Secular Song 276 விடையில்லா கேள்விகள்
எளிதாக கேள்விகள்
எவரையும் கேட்கலாம்
ஏனென்றால் அவருக்கு
விடை தேவை இல்லை
எதற்காக கேட்கிறோம்
என்பது புரியார்க்கு
விடையேதும் நாம்கூறத்
தேவையும் இல்லை
தன்நிலை ஒன்றையே
முன்னே வைப்போருக்கு
எவ்வித விளக்கமும்
ஏற்ப்பதும் இல்லை
அகம் தலைக்கேறி
ஆர்ப்பாட்டம் செய்ய
அடுத்தவர் நிலையும்
புரிவதே இல்லை
அறியாமை என்று
நாமிதை எண்ணவோ
அகந்தையை இறக்கிட
சாட்டையை எடுக்கவோ
இரண்டுமே வேண்டாம்
என்று எண்ணி
சற்று ஒதுங்கி
நிற்பது முறையோ
இதற்கொரு முடிவு
என்னிடம் இல்லை
ஏனென்றால் என்னிடம்
பதிலேதும் இல்லை
சொல்லியே பார்த்தேன்
திருந்த வில்லை
சாட்டைக்கும் அவரும்
சரிப்பட்டு வரவில்லை
ஒதுங்கியே போனால்
என்னை விடவில்லை
என்ன செய்வேனோ
புரியவும் இல்லை
முடிந்தால் இதற்கொரு
விடையை தாருங்கள்
என் மீது சற்றே
இரக்கம் காட்டுங்கள்
குருகுலம், 27-12-16, மதியம் 3.10
Secular Song 276 Give me some advice
Others can easily
Question anyone
Because they
Don’t need any answer
And we need not
Respond to them
As they don’t know
Why they are asking
Those who upholds
Only their own views
Other’s explanations
Are not acceptable
Once their ego
Lord over them
They cannot understand
Others’ position
Should we treat this?
As Ignorance
Or should we take the whip
To correct them
Thinking that
Both is not required
Should we keep it?
Some distance away from them
I don’t have any
Final response with me
Because I don’t have
Any answer for this
Though I try to advise them
They never repent
They never yielded
Even to my whipping
Though I want to keep away
They don’t allow me to do that
And what should I do now
I don’t understand
If possible
Give some answer to this
Show some kind of
Mercy towards me
Gurukulam, 27-12-16, 3.10 pm.
When someone accepts moral responsibility then it comes with some authority with it. For example, when a father accepts his moral responsibility as a father to take care of his children, automatically he gets some kind of authority to discipline his children when it is required. But if his authority alone is questioned, never recognizing the moral responsibility which he took, then no home can survive for long. This is true in every area of life. Of course, absolute power and authority is dangerous. But not recognizing the authority which comes along with any moral responsibility no human institution can function properly. When others only question authority then in such a scenario I don’t have an answer to them or don’t know how to tackle such a situation.
Secular Song 277 நடித்து முடிக்கணும்
இந்த நாடக மேடையிலே
எழுதி முடிக்கா கதையினிலே
அவரவர் வேடம் வரும்போது
அதையும் நடித்து முடிக்கணுமே
எத்தனை சிறப்பாய் இருந்தாலும்
அடுத்தவர் பாத்திரம் நமக்கில்லை
அதையே நாமும் நினைத்திருந்தால்
நம்மால் நடிக்க முடியவில்லை
நமது நேரம் வரும்போது
நமது வசனத்தை நாம் படித்து
சிறப்பாய் நடிக்க முயன்றிடணும்
சிந்தையில் இதையே வைத்திடணும்
அடுத்தவர் பாத்திரம் பிடித்தாலும்
இயக்குநர் அதனைத் தரமாட்டார்
அடமும் நாமும் பிடித்தாலும்
நம்மையே முடிவில் நீக்கிடுவார்
பாத்திரம் எதுவாய் ஆனாலும்
பாங்காய் அதனைப் புரிந்து கொண்டு
சிறப்பாய் நாமும் நடித்துவிட்டால்
சிறந்த பரிசைப் பெற்றிடலாம்
இதனை நீயும் புரிந்து கொண்டு
உனது எல்லையை தெரிந்து கொண்டு
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி
வாழ்வில் வெற்றி பெற்று விடு
குருகுலம், 30-12-16, காலை 6.45
Secular Song 277 We should complete our role
In this drama
Which has not yet been written completely?
When each one gets her role
She should complete her acting
How much others character are better
They are not for us
If we think only about it
We cannot act our role properly
When our times come
Uttering our dialogue
We should try to act our best
And we should only think about this
Though we like others’ role
The director won’t assign it to us
If we demand it with much adamantly
He might even remove from our role
Whichever might be our role?
