Secular Songs 436 to 440

Secular Song 436

For the comments see the article: Common Justice in the blog.

Secular Song 436 எது நீதி

குறைகளை எண்ணி

பயனும் இல்லை

குறைவின்றி வாழ்ந்தவர்

எவருமே இல்லை

குற்றங்கள் எண்ணி

பார்த்திடும் போது

குணங்களைக் கூடவே

கணக்கிட வேண்டும்

குணங்களை எண்ணி

குறைகளை மறந்து

கூடவே அணைத்து

வாழ்ந்திட வேண்டும்

ஆயினும் அதையே

சாதகம் ஆக்கி

குறைகளைத் தொடர்ந்தால்

கண்டிக்க வேண்டும்

தன் நீதி கொண்டு

பிறர் நீதி அளக்கும்

தன்மை தன்னையும்

விட்டிட வேண்டும்

எது நீதி என்ற

கேள்வியும் எழுந்தால்

பொது நீதி தன்னைக்

காட்டிட வேண்டும்

அனைவரும் ஏற்கும்

பொது நீதி என்று

அவனியில் இங்கு

ஏதுமே இல்லை

இறுதியில் இதற்கு

விடை கூறும் தகுதி

எவருக்கும் இங்கு

இருந்ததும் இல்லை

குணங்களைப் போற்றி

குறைகளை கடிந்து

பிறர் நலம் எண்ணி

வாழ்வது ஒன்றே

அனைவரும் ஏற்கும்

பொது நீதியாக

அமைந்திடும் வாய்ப்பை

வகுத்திட வேண்டும்

மத்திகிரி, 17-4-18, இரவு 10.30௦

Secular Song 436 Who is correct?

There is no use

Only thinking about the shortcomings

There is none who lived

Without any shortcomings

When we think about

Their shortcomings

We also should calculate

Their good characters

Thinking about the good nature

Forgetting the shortcomings

We should live

Together with others

But taking advantage of it

If they continue to live

With their shortcomings

Then we should discipline them

We should give up

Measuring others

By comparing

Our own righteousness

Then if the question comes

‘Which one is righteous?’

 We should point to the

Common righteousness for all

There is no common

Righteousness in this world

Which is

Acceptable to all

No one has the

Qualification to

Give the final

Answer in this

Appreciating the good things

Disciplining the shortcomings

And living thinking

About others’ welfare

Should become

The common righteousness

And we should create such an

Opportunity for all

Mathigiri, 17-4-18, 10.30 p.m.

Secular Song 437

After long thinking and struggling, I finally made a decision about my involvement with one activity, which I accept but never wanted in my life.  In spite of my lack of interest, I was involved in keeping the common interest with the help and co-operation of others.  But as the time passed, slowly others, who initiated that activity and others co-operated collectively began to leave one by one due to various reasons.  Finally, I ended up taking most of the responsibility, which I never liked. That activity is the one which I never liked.  Anyhow, as the situation finally forced me to take the crucial decision of giving up my responsibility, I decided to take it without any remorse or regret as I never made any commitment to that activity.  When the crucial decision finally came on its own due to the behavior and response of few, then with firm resolution I have decided to keep away from it not involving too much in it any more. As this decision suddenly released both my mind and body and I felt very light and great relief in body and mind. As I was thinking about it, I said, ‘finally I got the rest and retirement which I longed for arrived on its own due to some unwanted incidents.’  Then as inspiration came I wrote this song, reflecting that great release both in body and mind.

