Secular Song 241 விளங்காத விளக்கம்
தன் தேவைக்காக துணை ஒன்று தேடினார்
அவருடன் தன்னை இணைத்து வாழ்ந்தார்
இடையில் எத்தனை இடையூறு வந்துமே
இருவரும் சேர்ந்து வென்று காட்டினார்
இதனிடை அகம் மெல்ல தலையை தூக்கிட
அதற்கு இடம் கொடுக்க இருவரும் தோற்றார்
இது தெரியாமல் இருவரும் இல்லை
எது சரி-தவறென புரியாமல் இல்லை
இருவருக்கும் இடையில் பிறரும் குறுக்கிட
இருவரும் தோற்பார் ஏனிது புரியலை
உறவு என்றாலே நெருக்கடி வந்திடும்
உரசிப் பார்த்தாலே சூடுமே ஏறிடும்
ஆயினும் மற்ற உறவினைப் போலவே
ஆணும்-பெண்ணும் இணைந்து வாழலே
அதை அறிந்து கொண்டபின் இருவரும்
பிறரைப் போலவே வாழவும் இல்லை
புனிதம் என்று போற்றவும் வேண்டாம்
பொழுது போக்கென நினைக்கவும் வேண்டாம்
இருவரும் இணைந்து வாழ்வதில் கூட
எவருமே புரியாத ரகசியம் உள்ளது
அதை அறிந்தவர் யாரிங்கும் இல்லை
அறிந்தாலும் விளக்கிட வார்த்தையும் இல்லை
விளங்கிக் கொண்ட பின் வாழ்வைத் தொடங்கலை
வாழ்வை விளங்கிட விளக்கமும் இல்லை
விளக்கம் இல்லாமல் விளங்கிக் கொள்ளணும்
ஒருவர் பிறருக்கு விளக்கமாய் இருக்கணும்
இந்த உண்மையை விளங்கிக் கொண்டபின்
வாழ்க்கையை வாழ்ந்து வென்றுமே காட்டணும்
மத்திகிரி, 21-9-16, மதியம் 2.50
Song 241 An unclear understanding
For their need they sought a life partner
And lived joining together
Though much trouble came in their life
Remaining together they overcame them
Meanwhile when the ‘ego’ began to raise its head slowly
Giving room for that both are are defeated
They both know about it
They also know what is right and what is wrong
If they allow a third person between them
They both will be defeated; why can’t they understand this?
Pressure will come in relationship
As familiarly will breed contempt
Wife and husband do not live
Like all other relationships
Once they understand that
They cannot live like others
They need not glorify it a holy one
And should not think as a recreation
There is a hidden secret in that relationship
Which others cannot understand
Many do not understand this truth
Even if they understand it, there are no proper words to explain it
They never started their life only after clear understanding
And there is no explanation to explain about life to understand it
They should understand it without having any explanation
And each should be the explanation for the other
Once they understood this truth
They should be victorious by living the life (together)
Mathgiri, 21-9-16, 2.50 pm.
As I watched a program about the stress and problems in life between the husband and wife (note that I say between ‘husband and wife’) and those who are successful in it and those who are defeated, I wrote this song. Though I am not qualified to write about the relationship between wife and husband (feminist please note that I say between ‘wife and husband’), the general principle in life is that we cannot start any life only after having any clear understanding about it (be it a life as a Single, Sannyasi etc.). Once we begin to live that life, the understanding will come slowly which cannot be explained unless communicated through our lives.
Song 242 இத்தோடு நிறுத்தினேன்
எப்படிச் சொல்வது என்பதும் தெரியலை
எதற்குச் சொல்கிறேன் என்பதும் புரியலை
என் மன ஓட்டத்தை எழுத்தில் வடிக்க
எப்படி முயன்றாலும் என்னால முடியல
தேவை இல்லாமல் தேடுறேன் எதையோ
அதுவும் தேவையா என்பதை அறியாமல்
இல்லாத தேவையை அறியாமல் தேடியே
இறுதி வரையிலும் கிடைக்காமல் வாடுறேன்
எல்லோரும் இதையே செய்கிறாரா என்று
எண்ணியே அவரிடம் சென்று கேட்டேன்
ஏதுமே புரியலை என்று சொன்னார்
என் கேள்வியே சரியில்ல என்று சொன்னார்
கேள்விகள் கேட்பதை நிறுத்தச் சொன்னார்
கூடவே அவருடன் உழைக்கச் சொன்னார்
அதன்பின் நேரம் இருக்கும் என்றால்
ஆராய்ச்சி பண்ணலாம் நாமும் என்றார்
பிறரிடம் கேட்பதில் பயனும் இல்லை
என்பதை நானுமே உணர்ந்து கொண்டு
எவரிடம் கேட்கலாம் என்று தேடி
இறுதியாய் என்னிடம் மீண்டும் வந்தேன்
சொல்லவே தெரியாத என் நிலையை
எப்படிச் சொன்னாலும் பயனும் இல்லை
என்பதை இறுதியில் உணர்ந்து கொண்டேன்
அதனால் இத்தோடு நிறுத்திக் கொண்டேன்
மத்திகிரி, 28-9-16, (29-9-16) இரவு 12.10
Song 242 I stopped here
I don’t know how to utter
And I don’t know why I am telling it
How much I try, I cannot express
My thoughts in words
Unnecessarily I am searching for something
Not knowing whether it is needed or not
Searching without knowing the un-needed thing
I am troubled till the end as I cannot find it out
Do all do the same thing, to know that?
I went and asked them about it
They say that my question is not clear
And they cannot understand it
They asked me to stop asking questions
And join them to toil along with them
If we have some spare time left after that
We will analyse about it, they said
I understood this finally that
There is no point of asking others about it
Searching for someone to whom I can ask
Finally, I came to myself
As there is no use, however I tell
About the un-utterable condition of mine
This I understood at the end
Therefore, I stopped here.
Mathigiri, 28-9-16, (29-9-16) 12.10 am.
As I often say, analysing life too much will end up paralysing the mind. This song reflects this condition of mine.
243 குறைகூறி வாழ்கிறேன்
யாரோடும் எனக்கில்லை போராட்டம்
என்னோடு ஆடுறேன் சதிராட்டம்
எதிலுமே குறை காணும் மனம் கொண்டேன்
ஏதேனும் குறை சொல்லும் குணம் கொண்டேன்
வேண்டாத ஆயிரம் கற்பனைகள்
அத்துடன் விபரீத எண்ணங்கள்
முன்கோபம் இவற்றோடு சேர்ந்து கொள்ள
முடமாகிப் போனது என்னுள்ளம்
வேண்டாத பேச்சுக்கள் பேசுகிறேன்
அத்துடன் வீண்வாதம் செய்கிறேன்
எவரேனும் சற்றேனும் புத்தி சொன்னால்
எரிச்சலும் அவர்மீது கொள்கிறேன்
இதுகூட வழக்கமாய் போனதனால்
அதைக்கூட அலட்சியம் செய்கிறேன்
அதற்கான விலையையும் நானேதந்து
அனுதினம் என்னுள்ளே வாடுறேன்
என்றைக்கு விடுதலை காண்பேனோ
என்றுதான் உள்ளாக ஏங்குகிறேன்
எவரேனும் இதற்கு உதவ வேண்டி
ஏங்கியே அவரைத் தேடுகிறேன்
தேடிய நபரும் வந்த பின்னே
கூறிய பதிலையும் ஏற்கவில்லை
ஆகவே போராட்டம் ஓயவில்லை
அவற்றோடு வாழவும் முடியவில்லை
இறுதி வரையில் இருந்திடும்
என்றும் கூறிஅவர் சென்றுவிட்டார்
அதிலும் குறைகள் சொல்லிக்கொண்டு
அன்றாடம் போலவே வாழுகிறேன்
மத்திகிரி, 3-10-16, மாலை, 5.30
Song 243 I live making several complaints
I don’t have any contention with anyone
I play the game against myself
I have fault finding nature within me
And I have the character of saying something against others
Having many thousands of unnecessary imaginations
Added with negative thoughts to join them
Combining with short temper
My heart became crippled
I say many unnecessary words
Added to that I do unnecessary argument
If some others come to advise me
I become upset with them also
As this become a habit
I began to ignore it
Paying a heavy price for that
I get depressed within me each day
When I will get deliverance from this
I am long for that
And seeking someone to help for this
I am searching them with much longing
Though the one who came seeking me
I didn’t accept the answer that he gave
Therefore, the struggle never comes to an end
And I cannot live with it anymore
‘Till the end it will be there’
By saying this he also left me
Even finding fault in (that advice) also
I live as usual again
Mathigiri, 3-10-16, 5.30
I struggle a lot to overcome my nature of fault finding and too many negative thoughts based on mere imagination. And when I seek others’ help, I refuse to accept their advice and begin to find fault in it also. So, leaving me to live with my nature, as they left, now I live as usual struggling within me each day.
Song 244 நீ யார்-நான் யார்?
என்னிடம் ஆயிரம் கேள்விகள் இருக்கு
எவரிடம் அவற்றுக்கு விடைகளும் இருக்கு
ஆயினும் கேள்விகள் தெளிவாக இல்லை
அதனால் பதில்களும் புரிவதாய் இல்லை
ஆயினும் உன்னை விடுவதாய் இல்லை
உன்னிடம் சொல்லாமல் இருப்பதும் இல்லை
ஏற்பதும் மறுப்பதும் இனி உன் பாடு
எனது நிலையை நீயும் எண்ணிப்பாரு
எத்தனை காலம் மனதுக்குள் வைப்பேன்
அவற்றின் பாரம் நானே சுமப்பேன்
கூடவே நீயும் வாழ்வது எதற்கு
உனக்கும் இதிலே பங்கும் இருக்கு
தானே உலகில் வந்திட வில்லை
தனித்தே நானும் வாழவும் இல்லை
எத்தனையோ முறை நீ கேள்வி ஆனாய்
என்னவோ பலவித பதில்களைத் தந்தாய்
அவைகளை நீயே தொகுக்கவும் சொன்னாய்
ஆராய்ந்து மீண்டும் பார்க்கவும் சொன்னாய்
அதையே நானும் செய்ததினாலே
இத்தனை கேள்விகள் எழும்பியும் இருக்கு
இப்போ என் நிலை புரியுதா உனக்கு
இதற்கு பதிலும் சொல் நீ எனக்கு
ஆயினும் “நீயார்’ என்பது தெரியலை
அதை முதலில் நீ சொல்லிடு எனக்கு
பிறகு நானும் கேள்விகள் கேட்கிறேன்
நீ தரும் பதிலை யோசித்துப் பார்க்கிறேன்
நீ யார், நான் யார் என்பதை அறிந்தபின்
கேள்வி-பதிலை ஆராய்ந்து பார்க்கிறேன்
மத்திகிரி, 3-10-16, இரவு, 11.10
Song 244 Who are you and Who am I?
I have thousands of questions with me
And who has the answer for them all
But the questions are not very clear
Therefore, the answer is not understandable
Yet I am not going to let you go (easily)
I am not going to keep quiet by not telling them to you
Listening or rejecting is your prerogative
And kindly think about my situation
How long I can keep them within me
How long I can carry the burden
Why do you live with me then?
Therefore, you too have a share in it
I never came all alone to this earth
I never live alone on myself
Many times, you become my question
And somehow you gave so many answers
You alone asked me to compile them
Again, began to analyse them
As I have done that alone
All these questions again came to me
Now can you understand my condition?
First you give me answer to this to me
But I don’t know ‘who’ you are
First you tell me that to me
Then let me ask my questions to you
And let me think the answers which you will give
Once I know who am I and who you are
I will analyse the questions and answers
Mathigiri, 3-10-16, 11.10 pm
I am a bundle of confusion. This I know clearly. Thinking is not my problem, but I try to get answers for them. As I raise my questions and give my own answers to myself, there is no way to escape from this till the end of my life.
Song 245 கரையேற்றினார்
என்னவோ ஒரு போராட்டம்
என்நாளும் இவ்வாழ்க்கையிலே
அதனிடையே சில நேரம்
கிடைத்திடும் சிறு ஆறுதலே
அதையும் தர வருவோரே
ஆவார் இறைவன் வாழ்வினிலே
துடுப்பாகி நம் படகினையே
சேர்ப்பார் அவரும் கரையினிலே
துடுப்பை இழந்து படகினிலே
தத்தளிக்கும் பல வேளையிலே
அவரது படகை ஓட்டிவந்தார்
அதிலே நம்மை ஏற்றிக்கொண்டார்
இவரது துணையும் இல்லாமல்
இதுவரை வாழ்வும் ஓடவில்லை
இடையில் சிறுசிறு உரசல்கள்
இல்லாமல் நாம் வாழவில்லை
இறுதி வரையில் இவையிருக்கும்
என்ற உண்மையை ஏற்றுக்கொள்வேம்
இவற்றின் இடையே போராடி
வாழ்வை வாழ்ந்து முடித்திடுவோம்
மத்திகிரி, 3-10-16, இரவு 11.30
Song 245 Helped me to reach the shore
There are always struggles
In this life each day
Amidst them some time
We get some comfort
Those who give it to us
Become God in our lives
Becoming an ore
They help us to reach the shore
While we struggle losing the ore
Amidst the river
They brought their boat
And helped us to board in it
Without their help
Our life never moved so far
And amidst this
Friction also was there
Till the end it (friction) will be there
Let us accept this truth
And living with it
Let us complete our race
Mathigiri, 3-10-16, 11.30
The riddle in life is that without others’ help we cannot move forward even for a single day. At the same time friction is inevitable in it. Accepting this reality is the only means to complete the race of life.
Leave a Reply