Secular Song 491
The secret in life is that though we know that nothing remains permanently, still the way we run after so many things remains a mystery in life. Though we all know the secret behind it, still we cannot share it with others as each one has to learn it by their own experience.
Secular Song 491 வாழ்வின் ரகசியம்
பலரது வாழ்வைப்
பார்த்த பின்னே
பலவிதம் வாழ்ந்து
பார்த்த பின்னே
இறுதியாய் இதுதான்
உண்மை என்று
மீண்டும் நன்றாய்ப்
புரிந்து கொண்டேன்
நிரந்தரம் ஏதும்
இல்லை என்று
நிச்சயம் மனதுக்குத்
தெரிந்திருந்தும்
தேடி அவை பின்
ஓடுவத்தின்
ரகசியம் மட்டும்
புரியவில்லை
இதையே முன்னோர்கள்
சொல்லி வைத்தார்
ஏட்டிலும் பாட்டிலும்
எழுதி வைத்தார்
ஆயினும் அந்த
ரகசியத்தை
அறிவிக்க ஏனோ
மறந்துவிட்டார்
சொன்னால் புரியாது
என்று எண்ணி
சொல்ல அவரும்
மறுத்தாரா
சொல்லிப் பயனும்
இல்லை என
சும்மா இருந்திட
நினைத்தாரா
அவரது முன்னோர்
அதேபோல் ஏனோ
அவருக்கும்
அதையே செய்ததினால்
அந்த ரகசியம்
தெரியாமல்
நம்மை தேடச்
சொன்னாரா
இல்லா அந்த
ரகசியத்தை
எவரும் அறிவிக்க
இயலாமல்
அவரவர் வாழ்ந்து
புரிந்து கொள்ள
வழியைக் காட்டிச்
சென்றாரா
எவ்வித பதிலும்
கிடைத்தாலும்
எவர்தான் வந்து
சொன்னாலும்
ஏற்க மறுத்து
வாழும் போது
எனக்கும் தெரியா
ரகசியத்தை
சொல்லிட வழி
இல்லாமல்
வழக்கம் போல
வாழ்கின்றேன்
மத்திகிரி,5-1-2019, இரவு, 10.30
Secular Song 491 Secret of life
After observing
The life of so many people
After living
In so many ways
Finally, I
Clearly understood that
This is the
Truth in life
Nothing remains
Permanent in life
Though my heart
Knows well this
Still, I cannot
Understand the secret
The way we run
Behind them
This is what
Our ancestors also told us
They have recorded them
Both in writings and songs
But somehow
They fail to
Proclaim the
Secret to us
Did they refuse?
To proclaim it to us
Thinking that
As we cannot understand it
Or they keep silent
Thinking that
There is no
Use in saying it
As their seniors
Also have done
The same
To them
Not knowing
That secret
Did they ask?
Us to search for it
Unable to proclaim
That secret
Which is?
Not even there
Did they show
The way for
Each one to learn
By their own experience
Whichever answer?
One might receive
Whoever might?
Come and say that
When we continue to live
Not ready to receive it
That secret which
Even I don’t know
As there is
No means to share further about it
I too live
As usual before
Mathigiri, 5-1-2019,10.30 p.m.
Secular Song 492
When I was doing my night walk, I began to think about the things that went away from my life? As I began to think about it, another thought came that one way it is good that I lost so many things, which otherwise would have remained a burden in my life. Then as the inspiration came, I wrote this song thinking about the blessing of losing in life.
Secular Sog 492 இழப்பது நல்லது
இழப்பதெற்கென்று
ஏதுமே இல்லை
நமக்கென்று ஒன்று
இல்லாத போது
இழந்திட தேவை
என்றுமே இல்லை
முன்னே ஒன்று
பெறாத போது
இழப்பதாக நாம்
எண்ணுவா தெல்லாம்
எவரோ நமக்குத்
தந்தது என்று
விளங்கிடும் போது
இழந்தாலும் கூட
அதனால் நமக்கு
கவலை வராது
பெற்றோர் தந்தது
நம்மிந்த தேகம்
உலகோர் தந்தது
நமதென்ற எண்ணம்
உலகம் தந்தது
நம்மிந்த வாழ்க்கை
உயிரை தந்தது
இறைவனின் ஈகை
இதில் நமது
எதுவென சொல்வது
ஏதுமே நமதாக
இல்லாத போது
இழக்காமல் ஒன்றை
இறுதி வரையில்
நிறுத்தி வைக்க
எவருக்கும் இயலாது
இழந்ததை எல்லாம்
எண்ணத் தொடங்க
அதற்கான இலக்கம்
நம்மிடம் கிடையாது
இழந்த வற்றை
எண்ணினாலும்
இறுதி வரையில்
நிம்மதி கிடைக்காது
இழந்ததும் ஒருவிதம்
நல்லது என்ற
எண்ணம் நமக்கு
வந்திடும் போது
இழப்பத்தில் உள்ள
நன்மைகள் கூட
மெதுவாக நமக்குப்
புரியும் அப்போது
சேர்ப்பதில் உள்ள
சுமைகளும் நீங்க
உள்ளான விடுதலை
கிடைப்பதினால்
இழந்தே பெறுவோம்
அந்த ஒன்றை
என்றும் இழக்க
கூடாத ஒன்றை
மத்திகிரி,8-1-2019, இரவு 10.10
Secular Song 492 Better to lose
When we don’t
Have anything
To claim as
Our own
There is no
Need for us to lose
When we didn’t
Receive anything in the first place
When we think
All that we lost
Are merely
Given by others to us
When we realize this
Even if we lost anything
We won’t be
Worried about it
This body of ours
Is given by our parents
All our thinking/ego
Are given by others
The world has given
This our life
Our breath is
A gift from god
What we can
Claim as our own in this
As nothing
Belong to us
It is impossible
For anyone
Remaining till in the end
Not losing something in life
If we began to
Count all our losses
There is not
Enough number for that
Even if we
Began to think about our loses
In the end
We won’t get peace of mind
When we
Get the thought that
It is good one way
For us to lose something
Then slowly
We will begin to realize
That there is some
Benefit even in lost
As we get deliverance
From the burden
Of all that
We have accumulated so far
Let us receive it
Only by losing it
Which we should
Never get lost in life
Mathigiri, 8-1-2019,10.10 p.m.
Secular Song 493
As usual when my mother complained about the coffee (that I have given her a bit extra), I began to laugh. Because she has to give some comments on everything that I do. Then when I sat down with my coffee, I said in Tamil that ‘what to say about such comments.’ She has the advantage to comment on everything as I am listening to them without reacting (there is no point in confronting any women when they comment on anything that men do). Actually, I said it in Tamil to me. Then keeping it as the title of this song, I wrote this song about sharing our thoughts and burdens with others. I wish everyone knows Tamil. Because, it is very difficult to translate this song in any other language, particularly in English.
Secular Song 493 என்னத்த சொல்ல
எதற்காகச் சொல்ல
எவரிடம் சொல்ல
எப்படிச் சொல்ல
எதுவென்று சொல்ல
நமக்காக அல்ல
பிறர்காக என்று
நாமொன்றை சொல்லத்
தொடங்கிடும் போது
எவரிடம் சொல்கிறோம்
என்பது புரியாது
யாரோ ஒருவரிடம்
சொல்லிடும் போது
எப்படிச் சொல்வது
என்கிற எண்ணம்
முன்னாக வந்து
நின்றிடும் போது
எதைச் சொல்வது
என்பதை அறியாது
திகைத்து நாமும்
நிற்போம் அப்போது
இத்தனை கேள்விகள்
சொல்வதில் இருக்க
சற்று நிதானித்து
எண்ணிடும் போது
எதற்காகச் சொல்ல
என்கிற கேள்விக்கு
பாரத்தை இறக்கிட
என்பது அறிந்து
எவரிடம் சொன்னால்
இறங்கிடும் என்று
சரியாத் தேடி
சொல்லிடும் போது
எப்படிச் சொல்வது
என்பதை சிந்தித்து
ஏற்ற வகையில்
சொல்லிடும் போது
எதைச் சொன்னாலும்
அவருமே புரிந்து
இறக்கி வைப்பார்
நம் நிலை உணர்ந்து
மத்திகிரி,8-1-2019, இரவு, 10.45
Secular Song 493 What to say?
What to say
To whom say
How to say
And which one to say
When we began
To say something
Not for our sake
But only for others sake alone
Not realizing that
To whom we are saying
When we began to say
Something to someone
The only thought
Comes and stand before us
How to
Say it?
Not knowing
Which one to say first
We will be
Bewildered
As there are
So many questions in sharing
When we take
Time to think about sharing
To the question
Why should we share?
Is to know that
To unload our burden
When we seek
The right kind of person
To whom when we share
Our burden will be gone
Thinking properly
When we share
How to share
To that person
Whatever we share,
Realizing our need
They too will help us
To unload our burden
Mathigiri, 8-1-2019,10.45 p.m.
Secular Song 494
Both pleasure and pain are our own creation. Neither the work nor the body is the reason for them. Mind is the reason for them. Once we understand this, we won’t be troubled by the pain and pleasure which remains an antidote for each other.
Secular Song 494 யார் பொறுப்பு
மனதிற்குள் சோகம்
இருந்திடலாமோ
மனமே வீணாய்
சுமந்திடலாமோ
எதை எண்ணி வீணாய்
துன்பமும் கொண்டாய்
எவர் வந்து நீக்கிட
எண்ணமும் கொண்டாய்
சோகத்தை சுகமாய்
மாற்றிட முடியும்
என்பதை முதலில்
உணர்ந்திட வேண்டும்
அதிக சுகமும்
திகட்டும் போது
அதற்கு மாற்று
சோகம் என்று
அனுபவம் மூலம்
உணர்ந்திடும் போது
சோகத்தின் சுகமும்
புரிந்திடும் நன்று
சோகம் இதுவென
எண்ணிடும் போது
சற்று அதை நீ
ஆராய்ந்து பாரு
எதிர்மறை எண்ணத்தின்
தன்மையை நீக்க
உண்மை நிலையும்
புரியும் உனக்கும்
சோகமும் சுகமும்
செயல்களில் இல்லை
அவற்றின் அரங்கம்
தேகமும் இல்லை
மனதில் தோன்றும்
எண்ணத்தை மாற்ற
அவற்றின் தன்மை
நிலைப்பதும் இல்லை
இந்த உண்மை
புரிந்த பின்பு
சோகத்தை சுமந்து
பயனென்னக் கூறு
இத்தனை தெளிவாக
சொல்லிய பின்னும்
வீணாய் சுமந்தால்
பொறுப்பதற் காறு
மத்திகிரி, 17-1-2019, இரவு, 11.30
Secular Song 494 Whose is responsible
Can the sorrow be?
In my heart
Oh heart
Can you carry it unnecessarily?
Thinking which
You become get troubled
And who want you to
Come and remove it?
We should first
Understand that
We can change
The sorrow as joy
When too much joy
Become bit excess
Sorrow is only
The alternative to it
When we realized this
Through our experience
We can also understand
That pain also becomes joy
When we think that
This is real sorrow
Better you think
A bit about it
Once we remove
The negative thoughts
You will understand
The reality about it
Joy or sorrow is
Not in our acts
Our body is not
The stage for that
Once we change
The thought in our heart
Its nature never
Remains permanent
Once we
Understand this truth
What is the use of?
Carrying the sorrow, you tell that
Even after telling
This much clearly
If you carry it unnecessarily
Who is responsible for that?
Mathigiri, 17-1-2019, 11.30 p.m.
Secular Song 495
Single people are far better than family people. When I observe the plight of the family people, I would prefer not to give trouble to them by seeking unnecessary help which I can manage on my own. The patience of the family people is beyond the comprehension of any single person as they never experience the stress which a family person carries.
Jajali was an ascetic. When a pair of birds built a nest in his matted hair, and the mother bird even laid an egg, he remained standing in meditation, stirring only after the egg hatched and the fledgling took off, and only went to bathe in the ocean thereafter, proclaiming himself (p.363) the greatest ascetic. Thereupon he was directed by a voice to one more virtuous than himself, who turned out to be an ordinary businessman engaged ostensibly in worldly pursuits called Tuladhara, who led the life of a householder (see George M. Williams Handbook of Hindu Mythology [New York: Oxford University Press, 2003] p. 160).— Arvind Sharma, The Ruler’s Gaze: A study of British Rule over India from a Saidian Perspective, Noida, HarperCollins Publishers, 2017 notes 66, pp. 363-64
Secular Song 495 நம்மோடு போகணும்
எதுவானாலும்
என்னோட போனது
இதுவும் கூட
எனக்கு நல்லது
எதற்காகப் பிறருக்கு
வருத்தமும் தரணும்
எனக்காக வேண்டி
பிறர் துயர் படணும்
அவசர கதியில்
உலகமும் போகுது
அவரவர் வாழ்வு
பாரமும் ஆகுது
பிறருக்கு உதவ
எண்ணியும் கூட
அதற்கான நேரம்
எங்கே இருக்குது
குடும்ப பாரம்
ஒருபுறம் சுமக்க
கூடவே பலரும்
நெருக்கடி அளிக்க
தனக்கென வாழ
நேரமும் இன்றி
பிறருக்காய் வாழ
வழியுமே இன்றி
அரைபடும் கரும்பாய்
அவர் நிலை மாற
இதிலே எங்கே
உதவியை நாட
அரைத்த கரும்பின்
சாரை எடுத்து
சக்கையை எரித்து
வெல்லமும் எடுத்து
பிறரது நாவுக்கு
இனிப்பை கொடுக்கும்
கரும்பின் நிலையில்
பலரும் இருக்க
முடிந்த வரையில்
பாரம் தராமல்
மிஞ்சிய வாழ்வை
வாழ்ந்து முடிக்க
எதுவானாலும்
நம்மோடு போகணும்
இயன்றவரையில்
பாரத்தை சுமக்கணும்
20-1-2019, 11.30
Secular Song 495 We should manage on our own
Whatever it might be
I should manage it on my own
This is also
Good for me
Why should I
Trouble others
And why others
Should suffer because of me
The world is
Going in a rush
And each one’s life
Becomes a burden for them
Even if they want to
Help others
Where is the
Time for that
When the burden
Of the family is on one side
Others also
Give lots of pressure to them
Not having time
For them to live for them
And not having any
Means to live for others
As their condition is
Like the sugarcane in between the crushing wheel
How can we seek?
Their help
Taking the
Sugarcane juice
And boiling it
To prepare the jaggery
Giving sweetness
To many tongues
Is it the condition of many people?
Like that of sugarcane
As much as possible
Not becoming a burden to others
In order to
Spend the rest of my life
Whatever it might be
We should manage on our own
And we should carry our burden
As much as possible
Mathigiri, 20-1-2019, 11.30, p.m.
Leave a Reply