Secular Sog 437 இறங்கிய சுமை

இறுதியில் ஓய்வு

எனக்கும் கிடைத்தது

ஏங்கிய வாழ்வும்

தன்போல் வந்தது

ஓடியாடி நான்

ஓய்ந்த பின்னே

உடலோடு மனதுக்கும்

அமைதி கிடைத்து

தேவைக்காக நான்

ஓடிய போதும்

தேவையில்லாமல்

வீணே சுமந்தபோதும்

நாடிய சுகமும்

நான் காண வில்லை

நான் கொண்ட வாழ்வில்

மகிழ்ச்சி இல்லை

எனது சுமையை

நானுமே சுமந்தேன்

பிறரின் சுமையை

பொறுமையாய் ஏற்றேன்

இறுதியில் தேகமும்

தளர்ந்து போக

இரண்டையும் கீழே

இறக்கி வைத்தேன்

சுமையை தூக்க

முனைந்த போது

சுற்றி நின்றோர்

தூக்கி வைத்தார்

இறக்கி வைக்க

விரும்பிய போது

எவரும் வந்து

உதவ மறுத்தார்

பிறரின் சுமையாய்

நாமுமே பிறந்தோம்

பிறரும் சுமக்க

நாமும் வளர்ந்தோம்

நமக்கு சுமையும்

வந்த போது

நாமும் சுமக்க

ஏனோ மறுத்தோம்

என்னடா உலகம்

என்று வியந்தேன்

இதுதான் உலகம்

என்பதைப் புரிந்தேன்

நானும் அவருள்

ஒருவன் என்ற

உண்மையை உணர்ந்து

நாணியே நின்றேன்

மத்திகிரி, 18-4-2018, மதியம் 2.30௦

Secular Song 437 The burden which has gone

Finally, I got

The rest which I wanted

The life for which I was longing

Came automatically on its own

After running too much

And become tired

The rest came both

To the body and mind

Though I ran

For my needs

Though I carried

Unnecessarily

I never attained that

Joy for which I was searching

There was no happiness

In the life that I lived

I carried

My own burden

I carried others’ burden

With much patience

Finally, as the body

Become worn out

I unloaded

Both these burdens

When I tried

To carry the burden

Those around me

Uploaded it on me

When I wanted

To unload it

None refuse

To come and help

We born as

Others’ burden

We grew up

As others carried us

But when the burden

Came to us

Somehow, we

Refused to carry it

I really marvelled

What kind of world is this?

Then I realized that

This is the nature of this world

But when I realized that

I am also

One among them

I bowed my head with much shyness

Mathigiri, 18-4-2018, 2.30 p.m.

Secular Song 438

Last week the summer was a bit extreme here considering the climate of our place which always remains cool even in summer.  For the past two days the heat became unbearable and we all were longing for the rain. Finally the expected rain came yesterday and today. Now our climate has returned back to its normal level.  As rain was pouring down with lightning and thunder, I sat quietly enjoying the rain—which is my favorite season.  After the rain when the cool breeze began to blow I almost forgot myself and became one with nature. I don’t want to even come out from that experience and want to live eternally in it. But I had to come out as I needed to go to bed. Then as the rain and cool breeze gave a divine bliss, as the inspiration came I wrote this song dedicated to this wonderful summer rain—which is everybody’s savior in hot summer.

Secular Song 438 கோடை மழை

இயற்கையில் தோன்றும்

நிகழ்வுகள் எல்லாம்

இதயத்தை மெல்ல

வருடியே கொடுக்கும்

இனிய அலைகள்

பலவும் எழுப்பி

இயற்கையோடு

ஒன்ற வைக்கும்

கோடை வெயில்

தகித்த பின்னே

குளிர்ந்த மழையும்

வந்த போது

மேனி வருடும்

இனிய தென்றல்

இந்த உலகை

மறக்க வைக்கும்

முழவு போன்று

அதிர முழங்கி

இடியும் மின்னல்

ஒன்று சேர

எல்லை இல்லா

விரிந்த வானில்

ஏறி நம்மை

பறக்க வைக்கும்

வறண்ட பூமி

நீரைப் பருக

தேரை எல்லாம்

வாழ்த்தி ஒலிக்கும்

இவற்றில் ஒன்றி

கலந்த பின்னே

மீண்டும் திரும்ப

இதயம் மறுக்கும்

மத்திகிரி, 26-4-18, இரவு 11.10௦

Secular Song 438 Summer rain

All that happens

In nature

Will touch

Our heart gently

They will create

Pleasant moments

And will make us

To mingle with nature

When the

Cool rain came

After a

Severe summer

The cool breeze

Which touches our body very gently

Will make us

To forget this world

Roaring like a drum

As the thunder

Mingling

With lightning

They will make

Us to soar

High

In the sky

As the parched

Land drinks the rain water

All the frogs

Will praise with singing

Once we mingle

With this nature

The heart will

Refuse to come back (from it)

Mathigiri, 26-4-18, 11.100, p.m.

Secular Song 439

“No strength in body, courage in heart and cash on hand” [கையில காசு இல்ல, உடல்ல தெம்பு இல்ல, மனசுல தைரியம் இல்ல] are the three sentences which my mother often makes almost several times in a week (thank god not every day). Then with a smile I used to respond by saying, “without all these the way you fry me on the pan is unbearable. And if you have all the three then no one can stand before you”.  But my mother lives a royal life compared to other old people, though she never recognizes this.  As usual, when she lamented uttering these three sentences, I thought about those old people living in an orphanage actually without all the three. Thanks to the generous hearted people who take care of them.  As I was thinking what they would say about this I wrote this song and dedicated it to all such people living in old age homes.

Secular Song 439 வேறென்ன சொல்ல

தெம்பில்லை உடலிலே

துணிவில்லை மனதிலே

காசில்லை கையிலே

கடைத்தேற்ற ஆளில்லை

இருந்த போது

வந்தவங்க

எண்ணிக்கையில்

அடங்குமோ

இப்ப எல்லாம்

போனபின்னே

என்னவாச்சு

தெரியுமா

“என்னமா

உழைச்சாங்க”

என்று மெச்சி

புகழ்ந்தாங்க

இருந்த காச

கேட்டு வாங்கி

விருப்பம்போல

வாழ்ந்தாங்க

இறுதியிலே

எல்லாமே

செலவு செஞ்ச

பின்னாலே

எதுக்குமே

லாயக்கில்ல

என்று சொல்லிப்

போனாங்க

இதையெல்லாம்

இப்ப சொல்லி

என்ன பயன்

என்பாங்க

இதுக்கு மட்டும்

தெம்பு இப்போ

இருக்கான்னு

கேட்பாங்க

சரி விடு

போகட்டும்

வேறேன்ன

சொல்லிட

சத்தம் போட

தெம்பு இல்ல

நாங்க படுக்க

போகிறோம்

மத்திகிரி, 29-4-18 மதியம் 2.45

Secular Song 439 What else to say?

There is no strength in the body

There is no courage in the heart

There is no cash on the hand

There is no one to take care of us

Are they

Only few

Who came to us?

When did we had all of them?

Do you know?

What happened now?

Once all

The three have gone

“How they

Toiled in life”

They praised us

Very much

Asking the money

Which we had

They lived

As they liked

Once they

Spent

All the

Money that we had

They left

Us by saying

That we are

Good for nothing

But what is the

Use now

In saying all these?

They will tell

Do you have any?

Strength now

To complaint about this?

They will ask

Ok let it be

What else

Can we say?

Now about it

Now we don’t have

Strength to shout

Therefore we are

Going to bed

Mathigiri, 29-4-18,2.45 p.m.

Secular Song 440

We often hear the statement: ‘why this happens only to me’?  Of course we also made or at least thought in similar line. But when we step in other’s shoe then we can easily realize that nothing happens to one which never happened to others.  To get the answer one need to replace one’s place by seeing the incident from other’s point of view.  Then we can learn to accept the unwanted things with much less stress as we rejoice when things happen as we wanted.

Secular Song 440 அனைவர்க்கும் ஒன்று

விரும்பாத ஒன்று

தன்போல் வந்திடும்

வேண்டிடும் ஒன்று

விலகியே செல்லும்

இதுபோன்ற இரண்டு

எதிரெதிர் நிலையில்

இதயம் அகப்பட

அல்லாடக் கூடும்

எதுநம் விருப்பம்

ஆன போதும்

பொறுப்பு மட்டும்

நம்மிடம் இல்லை

பிறருடன் நாமும்

வாழ்ந்திடும் போது

முடிவு என்றும்

நம்மிடம் இல்லை

இந்த உண்மை

பொதுவான ஓன்று

எவருக்கும் இதுபோல்

நடப்பதும் உண்டு

நாமும் பிறரும்

இடத்தை மாற்ற

நம்போல் அவர்க்கும்

நடப்பது உண்டு

வேண்டிய ஒன்று

வந்தால் ஏற்று

விரும்பாத ஒன்று

வந்தால் பொறுத்து

இருவரின் இடத்தை

மாற்றி வைத்து

மாறி வாழ

பழகிக் கொள்வோம்

மத்திகிரி, 2-5-18, மதியம் 2.35

Secular Song 440 The same for all

When unwanted

Comes on its own

The one which we want

Will go away from us

Got between

Such two extremes

The heart also

Get troubled

Whichever might be?

Our longing

The decision is

Not only in our hands

When we live

With others

The final decision

Is not only with us

This truth is

Common for all

This might happen

To anyone

When we

Exchange our places

The same might

Happen to them also

Receiving happily

When we wanted comes

And accepting when

Unwanted comes

Replacing both

Our respective places

Let us learn

To live as the change demands

Mathigiri, 2-5-18, 2.35 p.m. ###

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *