Song 236 236 திடமாய் ஓடு
தோல்விக்கு இங்கு இடமே இல்லை
தோற்பதால் எவ்விதப் பயனும் இல்லை
தோல்வியை எண்ணி துவண்டு போனால்
சரித்திரம் படைக்க சாத்தியம் இல்லை
தோற்றவர் என்று எவருமே இல்லை
தோல்வியை மனதில் ஏற்கா வரையில்
தோல்வி என்றுமே இறுதியும் இல்லை
வெற்றிக்கும் எந்த தடையும் இல்லை
வெல்வோம் என்ற எண்ணம் இருந்தால்
தோல்வியும் கூட சாதனை ஆகும்
வெல்வோம் என்று உறுதிகொண்டால்
தோல்விகள் எல்லாம் தானாய் விலகும்
சரித்திரம் படைத்த மனதரைப்பாரு
அவர் சந்தித்த சோதனை எண்ணியும்பாரு
சோதனைகளையே சாதனையாக்கி
சாதித்து காட்டிய கதையைக் கேளு
தோற்றவர் புலம்பலை கேட்க மறுத்து
தோற்பேன் என்ற புலம்பலை நிறுத்து
வெற்றி ஒன்றையே இலக்காய் மாற்று
வெல்வேன் என்று திடமாய் ஓடு
மத்திகிரி, இரவு, 12.40, (15-9-16) 16-9-16
Song 236 Run with persistence
There is no place for defeat here
There is no use in getting defeated
If you become depressed because of defeat
There is no hope for creating history
There is none who ever get defeated
Until they accepted defeat in their mind
Defeat is not the final one
And there is no hurdle for success
If you have the determination to win
Even your defeat is also an achievement
If you have decided to get success
All defeats will disappear automatically
See those who created history
Think about the trials which they faced
Making the hurdles as a means for success
How they created history, listen to it
Refuse to listen to the lamentation of defeated ones
Stopping the lamentation that ‘I will be defeated’
Keeping success alone as your goal
Run with a determination to win.
Mathigiri, 12.40 am 15-9-16 (16-9-16)
The thin line that divides between success and defeat is how you see the glass as half empty or half full. Those who lose hope will pour out what is already in the cup and make it empty. And those who are optimistic will think and do to fill the rest of the glass to make it full.
Song 237 வேறு வழியில்லை
என்னதான் செய்தாலும்
எப்படிச் சுமந்தாலும்
இறுதியில் தன்சுமையை
சுமக்கத்தான் வேண்டும்
என்னதான் செய்வார்
எதுவரை சுமப்பார்
எல்லோர்க்கும் உள்ளதே
அவரவர் பாரம்
புரியாமல் இல்லை
புதிதான தில்லை
புவிமீது இதுகூட
தவறான தில்லை
அவர்பாரம் அழுத்த
அத்துடன் சேர்த்து
முடிந்த வரையில்
நம்பாரம் சுமப்பார்
முடியாத போது
ஏதேனும் சொல்லி
விலகியே போவார்
வழிவேறு இன்றி
புரிந்து நாமதை
ஏற்றுக் கொள்ளணும்
பொறுமையாய் பாரம்
சுமக்கப் பழகணும்
மீண்டும் வரும்போது
ஒத்துப் போகணும்
முரண்டு பிடிக்காமல்
பணிந்து நடக்கணும்
புறக்க எண்ணி
ஒதுக்கி வைத்தால்
வேறு வழியின்றி
நாமே சுமக்கணும்
மத்திகிரி, 16-9-16, மதியம் 2.05
Song 237No other alternative
Whatever we do
How much we carry
Finally at the end
We alone need to carry it
What else can others do?
How long they can carry
Each one has
Their own burden (to carry)
This is not new
Not that we cannot understand it
Nothing wrong
About it on this earth
As each one is
Burdened by their own burden
They can carry ours
As much as possible
When they cannot do any more
By giving some explanation
They will go away
As there is no alternative to this
Understanding this
We need to accept it
With much patience
Train ourselves to carry our own burden
When they come back (to help)
We should co-operate with them
Not rebelling
We should be humble enough to accept their seva
In order to reject them
If we keep them away
We alone need to carry
Without any alternative means
Mathigiri,16-9-16, 2.05 pm.
Human relationship is very delicate. Our ego plays a great role in determining not only other’s relationship with us, but also helping each other to carry several burdens in life. Due to some misunderstanding or due to other pressure in life, several times others might go away from us forcing to face our own problem. But when they come back to help us, giving up our ego we should humble enough to accept it. Otherwise, we have to pay for our own funeral.
Song 238 ஒரு விலையுண்டு
வந்தாரை வரவேற்று
செல்வோர்க்கு விடைதந்து
“வாழ்க வளமுடன்”
என்றுமே வாழ்த்துவோம்
உறவுக்கு புதிருண்டு
உறவுக்குள் பிரிவுண்டு
உறசியே வாழ்வதால்
விரிசல் அதில்லுண்டு
எண்ணத்தில் பேதம்வரும்
எரிச்சலும் கூடவரும்
அதிகமாய் வாதிட
ஆபத்தில்போய் முடியும்
சிலகால பிரிவிலே
சிந்தை தெளிவாகும்
எண்ணத்தில் கூடஒரு
எளிமை தோன்றிடும்
அடுத்தவர் உரிமையில்
தலையிடக் கூடாது
அதற்காக கடமையை
கைவிடக் கூடாது
கடமை எதுவென்று
தீர்மானம் கொண்டு
அதன்படி வாழ்ந்திட
அமைதி தானேவரும்
கடமை மறந்தாலே
எடுத்துக் கூறலாம்
கடைமை துறந்தாலே
நாமென்ன செய்யலாம்
முரண்டு பிடித்தாலே
விட்டுக் கொடுக்கணும்
முடியாது போனாலோ
விட்டு விலகணும்
திருப்பம் வரும்வரை
பொறுமை காக்கணும்
திருந்தி வரும்போது
மீண்டும் அணைக்கணும்
ஆயினும் இதற்காக
விலையும் கொடுக்கணும்
அதையும் அவரவர்
தீர்மானம் செய்யணும்
18-9-16, மத்திகிரி, மதியம் 1.45
Song 238 There is a price
Welcoming those who come
Saying good-bye to those who go away
Let us bless them
‘Live long with plenty’
There is riddle in relationship
There is separation in it
If we live with too much friction
Definitely crack will appear
Difference of opinion will come
And irritation will come along with it
If we argue too much
It will become a snare
A small separation
Will give clarity in mind
Simplicity will also arise
In our thought too
We should not interfere
In other’s right
At the same time
We should not give up our duty (towards them)
Once we know what our duty is
Decide our life accordingly
And began to live as per it
Peace will come automatically
If someone forgot their duty
We can remind them
But if someone give up their duty
What can we do?
If one becomes too much rebellious
Then we should give some space
If it reaches beyond our limit
Then we should keep away
We should keep patience
Till they come back
When they come back
We should accept them
But for this
We need to pay a cost
And each one should decide
What it is
18-9-16, Mathigiri, 1.45 pm.
Another meditation on interpresonal relationship; the friction that brings—as familiarity brings contempt; the good that a small separation brings and the cost that each one has to pay.
Song 239 239 வீர வணக்கம்
ஊரியில் நீஉன் உயிரையும் தந்தாய்
ஊரிலே நாங்களும் நலமுடன் வாழ
உதிரம் சிந்தி எம்மையும் காத்தாய்
நாங்கள் வாழ உன்னையே அழித்தாய்
உன்னை அழித்த கோழையை எண்ணி
உதிரம் என்னுள் நெருப்பாய் கொதிக்குது
நேருக்கு நேராய் போர்செய்ய துணிவில்லா
கயவரை எண்ணி என்மனம் வெறுக்குது
உனக்குள்ள உரிமை அனைத்தையும் துறந்து
உற்றம் சுற்றம் அனைத்தையும் மறந்து
கடமை என்ற கனலை ஏந்தி
களப் பலியாகிடச் சென்றாய் நீயும்
உனது பெயரை நாங்களும் அறியோம்
உனது உணர்வினை நாங்களும் புரியோம்
ஆயினும் ஒன்றை மட்டுமே அறிவோம்
அதன்பேர் தியாகம் என்றுமே சொல்வோம்
தாயகம் காக்க தன்னையே அளித்த
உன்திருவடிகளில் எம்கரம் வைத்து
உனது வீரம் வாழ்க என்று
விண்ணும் அதிர முழக்கம் செய்வோம்
வந்தே மாதரம் என்று முழங்கி
நம்தாயகம் வாழ்க என்றும் வணங்கி
நன்றியோடும் உன்னை நினைத்து
நாங்கள் தொடர்வோம் உனது பணியை
மத்திகிரி, 19-9-16, மாலை 4.15
Song 239 Salute to Uri MARTYERS
At Uri you gave your life
So that we can live safely in our place
By shedding your blood
You gave yourself for us to live
Thinking about those cowards who destroyed you
The blood is boiling within us like fire
If I think about those scoundrels who do not have courage to fight face to face
I hate them deep within my heart
By renouncing all your rights
Forgetting your own kith and kin
Holding the fire of your dharma (duty as soldiers)
You went to offer yourself as a sacrifice
We don’t know your (individual) names
We cannot understand your feelings
But we know one thing for sure
And we call it ‘tyag’ (sacrifice)
By keeping our hands on your feet
Who gave your life to protect our mother land?
We will shout so that the sky will vibrate
‘Hail to your bravery’.
Proclaiming ‘Vandemataram’
And saluting to our mother land
Remembering you with gratitude
We will continue your dharma
Mathigiri, 19-9-16, 4.15
As I watched the DD News, they showed the pictures of the Uri martyrs and broadcasted the martyr song in Hindi. Then I too raised my hand saluted them with tears. Then thinking their sacrifice, immediately I wrote this song to the Uri martyrs and all those soldiers who are guarding our borders.
Song 240 இதுமுறையா
நிறைவோடு வாழலாம்
நித்தமும் உலகிலே
நேசமாய்ப் பழகலாம்
மனதார வாழ்விலே
ஆறுதல் வார்த்தைக்கு
ஏங்குறார் பலபேர்
அதைத்தந்து தேற்றலாம்
அவரையும் வாழ்விலே
வீணான வம்புகள்
எத்தனை பேசுறோம்
வேண்டாத வார்த்தைகள்
எத்தனை சொலுறோம்
நல்ல வார்த்தைகள்
சிலவற்றை சொல்லிட
நாவுக்கு என்ன
தெம்புமா இல்லை
காசு கொடுத்து
கடையிலே வாங்கிட
ஆறுதல் ஒன்றும்
அங்கே விற்கலை
சில வார்த்தையாலே
பிறர்பாரம் இறக்க
முடிந்திடும் போது
மறுப்பதும் முறையோ
மத்திகிரி, 20-9-16 (21-9-16) இரவு, 12.30
Song 240 Is it correct?
We can live holistically
On this earth each day
And we can have fellowship
With true intension in life
Many are longing
For some words of comfort
We can share and
Give comfort to them
How many times
We talk unnecessarily about others
And we utter many
Unnecessary words about them
Does the tongue
Not have the strength
To utter few
Good words
Comforting words
Are not for sale
And we cannot
Purchase from a shop
When we can
Unload the burden of others
By few comforting words
It is correct not to do?
Mathigiri, 20-9-16 (21-9-16) 12.30 am.
The best gift that we human have is to share with each other and step in others life to give some comfort by listening to them and giving some comfortable words. Of course, our words won’t bring any solution to their immediate problem, but it will bring some comfort to their mind which will help them to think properly to search for proper solution to their problems.
Leave a Reply