Clearly understanding it
If we act properly
We will get our prize
Realizing this
And knowing your limitation
Using the given opportunity
Try to get success in life
Gurukulam, 30-12-16, 6.45 am.
The neighbour’s garden always looks green and beautiful; how much we might have a better garden of our own. But in life there is no point in comparison with other’s roles in our lives. If we think about other’s roles we cannot do our part properly. And the only secret for success is to do our part properly—however it looks small in our view.
Secular Song 278 ஆனந்த தொல்லை
மூக்கு இருக்கின்ற வரையினிலே
சளியும் சற்றும் வற்றாது
நாக்கு இருக்கின்ற வரையினிலே
பேச்சுக்கு ஓய்வும் கிடைக்காது
மனது இருக்கின்ற வரையினிலே
மனதின் போராட்டம் ஓயாது
மனிதர் இணைந்து வாழ்கையிலே
பிணக்குகள் சற்றும் குறையாது
தொல்லைகள் என்று வரும்போது
அவற்றை சரியாய் ஆராய்ந்து
விடையும் அவற்றுக்குக் கண்டபின்னே
அவற்றையே சுகமாய் எண்ணிவிடு
எத்தனை விடைகள் கிடைத்தாலும்
எல்லாம் சரியாய் அமையாது
சரியாய் அமைந்த விடைகளையும்
முழுதாய்க் கைக்கொள்ள முடியாது
தொல்லையை சுகமாய் எண்ணிவிட்டால்
தொல்லைக்கே தொல்லை கொடுத்திடலாம்
அதன்பின் தொல்லைகள் எதிர்பார்த்து
ஆனந்தமாக நாம் வாழ்ந்திடலாம்
1-1-17, இரயிலில், ஹீலேலஹள்ளி to Hosur, மாலை, 5.10
Secular Song 278 Joyful trouble
As long as there is a nose
Getting cold (running nose) cannot be stopped
As long as we have tongue
There is no holiday for talking
As long as we have a heart
Struggle won’t come to an end
As long as we live together
There will be always friction in life
When troubles are coming
Analyse them properly
Once you found the answer for them
Then began to enjoy even those troubles
How many answers you might get
All won’t fit neatly as the best solution
Even those solutions which are very suitable
We cannot implement them all completely
Once you began to enjoy the troubles themselves
Then you can give trouble to the troubles
Then waiting for more trouble
We can live happily
1-1-17, in the train between Hilelage to Hosur, 5.10 pm.
There is a Tamil proverb: as long as there is a nose, we cannot escape from getting cold. This is true also in every human relationship. And my favourite solution is: When troubles are inevitable, then begin to enjoy. Though they will initially bother, once we begin to enjoy them, instead of becoming burden they will become a time of joyful moments in life. When in a relationship others begin to give trouble the best way to handle it is to convey the message to them that you are even enjoying their pestering. Once they realize that their pestering instead of bothering you becomes an opportunity to enjoy, they may even stop that. One time when I was living in North India, one person often came to see me to kill his time by talking about all kinds of politics. After a few days, when he came, I used to say, ‘just you came at the right time. Give me a hand in cleaning these books’. This I repeated every alternative day to extract some work from him. Then he realized that instead of killing his time, he has to work more with me. Then he stopped even coming.
So, analyse the problem; found the solution and began to enjoy the problem.
Secular Song 279 பயனில்லை
இழந்து பெற்றால்தான்
இனிமையும் புரியும்
இல்லாதவன் பெற்றால்
அருமை தெரியும்
பசித்தவன் அறிவான்
உணவின் அருமை
இழந்தவன் அறிவான்
இழந்ததன் உயர்வை
உறவின் அருமை
நெருக்கத்தில் தெரியாது
தனித்து வாழ்ந்தால்
உறவும் புரியாது
சிறிது பிரிந்தால்
உறவும் புரியும்
சேரும் போது
தனிமை விலகும்
சேர்வதும் பிரிவதும்
தவிர்க்க இயலாது
சேர்ந்தவை எல்லாம்
பிரியாமல் இருக்காது
பிரிந்தவை சேர்ந்திட
தடையேதும் கிடையாது
ஆயினும் பிரிவை
தவிர்க்க இயலாது
ஆயினும் இவற்றை
தீர்மானம் செய்வது
யாரென்ற கேள்விக்கு
விடையுமே கிடையாது
மனித எத்தனம்
எதுவாக இருந்தாலும்
மனிதரால் மட்டுமே
இதைச் செய்ய முடியாது
இயற்கையின் நியதி
இதுவென சொல்வதா
இறைவனே வகுத்தான்
என்றுமே ஏற்பதா
எதுவான போதும்
வருவதை ஏற்று
வாழ்வது மட்டுமே
முறையெனச் சொல்வதா
இந்த கேள்விக்கு
விடையென்ன சொல்ல
இதற்குமேல் வாதிட்டுப்
பயனேது மென்ன
பிறரின் மனதை
அறியாத போது
பதிலொன்று தேடியே
பயனுமே என்ன?
2-1-17, மத்திகிரி, இரவு, 11.10
Secular Song 279 No use
We can understand the value
When we get it after losing
She alone can understand its value
Who never had it before?
The hungry one will
Understand the value of food
The one who lost
Will understand its value after losing it
In close living
We cannot understand the nobleness of relationship
If we live alone
We cannot understand even about relationship
Small separation will
Help to understand the relationship
And when come together
Loneliness will disappear
Joining and separation
Cannot be avoided
All that is collected
Won’t remain together for ever
There is no restriction
For reunion
Yet separation
Cannot be avoided
But who will decide
About this
There is no
Answer to this question
Whatever might be the
Human endeavour
This cannot be accomplished
Only by human efforts
Can we say that?
This is the law of nature
Or God has ordained
This for us?
Or whatever might it be
Accepting whichever comes
Living accordingly is the
Only option left with us?
What kind of answer
Could be given to this question
And what is the use of
Arguing any more about it
When we cannot
Understand others mind
What is the use of?
Searching for an answer
2-1-17, Mathgiri, 11.10 pm.
When we lose something or miss something then we realize the value of it. This is true both with material things and human relationships. Does union and separation depend upon human effort or natural course or ordained by God? For me there is no point in analysing this as we cannot give a one time uniform solution as we don’t understand others mind and situation which help or force us to be united or separated. So the best solution, live in the present reality and accept it as it is.
Secular 280 ஒரு ஓட்டம்
வாழ்க்கை என்னும் ஓட்டத்திலே
விரைந்து ஓடும் போதினிலே
கூட வருவோர் எவரென்று
நின்று பார்க்க நேரமில்லை
துரத்தி எவரும் வரவில்லை
தப்ப எண்ணி ஓடவில்லை
இலக்கு கூட எதுவென்று
இன்னும் சரியாய்த் தெரியவில்லை
பிறரும் ஓட நாமோட
பின்னால் பலரும் நின்றுவிட
புதிதாய் சிலரும் இணைந்துகொள்ள
போட்டிப் போட்டு ஓடுகின்றோம்
நமது ஓட்டம் தளரும்போது
நாமும் சற்று தயங்கிநிற்க
உடன் ஓடி வந்தவரோ
திரும்பிக் கூடப் பார்க்கவில்லை
இந்த ஓட்டம் தொடர்ந்திருக்கும்
எவரும் இலக்கை அடையாமல்
ஓட்டம் மட்டும் தொடர்ந்திருக்கும்
முடிவு என்றும் காணாமல்
என்றோ எவரோ தொடங்கிவைத்தார்
யாரென நமக்குத் தெரியவில்லை
இறுதியாக எவர் முடிப்பார்
என்பதைப் பற்றிய கவலையில்லை
ஓடும்போது பலர் இருப்பார்
நிற்கும் போது எவரிருப்பார்
ஓடினாலும் நாம் நின்றாலும்
எவரும் கண்டு கொள்ளமாட்டார்
கூடத்தோடே நாம் ஓடினாலும்
தனித்தே நீயும் ஓடுகிறாய்
தனித்து நின்ற பின்னாலே
அதனை உணர்ந்து கொள்கிறாய்
ஓடும்போது நீயும் ஓடிவிடு
தளரும்போது நீ நின்றுவிடு
உனது பங்கு முடிந்தபின்பு
இரண்டையும் கூடநீ மறந்துவிடு
மத்திகிரி, 12-1-2017, மதியம் 2.40
Secular Song 280 A race
In the race of life
When we all run very fast
We don’t know who run along with us
And we don’t have time to look unto them
Nobody is chasing us
And we never run to escape
Even we don’t know
What our goal actually is
As others run, we too run with them
When few left behind
Few more new people join us
We run competing with each other
When our race become slow
As we stop to take breathe
Others who ran with us
Never turned back to know what happened to us
This race will continue
Without anybody reaching the actual goal
Yet this race alone will continue
Never finding its end
Someone somewhere began this
But we don’t know who it was
And who will finally finish it
We least bother about it
Many will be with us when we run
But when we stop who will stop with us
Whether we run or stop
Nobody will notice it
Though you run along with the crowd
Yet you run all alone
Once you stand back alone
Then you realize it
Run when you need to run
And when you become tired you stop
Once your part is completed
Then forget both of them (running and stopping)
Mathigiri, 12-1-2017, 2.40 pm
Another song reflecting the reality of life. Though we are social animals, yet in life in several areas till the end we have to run alone our own race.
Leave a Reply