Secular Song 336 மனமில்லா மனம்
சிரிப்பதா அழுவதா தெரியவில்லை
சொல்வதா மறைப்பதா புரியவில்லை
வாழவும் சாகவும் வழியும்மில்லை
வந்ததால் பயன்னிங்கு ஏதுமில்லை
மனிதனாய்ப் பிறந்தது மிகப்பெரும் தவறு
மனமும்மிருப்பது அதனினும் கொடிது
அதனுடன் வாழ்வது மாபெருந்துயரம்
அதைப்பற்றி சொல்வது மிக மிகக் கடினம்
இறைவன் என் முன் வந்துவிட்டால்
இதைப்பற்றி நிச்சயம் கேட்டிடுவேன்
அவனுக்கு மனமொன்று இருந்திருந்தால்
படைப்பதை நிச்சயம் நிறுத்தி வைப்பான்
நிலையிலா தன்மையை கொடுத்துவிட்டு
நிம்மதி தன்னையும் பறித்துவிட்டு
நாம்படும் துயரினைப் பாராமல்
தான் மட்டும் எங்கோ ஒளிந்து கொண்டான்
மனமொன்று மனதிற்கும் இருக்கவில்லை
மனிதரின் துன்பத்தை அறியவில்லை
மனமில்லா மனதிற்கு புரியவைக்க
மனிதர்க்கு அதனால் வழியுமில்லை
அதையெண்ணி நானும் சிரிக்கின்றேன்
அதன்பின் பிறருடன் அழுகின்றேன்
அனுதினம் இறந்தும் வாழ்கின்றேன்
அததைதான் சொல்லிட முயல்கின்றேன்
மத்திகிரி, 11-07-2017, இரவு 10.45
Secular Song 336 A heartless heart
I don’t know whether to weep or laugh
I don’t know whether to share or to hide
There is no means either to live or to die
There is no use in coming here (in this world)
Indeed, it is a greatest mistake to born as human beings
And worst cruelty in it is to have a heart
Living along with it is indeed tragedy one
It is very difficult to share about it
If God ever comes before me
Definitely I will ask him about this
If at all ever he has a heart
he will stop creating further
Giving an uncertainty as the condition in our lives
And snatching away even the little peace that we had
not looking all the trouble that we under go
He went and hides somewhere
Even the heart does not have a heart of its own
and it never realizes the suffering of humans
therefore, it is not possible for us to communicate to
the heart which does not have a heart
Thinking about it I laugh
Then weep joining with others
Living each day by dying
and I only try to communicate this
Mathigiri, 11-07-2017, 10.45 pm.
Whom shall I blame? My heart or God, as I find it difficult to cope with this so-called heart? I think both God and our heart have no heart on their part as they both make us as if a dead man walking. But often this makes me laugh as I know that neither it is God nor the so-called heartless heart but all are my own makeup and imagination. Then I both laugh and weep—of course along with others who undergo similar situations.
Secular Song 337 வாழ்வுக்கு அழகு
போனது இந்நாள்
வந்தது போல
அடுத்த நாள் வந்திடும்
வழக்கம் போல
நேற்றைக்கு முன்தினம்
நடந்ததைக் கூட
மறந்திடும் மனமும்
வழக்கம் போல
நாளைய மறுதினம்
வருவதை நினைந்து
நாளும் பொழுதும்
உழைக்கிறோம் முனைந்து
ஆயினும் அதனையும்
கடந்த பின்னாலே
வழக்கம் போல ஓடும்
வாழ்வும் தன்னாலே
நேற்றைய முன்தினம்
நாளைய மறுதினம்
இவற்றைத் தவிர
வேறெதுவும் காணோம்
இவற்றின் இடையே
அகப்பட்டுக் கொண்ட
இன்றைய தினம் தான்
உண்மையில் பாவம்
அதற்கென நேரம்
ஒதுக்குவ தில்லை
அதைப்பற்றி சிந்திக்க
நேரமே இல்லை
இன்றைய தினமும்
போன பின்னாலே
அதைப்பற்றி வருந்தி
பயனுமே என்ன?
காலையில் எழுந்து
சுறுசுறுப் பாகி
கடமைகள் செய்கிறோம்
பரபரபப் பாகி
அடுத்த வேலையை
மனதில் கொண்டு
செய்கிறோம் ஆயிரம்
வேலைகள் நன்று
இன்றைக் கென்று
வாழ்ந்திட வென்று
நினைப்பது எப்போது
நாமும் இங்கு
இன்றைய வாழ்வை
தொலைத்த பின்பு
வாழ்வதில் பயனில்லை
சொல்வதை நம்பு
போனதை எண்ணி
புலம்பிட வேண்டாம்
வருவதை எண்ணி
கலங்கிட வேண்டாம்
இன்றைய தினத்தில்
வாழ்ந்திடப் பழகு
அதுதான் நல்ல
வாழ்வுக்கு அழகு
மத்திகிரி, 13-7-2017, மாலை 6.15
Secular Song 337 This is the beauty for life
This day has gone
As it came
The next day will come
As usual
As usual
Mind will forgot
What has happened?
Day before yesterday
We toil a lot
Thinking about
What would come?
Day after tomorrow
Yet when that too
Will be gone
The life will go
As usual
Day before yesterday
Day after tomorrow
Nothing seems to exists
Except them in our life
Today which
Caught between them
Indeed is
Really pitiable one
We never set aside
Time for it
We don’t have time
To think about it
Once today
Has gone
What is the use of?
Lamenting about it?
Getting up
Early in the morning
We do many things
With much haste
Keeping the
Next hour in our mind
We do many things
Properly
But when are we
Going to think
To live a life
For today? (For this moment)
Once you have
Lost today
There is no
Use in living, believe this
Need not lament
About the past
Need not get troubled
About the future
Try to live
In this day
That alone
Is beautiful in life
Mathigiri, 13-7-2017, 6.15 pm.
As I went for my evening walk, I began to think about this day and the way I lived each movement of it. At the same time, I planned for the rest of the evening—what are the things that I have to do etc. Of course, like everyone I too regret several things done in the past or worry about the future. But my constant effort is to try to live in the present as it gives meaning and purpose for my life. As I began to reflect about it, I wrote this song.
Secular Song 338 வெறும் கையால் முழம் போடுவார்
செல்லாத காசாகி
வாழ்கின்ற போதும்
செருப்படி பட்டு
(சிறுமைப் பட்டு)
தாழ்கின்ற போதும்
வீணான கேள்விக்கு
குறைவே இல்லை
வேண்டாத வம்புக்கு
போகாமல் இல்லை
ஏனென்று கேட்க
நாதியும் இல்லை
இருந்தாலும் போனாலும்
கேட்பவர் இல்லை
ஆயினும் ஆர்பாட்டம்
குறையவே இலை
அதட்டல் உருட்டல்
மறையவும் இல்லை
வெறும் கையால் முழம் போட்டு
விலைபேசி விற்கிறார்
இல்லாத பொருளை
ஏலம் விடுகிறார்
வாங்காத பேருக்கு
விளக்கமும் சொல்லி
வீணாக நேரத்தை
விரயமும் ஆக்குறார்
தன் நேரம் பிறர் நேரம்
இரண்டையும் வீணாக்கி
தர்க்கங்கள் பலசெய்து
தத்துவம் பேசுவார்
குண்டு சட்டிக்குள்
குதிரையும் ஓட்டுவார்
குணம் கெட்ட மாந்தரிவர்
வேறென்ன செய்குவார்
மத்திகிரி, 12-7-2017, மாலை 6.15
Secular Song 338 Vain talkers
Though they live like a
Demoted currency
Humiliated by
Receiving rebukes
They never stop asking
Vain questions
And never stopped
Courting unnecessary contentions
There is none
To ask about them
Whether they live or dead
Nobody bothers
Yet the commotion
That they make never diminishes
All their shouting and threatening
Never come to an end
They try to sell
By measuring with an empty hand
They try to put in action
Things which they don’t have
Giving explanation
To those who never buy them
They waste
Their time
Both wasting his own time
And that of others
They will talk great philosophies
And do many arguments
They will run the race
Without having a track
And the senseless people
What else can they do other than this?
Mathigiri, 12-7-2017, 6.15 pm.
There is a petty politician in our street, who often will waste both his and others time talking and try to give solutions to their problems. In the end he often proved that he is good for nothing. Even for his own small needs he depends upon others. But the way he make promises and brag about his contact influence will irritate one. Long before Kannadasan in one (film) song wrote about such people, ‘ஊரெங்கும் திண்ணைப் போட்டு; வெறும் பேச்சு வெள்ளை வேட்டி, சோம்பலில் மனிதன் போனால் சுதந்திரம் என்ன செய்யும்’ [Sitting on the veranda and if they talk in vain what the Freedom could do for them]. I sympathize with him as he often becomes a laughing stock than a useful person. He even earned the nickname ‘வெட்டி வக்கீல்’ [vain talk lawyer]. The pitiable part in it is that few, in order to kill their time, will call him and begin to discuss so many local, state and national issues and he will begin to give big talk. And provoking him more and more will make him talk too much and will laugh, enjoying it to pass their time. To that extent their life is useful to entertain others.
Secular Song 339 குறையாத பாரம்
பேசினால் பாரம் குறைந்து விடும்
புலம்பினால் வருத்தம் மறைந்துவிடும்
யாரிடமாவது சொல்லிவிட்டால்
இறுக்கம் தன்போல் தளர்ந்துவிடும்
இதனை எவரும் மறுக்கவில்லை
இதைவிட எளிய வழியும் இல்லை
ஆயினும் அதிலொரு குறையிருக்கு
அதைத்தான் நாமும் உணரவில்லை
பேசிடும் பேச்சில் தெளிவில்லை
பாதி அதிலே உண்மையில்லை
நீட்டி முழக்கி மிகைப்படுத்தி
பேசினால் பாரம் குறைவதில்லை
புலம்பும் போது போனாலும்
போனபடியே மீண்டும் வரும்
தேவையில்லாமல் பழசையெல்லாம்
தோண்டித் துருவி அழைத்து வரும்
பாரம் குறைய பேசிடுவார்
பழசை எல்லாம் கிளறிடுவார்
போனத்தை மறந்ததை நினைந்திடுவார்
பேசறேன் என்று புலம்பிடுவார்
குறை சொல்பவருக்கு பதில் சொல்லாதே
குற்றம் சுமத்தினால் எதிர்த்து நில்லாதே
காலம் பதில் தரும் கவலைப்படாதே
கடமையை செய்ய மறந்துவிடாதே
மத்திகிரி, 12-7-2017, இரவு 10.30
Secular song 339 Burden never goes
If one talks then the burden will diminish
When one laments the pain disappears
When one shares with others,
Then the tension get released
Nobody can deny this
There is no other simple alternative to this
But still there is a shortcoming in it
That alone we never understand
There is no clarity in what one shares
Half of them are not true
Exaggerating a lot in it
If one shares, the burden never get diminished
Though when the burden goes while sharing
It will automatically come back as it has gone
It will bring along with it
Unnecessarily digging all that went in past
The one who shares to reduce the burden
Will unearth all that went in past
She will remember that was forgotten
Will again lament in the name of sharing
Don’t respond to those who accuse you
Don’t fight back when they blame you
Don’t worry; time will give its own answer
But you never forget to do your duty
Mathigiri, 12-7-2017, 10.30 am.
I received a Whatsapp message in which it is encouraged to sit and talk to sort out issues between two people. As we fail to talk, we end up becoming a problem for others. I too agree with this noble truth and often find it useful in my personal life too. However, in few cases the ‘sitting and talking’ further escalate the tension and division than help to resolve the issue as they dig up past failures and mistakes. This will end up in doing more blaming than trying to understand the current issue. In few cases there is no point even to sit and talk, because once they made up their mind to accuse you and find fault there is no hope for any kind of negotiation. For example, several Congress people like Mani Sankar Iyer and his group insist on talking with Pakistan. Yes, we need to do that. But what is the end result—more violence and killing. They don’t understand peaceful negotiation and inner peace is not in the DNA of Pakistan. To such people we need to talk in their own language. But those whom we love, instead of trying to convince them, better continue to serve silently as time will resolve several things.
Secular Song 340 தீர்வற்ற பேச்சு
வீணான பேச்சுக்கு வேலையே இல்லை
வேண்டாத கேள்விக்கு பதிலும் இல்லை
செயலில் காட்டியும் புரியாதோர்க்கு
சொல்வதால் மட்டும் பயனுமே இல்லை
விளக்கங்கள் தந்தாலும் விளங்கிட மாட்டார்
விவரித்துச் சொன்னாலும் ஏற்கவும் மாட்டார்ர்
தர்க்கங்கள் செய்தாலோ பொறுக்கவும் மாட்டார்
தான் கொண்ட எண்ணத்தை மாற்றவும் மாட்டார்
பேசினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்
பேசவருபவர் தீர்வைத் தேடினால்
பேசுறேன் என்று வீண் வாதங்கள் செய்தால்
இறுதியில் தீர்வு எப்படி கிடைக்கும்
முன்னொரு தீர்வை மனதிலே கொண்டு
அதையே அடைய எண்ணம் கொண்டு
அடுத்தவர் மீது அதையும் திணித்தால்
கேட்பவர் அதனை ஏற்கவும் மாட்டார்
தன்பக்க நியாயத்தை சரியாய் வைத்து
அடுத்தவர் நியாயத்தை பொறுமையாய்க் கேட்டு
இருவரும் சற்றே இறங்கியும் வந்து
எதுசரி என்பதை எண்ணிட வேண்டும்
அதுவன்றி பேச்சிலே பயனே இல்லை
அவரவர் கேள்வியும் புரிவதும் இல்லை
அடுத்தவர் கேள்விக்கு பதிலும் இல்லை
அதனால் பேச்சினால் தீர்வும் இல்லை
மத்திகிரி, 12-7-2017, இரவு 10.45
Secular Song 340 Never ending negotiation
There is no place for vain talk
There is no answer to the unnecessary question
Those who cannot understand our acts
There is no use in sitting and talking with them
Even if we give explanations, they won’t understand
Even if we properly explain, they won’t accept it
They won’t tolerate if we began to argue
They won’t change their mind
Surely, we can find a solution through talk
Provided if the one who comes to talk seeks it
In the name of talking if we merely argues
At the end how can we reach any negotiation?
Having a final solution already in the mind
And only to achieve it
If it is imposed upon others
The one who listens won’t accept it
Clearly sharing their reasons properly
And listening to others points as well
Both compromising to some extent
Should think which one could be correct
Without this there is no use in talking
Others cannot understand our questions
We don’t have answer to their questions too
Therefore, there is solution in such negotiations
Mathigiri, 12-7-2017,10.45 pm.
After writing the previous song (339), as I began to further reflect about this topic, as the inspiration continued, I wrote this song.
Leave a Reply