறவில் வெற்றி இல்லை

எனது என்ற எண்ணம்,

என்னில் இல்லா போது

எதனைத் துறக்க முடியும்

ஏதும் எனது இன்றி

இரவல் தந்த உயிரை

இறைவன் மீண்டும் கேட்க

இல்லை என்று சொல்ல

எனக்கு உரிமை இல்லை

இடையில் வாழும் வாழ்வும்

பிறர் தந்த தானம்

அதை அவருக்கு அளிக்க

உரிமை ஏது எனக்கும்

இந்த நிலையில் நானும்

எதை துறக்க முடியும்

எனவே துறந்து விட்டேன்

“துறவி” என்ற எண்ணம்

15-5-16, மத்திகிரி, இரவு, 11.50

I often think that my life is like a car which I own, but unable to drive.  It is always controlled by others and I have no say in it.  But this too is the reality of life. 

167 Renunciation

Courage is need to renounce

To give up all kinds of relationship

Also to severe one’s ‘aham’ (ego)

And to deny oneself.

The true nature of ‘renunciation’

Cannot be explained through words

Those who really renounced

Won’t tell about it

(Or explained about it)

The world need not know about it

Relatives need not understand it

Even the person who renounces need not realize it

And need not communicate it to others

There is nothing to renounce

For those who (really) want to renounce

If one renounces taking efforts for that

There is no success in it (as it should come spontaneously)

Once I don’t have

The concept of ‘mine’

What is there to renounce

Not having anything as my own?

If God asks back

The life which He gave as a loan

I have no right

To say ‘no’ to Him

The life that I live (in between life and death)

Is others gift to me

So what rights I have

Even to return back to them (by renouncing anything)

In this scenario

What can I renounce?

Therefore I renounced

Even the concept of ‘renunciation’.

15-5-16, Mathigiri, 11.50 pm.

As I began to read another book on Sannyasa, I thought about ‘sannyasi’ and ‘what sannyasa’ is.  Then I wrote this poem about me.  For me even renouncing the very conscience that ‘I am renouncing’ should be ‘RENUOUNCED’.  And that should be the true mark of a renuncer.

Song 168

168 முரண்பாடு

இது என்ன முரண்பாடு

என்னுள்ளே நான் காணும்

வீணான பெரும் பாடு

ஒருபுறம் கசப்பு மறுபுறம் இனிப்பு

ஒன்றிலே வெறுப்பு மற்றதில் விருப்பு

இதனிடையே நான் கொண்ட வீணான தவிப்பு

எனக்கே புரியாத என்னென்ன நினைப்பு–இது என்ன

சிரிப்பதா அழுவதா புரியவும் இல்லை

செய்வதா விடுவதா தெரியவும் இல்லை

ஏற்பதா மறுப்பதா இது என்ன தொல்லை

இதற்கு விடையை காணவும் இல்லை–இது என்ன

என்னிந்தப் பாடு எவர்க்கும் புரியாது

எத்தனை சொன்னாலும் அவருக்கு விளங்காது

எனக்கே இதுவரை புரியாத ஒன்றை

எவருமே புரியார் என்பதே மெய்யானது–இது என்ன

வீணான கற்பனை செய்து மாய்கிறேன்

வேண்டாத எண்ணத்தால் ஓய்ந்து போகிறேன்

ஆயினும் இவற்றிடை அகப்பட்டு சாகிறேன்

அதனால் தானே தப்பிக்கப் பார்க்கிறேன்–இது என்ன

இனிப்பும் கசப்பும் இருப்பது நல்லதே

வெறுப்பும் விருப்பும் வாழ்வுடன் கலந்ததே

இவற்றின் இடையே வாழத்தான் வேண்டும்

இந்த உண்மையை ஏற்கத்தான் வேண்டும்

20-5-16, மத்திகிரி, மதியம் 2-10

168  Contradiction

Why this contradiction

Which I see in me

And struggle a lot

On one side it is sweet and another side is bitter

One thing I like and hate another one

The frustration that I have in between them

I think a lot not understanding anything properly

I don’t know whether to laugh or weep

Whether to continue or give it up

Whether to accept it or reject

I cannot find answer for this

None can understand this struggle

How much I try to communicate, others cannot understand

Which I myself didn’t understand so far

Others too cannot understand, this is the reality

I am burnt up with these unnecessary imaginations

I become tired with these unnecessary thoughts

I get perished amidst them

And try to escape from it

It is good to have both sweet and bitter

Desire and hate are part of life

We have to live only amidst them

And have to accept this reality.

20-5-16, Mathirigi, 2-10 pm.

When I notice several contradictions in me, it makes me laugh.  I have no solution for this.  So, till the end I have to live with it.

Song 169

169 பதிலென்ன

ஓடாதே என் மனமே நில்லு

என் கேள்விக்கு பதிலும் நீ சொல்லு

ஓயாமல் போராடி என்னதான் கண்டாய்

இதுவரை சாதித்து எதை நீ வென்றாய்-ஓடாதே

சும்மா இருந்தாலும் சோம்பேறி என்கிறாய்

சுறுசுறுப்பு கொண்டாலோ பறக்காதே என்கின்றாய்

வாய் மூடி இருந்தாலே”குசும்பன்” என்கின்றாய்

வாயைத் திறந்தாலே “வம்பன்” என்கின்றாய்

ஏனிந்த முரண்பாடு என்று கேட்டாலோ

எவ்வித பதிலும் கூறாமல் இருக்கின்றாய்

சரி விடு போகட்டும் உன்பாடு என்றாலோ

சட்டெனத் திரும்பி சண்டைக்கு வருகின்றாய்

உன்னிடம் பதில் இல்லை என்பதால் நானும்

ஊரெல்லாம் தேடித்தான் பதிலையும் கண்டேனே

ஆயினும் அதனையும் ஏற்கவும் மறுக்கின்றாய்

ஆனால் என் கேள்விக்கு பதில் இன்றி தவிக்கின்றாய்

உன்னுடன் வாழ்வது என்றைக்கும் பெரும்பாடு

உன்னுடன் வாதித்தால் எனக்கு வீண்கேடு

போதுண்டா சாமி என்னை நீ விடு

என்னமோ வாழ்ந்துகொள் அதுஇனி உன்பாடு

ஆனால் என்னை போகவும் விடமாட்டாய்

அமைதியாய் வாழவும் நீயும் விடமாட்டாய்

கேள்விக்கு பதிலும் நீயுமோ தரமாட்டாய்

உன்னைக் கேள்வி கேட்கவே இடமும் தர மாட்டாய்.

20-5-16, மதியம் 2-50

169 What is the answer

Don’t run my heart; wait a little for me

Give me the answer to my question

What you have seen by constantly fighting with me

Achieving which, now you become a successful one?

If am remain inactive then you call me a lazy fellow

If I become busy, then you say don’t rush

If I keep quiet you call me ‘kusumban’@

And I began to talk then you call me chattering box.

@ One who does not respond to any kind of inquiry and keeps mum.

If I ask ‘why this much contradiction’ then

You keep quite not giving any answer

When I leave it to you to mind your own business

Then you turn back and began to fight with me

As you don’t have any kind of answer (to my question)

Finally, I found it running pillar to post

But you refuse to accept that too

At the same time, you find it difficult to give answer to my question

It is very difficult to live with you

It is mere waste of time to argue with you

It is enough, leave me alone

Somehow you continue to live and it is your funeral

Yet you won’t let me to go

You won’t allow me to live in peace

You won’t give answer to my question

You won’t allow me even to question you.

20-5-16, Mathigiri, 2-50 pm.

After writing the previous poem (168) I continue to read. But subconsciously I continue to think about the poem which I wrote.  Then I asked my own mind to give the answer to so many questions that I ask to myself. That time I wrote it as a poem.

Song 170

 170 No use

I realized only after receiving

That there is no use for it

Even after realizing this

I persuaded to get it

I was not ready to accept

How much it was taught to me

I refuse to stop

Whoever tries to prevent me?

A thing remained as a riddle

Before I began it

I didn’t understand (clearly)

The way I enacted my means

Somehow, I started it

Expecting something at the end

But I was disappointed

About what I finally got

I never refused to

To listen to others

I didn’t completely deny

Others approach

Yet the result is not

As I expected it

I didn’t find any use of it

After I received it

But this is not

New to me

I never mend my ways

Even after burnt my fingers

How much I tried

My character never changed

Let it be as it is

There is nothing for me to do further (to change it)

24-5-16, 2.30 Pm, Gurukulam

Song 170

170 பயனில்லை

அடைந்தபின் அறிந்தேன்

  பயனில்லை என்று

ஆயினும் தொடர்ந்தேன்

  உணர்ந்துதான் நன்று

எடுத்துச் சொன்னாலும்

  என்னக்கேற வில்லை

எவர் தடுத்தாலும்

  நான் விட வில்லை

புதிராய் இருந்தது

  தொடங்கும்முன் செயலும்

புரியா திருந்தது

  செயல்படும் விதம்

என்னவோ தொடங்கினேன்

  எதையோ எதிர்பார்த்து

ஏமாற்றம் அடைந்தேன்

  கிடைத்ததை நினைத்து

பிறர் சொல் கேட்க

  தவறியதில்லை

பிறர் கூறும் வழியை

  கைவிட வில்லை

ஆயினும் முடிவு

  எனதாக இல்லை

அடைந்த பின்னாலும்

  பயன்காண வில்லை

இது கூட எனக்கு

  புதிதாக தில்லை

எத்தனைப் பட்டும்

  திருந்தவும் இல்லை

என்ன செய்தும்

  என் குணம் மாறலை

ஆவது ஆகட்டும்

  ஒன்றும் செய்வதற்கில்லை

24-5-16, மதியம் 2.30, குருகுலம்

As I read the following lines by Badrinath, ‘…Some become aware of how meaningless the aim was after they have achieved it, often at great cost to themselves and to the others.—p. 6

…For irony reveals what philosophy and history never do, or never can, the real character of a person’s truth or that of a situation. In moments of one’s awareness of the ironies of relationships, one becomes aware not necessarily of their meaninglessness but of their limits. It is then that one sees how foolish, and very often destructive, it is to attach to a relationship meaning it does not have….’ (Chaturvedi Badrinath, The Women of the Mahabharata: The question of Truth, Hyderabad, Orient Blackswan Pvt. Lit, 2008, p. 7)

Attaching any meaning to anything which it does not have, becomes a reality only after we attain it.  We attach too much meaning and importance before we get a thing.  But it soon disappears once we receive it (like a toy for a baby or a young person, a new gadget etc.).  Then some other thing (material thing or relationship) draws our attention and we begin to attach new meaning to this. And this cycle repeats again and again.  As I was thinking about it, I wrote this song.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *