Secular Song 251 கேட்க வேண்டும்
எத்தனை சொன்னாலும் கேட்க மாட்டேன்
எவர் சொன்னாலும் ஏற்க மாட்டேன்
என்ற நிலைக்கு வந்தவர்க்கு
ஏதுமே சொல்வதில் பயனும் இல்லை
தன்னையே முற்றாக புரிந்து கொண்டு
தரணியில் எவருமே வாழ்வதில்லை
பிறரைப் பற்றி புரிந்து கொள்ள
போதிய சந்தர்ப்பம் கிடைப்பதில்லை
அரை குறையாக புரிந்து கொண்டு
அதன்படி தீர்மானம் செய்து கொண்டு
இடையினில் தன்நிலை மாற்றிக் கொண்டு
வாழ்வதில் போராட்டம் நிறைய உண்டு
தடுமாறும் நேரத்தில் தாங்கிடவும்
தவரை எடுத்துக் கூறிடவும்
சரியான நண்பர்கள் இல்லாவிட்டால்
சடுதியில் தடுமாறி வீழ்ந்திடுவார்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் என (குறள் 448)
சரியாக வள்ளுவர் சொல்லி வைத்தார்
நாம் திருந்திட புத்தியும் கூறி வைத்தார்
“எல்லாம் எனக்குத் தெரியுமென”
எண்ணியே ஏமாந்தோர் எத்தனை பேர்
அவர்கள் கூட்டத்தில் நாமும் சேராமலே
அடுத்தவர் சொல்வதை கேட்க வேண்டும்
மத்திகிரி, 18-10-16, இரவு, 11.10
Secular Song 251 Should listen others
I won’t listen anything
I won’t accept whoever tells it
Once someone come to this conclusion
There is no point of giving advice to them
Nobody can live on this earth
With clear understanding about oneself
We don’t have enough opportunity
To understand about others too
Not understanding properly
And coming to a conclusion based on it
Then changing one’s stand accordingly
Creates lots of struggle in such life
To uphold us when we stumble
And to point out our mistakes
If we don’t have proper friends
They will fall down quickly
Thiruvalluvar clearly told about this
And gave proper advice that:
“A guardless sovereign with none to caution
Even without foes will come to ruin”
How many were lost thinking that:
“I know everything”
Not joining with that crowd
We should listen to others
Mathirigi, 18-10-16, 11.10 pm.
Blessed is the person who not only realizes his limitations but is willing to listen to others advice when he cannot think and act properly. Thankfully we don’t know everything and we cannot understand everything. To help us to understand those things which we cannot understand we need others’ counsel. Blessed is the person who listen other’s counsel.
Secular Song 252. பாரமாய் இல்லை
என் மீது கோபித்து என்ன செய்ய
என் உள்ளம் தன்னை அறியாமலே
என்ன பதில் நான் சொல்லிடுவேன்
ஏதும் அதைப்பற்றி அறியாமலே
இதுவரை என்னையே கோபித்தோரை
எண்ணினால் எண்களும் போதாது
எல்லோருக்கும் பதில் சொல்லிடவும்
எனக்கும் தெம்பும் கிடையாது
உற்றோரும் பெற்றோரும் கோபித்தாரே
உடன்பிறந்தோர் கோபித்தாரே
நண்பரும் அன்பரும் கோபித்தாரே
அட நான் கூட என்னையே கோபித்தேனே
இத்தனை பேருடன் சேர்ந்து கொண்டு
இறைவனும் என்னை கோபித்தானே
இதற்கும் விடையை அவனுமே
எனக்கும் சொல்லித் தந்தானே
“எவர்மீதோ உள்ள கோபத்தை
உன் மீது இறக்கி வைத்துவிட்டார்
அதனை ஏற்று என்போலே
அமைதி காப்பாய் நீ” என்றான்
இதற்கு மேலே செய்திடவே
எளிய வழியும் எனக்கில்லை
எத்தனையோ பாரம் சுமக்கும் போது
இதுவும் பாரமாய் தெரியவில்லை
மத்திகிரி, 24-10-16, மாலை 5.45
Secular Song 252. Not a burden
What is the point of becoming upset with me?
Not knowing heart
What kind of answer that I could give
As they don’t know anything about it
If I began to count all those become upset with me
Even numbers are not enough for that
I don’t have the strength
To give answer to all
My parents and relatives became upset with me
And even my siblings also became upset
Even my friends and dear ones also become upset
Finally I too become upset with me
Joint with them all
Even God too become upset with me
And He alone even gave
The answer for that
“They unloaded their anger
With someone upon you
And bearing it like me
You too keep quiet” He said
I don’t have any other simple means
For me to follow, other than this.
As I am already bearing so many burdens
This one never became an extra burden
Mathigiri, 24-10-16, 5.45 pm.
If anyone becomes upset with me for any reason, I understand it and agree with them. As I often fail to communicate my thoughts properly, unable to understand my true intentions, when they become upset with me, it never becomes an extra burden, as I faced so many people who became upset with me in the past, including God. As He alone gave the formula to bear it, I followed it.
Secular Song 253 இல்லாத அதிகாரம்
எவ்வித அதிகாரம் எனக்கு வேண்டாம்
எவர் மீதும் ஆளுகை செய்ய வேண்டாம்
விட்டால் போதும் நானும் ஓட தயார்
விடமாட்டோம் என்றாலும் உழைக்கத் தயார்
இல்லாத அதிகாரம் எப்போது கிடைத்தது
என் சொல் கேட்டார் எவரும் கிடையாது
சூடுபட்ட பூனை போல தடுமாறி நிற்கையில்
இது என்ன புது கேள்வி இப்போது வந்தது
கொடுக்காத ஒன்றுக்கு கணக்குமே கேட்கிறார்
தந்தாலும் அதையே ஏற்கவும் மறுக்கிறார்
வேண்டாத கேள்விகள் ஆயிரம் கேட்கிறார்
விடை தந்தால் ஏதுமே சரியில்லை என்கிறார்
சிரிப்பதா அழுவதா எனக்கு தெரியலை
ஏற்பதா மறுப்பதா என்பதும் புரியலை
இரு கையை பின்புறம் கட்டியும் விட்டு
நீரிலே தள்ளியே நீந்தவும் சொல்கிறார்
உரலில் தலையை விட்டுக் கொண்டபின்
உலக்கைக்கு பயந்தால் ஒன்றுக்கும் ஆகாது
அரிசியோ அவலோ எதுவான போதிலும்
இறுதி வரையில் தப்பிக்க முடியாது
எஞ்சிய தவிடு போல் என் கதி ஆச்சு
ஏதுக்கும் உதவாமல் குப்பைக்குப் போச்சு
மக்கினால் எருவாகும் என்பதை எண்ணி
மகிழ்வோடு வீழ்ந்தேனே உரலுக்குள் மீண்டும்
மத்திகிரி, 26-10-16, மதியம் 2.30
Secular Song 253. Non-existing authority
I don’t need any kind of authority
I don’t want to lord over on any one
I am ready to run away, if I am allowed to do so
And if not, then I am ready to serve
When did I get the authority which is not even exists
There is none who ever listened to me
When my situation become like that cat which drank the hot milk
What kind of questions is this that came now?
They ask account for something which is never given
Even if I give they refuse to accept it
They ask thousands of unnecessary questions
And if give answer, they say nothing is correct
I don’t know either to laugh or weep
I don’t know whether to accept it or reject
Tying both my hands at the back
They push me in the water and ask me to swim
Once we put our head in the pounding stone
There is no use of fearing about the poundings
Either rice or rice-flake, whichever might come out?
There is no way to escape till the end
My condition become like the left over husk
And it went to the dust bin without any use
But thinking that if is decomposed will become manure
I again fell back in the pounding stone happily
Mathiriri, 26-10-16, 2.30
Authority is never demanded but earned. But in life some situation will come where we cannot even claim, even if we earn it. Personally, in my life I never demanded any authority as I never felt that I am qualified to earn it. But when I am questioned about non-existent authority, it makes me laugh thinking about my own situation and this is the context of this song.
Secular Song 254 கேள்வி மறைந்தது
கேள்விக் குறியாகிப் போனதால்
சில குழப்பங்கள் இடையே வந்தது
யாரிடம் கேட்பது தெரியலை
எல்லோரும் என்னைப்போல் இருக்கையில்
தெளிவாக கேட்கவும் சொன்னார்கள்
தெரிந்ததை எனக்கு சொன்னார்கள்
சொன்னதை தெளிவாக்கிக் கொண்டபின்
புதுப்புது கேள்விகள் பிறந்ததே
கேட்பதை கை விடு என்றார்கள்
கேட்கவே தெரியாது போனதால்
யோசித்துப் பயனில்லை என்றார்கள்
ஏனென்றால் புரியாது என்றார்கள்
கேள்விக்குப் பதில் கேள்விதான்
கேட்பதை விட்டவன் ஞானிதான்
பதிலைப் பெற்றவன் மூடன்தான்
மெளனம் காத்தவன் தப்பித்தான்
இதனைப் புரிந்திடு என்றார்கள்
என் மீது அன்பு கொண்டவர்கள்
அப்போது எனக்குப் புரிந்தது
அதன்பின் கேள்வியே மறைந்தது
மத்திகிரி, 27-10-16, இரவு 11.10
Secular Song 254 Question disappeared
As I become a question
Some confusion came in between
I don’t know to whom I shall ask
As all are like me alone
They told me to ask clearly
And they shared what they know
Once I understood what they shared
New questions began to arise
Then they said: “better stop asking questions
As you don’t know how to ask
There is no point of think about it
Because you won’t understand
Question alone is the answer for question
Those who give up asking questions are the wise ones
Those who received answers are the fools
And those who kept quiet fortunately escaped.”
“First you understand this”, they said
As they really loved me.
Then I understood
After that all the questions disappeared.
Mathigiri, 27-10-16, 11.10
This is a repeated theme in my life. I wrote previously that ‘when question itself becomes the answer; answer becomes an unnecessary one’. Also that, ‘one thing which we should not ask is: meaningless question and answer for that’ (from a film ‘Thiruvilayadal,). As the same process continued, I wrote the same kind of song one more time. The moral of the song is: so don’t write any more songs like this.
Secular Song 255 ஓய்வு பெற்றேன்
என்ன என்னானந்தம்
என்ன என்னானந்தம்
ஓய்வு பெற்றேன்
விருப்பம் போல
இனிமேல் நானே
வாழ்ந்திருப் பேனே
தூங்குவேன் விழிப்பேன்
சோம்பலாய் இருப்பேன்
சுற்றித் திரிவேனே
எனக்குப் பிடித்த
நேரம் மீண்டும்
படுத்துக் கொள்வேன்
காசு பணம்
கணக்கு வழக்கு
கவலைப் படேனே
கையில் கிடைப்பதில்
மகிழ்வு கொண்டு
காலம் கழிப்பேன்
எனக்குப் பிடித்த
எதையும் படித்து
எழுதிப் பார்ப்பேனே
பிறருக்காக வேண்டி
அவற்றைக் கூட
செய்யாதிருப்பேனே
தாங்கிப் பிடித்த
காலமெல்லாம்
முடிஞ்சு போச்சு
மீதமுள்ள காலம் கூட
எனது ஆச்சுதே
நானும்கூட
இதையும் பார்க்க
ஆயுள் கிடைத்ததே
அதையும்கூட
இருந்து பார்க்க
தெம்பு இருக்குதே
முதுமை கூட
ஒருவிதத்தில்
சுகமாய் இருக்குது
அதையும்கூட
நினைச்சு பார்க்க
மனசே துள்ளுது
தேகம் கூட
தளர்ந்து போனால்
தளர்ந்து போகட்டும்
இளமையாக
மனது மட்டும்
என்றும் இருக்கட்டும்
என்னைப் போல
கொடுத்துவச்சவன்
எவனும் இல்லையே
இதற்கு நீயும்
எரிச்சப்பட்டு
பயனும் இல்லையே
மத்திகிரி, 28-10-16 மாலை, 7.45
Secular Song 255 I am retired
What a joy
What a joy
I am retired
And I will
Live as I like
I will sleep and awake (as I like)
And will remain as a lazy person
And wander as I like
And when I wish
Again I will go to bed
I won’t worry about
Accounts (and auditing)
And whatever is
Available on my hand
I will spend my life
With much joy
I will read and write
Whatever I like
At the same time
I won’t do it
For others sake
That time is gone
Where I walked extra mile
And rest of my life
Belongs to me
I too got life (as I am not yet dead)
To see this retirement
And I also have
Energy to see that
In one way
The old age too
Is very joyful
And when I think about it
I am rejoicing
If the body become weak
Let it be
But let my heart alone
Remain youthful
All the time
There is none
As a blessed
Person like me
And there is
Not point of envying
Me for this
Mathigiri, 28-10-16 7.45 pm.
Retirement is a joyful event in life, particularly for a person who was busy with so many activities in life. Imagining such a life I wrote this song.
Leave a Reply