Secular Song 496
Another plea with my mind as it does not have its own mind to mind about my plight. As we cannot escape from our own shadow, there is no hope for one to escape from the torture of one’s own mind. Till the end we need to learn to live with it.
Secular Song 496 ஈரமற்ற நெஞ்சு
நெஞ்சே உனக்கொரு
நெஞ்சமும் இருந்தால்
நீயதன் சொல்லை
அனுதினம் கேட்டால்
என்னிலை எதுவென
உனக்கு புரியும்
அதன்பின் என் மீது
இரக்கமும் பிறக்கும்
தூங்கும் நேரமும்
கனவாக வந்து
தூக்கத்தை கலைத்து
எரிச்சலைக் கொடுப்பாய்
விழிக்கும் போதோ
சொல்லவும் வேண்டாம்
என்னிலை உனக்கு
சொல்லிட வேண்டாம்
கெஞ்சி உன்னிடம்
கேட்டுமே பார்த்தேன்
கோபம் கொண்டு
திட்டியும் தீர்த்தேன்
எதற்கும் அசைய
மறுக்கும் உன்னை
என்ன செய்து
அடக்கப் பார்ப்பேன்
அடக்க முயன்று
தோற்ற பின்னாலே
வசியப் படுத்த
முயற்சியும் செய்தேன்
இறுதியில் உனது
இரக்கத்தை நாடி
எனக்கு வழி சொல்
என்று கேட்டேன்
அதையும் காதில்
வாங்க மறுத்து
அழிம்பு செய்தால்
என்ன செய்வேன்
உன்னை படைத்த
இறைவன் கூட
உதவிட இங்கு
வந்திட வில்லை
எனவே இனிமேல்
புலம்பி என்ன
அவனது நெஞ்சிலும்
ஈரமே இல்லை
ஆகவே உன் வழி
நானும் போகிறேன்
ஆனால் நிச்சயம்
ஒரு நாள் வெல்வேன்
அதுவரை நீயும்
நடத்திடு நாடகம்
நானும் ஆடுறேன்
உன்னுடன் மேடையில்
மத்திகிரி,21-1-2019, இரவு, 11.10 p.m.
Secular Song 496 Mind without mercy
Oh mind if you
Have a heart
If would
Listen to its words
You would
Understand my situation
Then you will have
Mercy upon me
Even in my sleep
Coming in dream
Disturbing my sleep
You will irritate me
I need not tell
About my condition
When I
Remain awake
I begged you
Often
I rebuke you
Several times
As you refuse
To move a bit
How I am going
To tame you
As I am defeated
In my attempts to tame you
Then I try
To enchant you
Finally seeking
Your mercy
I asked you
Show me a way
But if you
Remain adamant
Not even listening to this also
Then what can I do
Even the god
Who created you?
Also is not
Ready to help me in this
So what is the
Use of lamenting any more
Even he does not
Have a merciful heart
Therefore, I go
In your way
But surely
One day I will overcome you
Till then
You enact your drama
And I too will
Act with you on the stage
Mathigiri, 21-1-2019,11.10 p.m.
Secular Song 497
See ‘Gandian Idealism’ for the background for this song.
Secular Song 497 அதிக அறிவு
அதிக அறிவும்
ஆபத்தாய் போகும்
அவசியம் இல்லாத
கேள்விகள் கேட்கும்
அவற்றுக்குப் பதில்
தேடியே சொன்னபின்
அதற்கே அவைகளும்
புரியாமல் போகும்
எளிய விடையும்
எதிரில் இருக்க
இல்லாத விடைக்கு
கேள்விகள் தொகுத்து
அதற்கான விளக்கம்
ஆயிரம் தந்து
அதுபற்றி ஆராய்ச்சி
பலவிதம் செய்து
இல்லாத விடைகளை
விபரமாய் தொகுத்து
அவற்றை முன்வைத்து
வாதங்கள் செய்து
இறுதியில் இவையாவும்
சரியில்லை என்று
எடுத்துக் கூறி
முடித்த பின்னர்
எளிதான விடையை
ஏற்று கொண்டு
இல்லாத பதில்களை
ஒதுக்கியே வைக்கிறார்
நேராக மூக்கை
தொடவும் விடாமல்
கையால் தலைசுற்றி
தொடச் சொல்கிறார்
மெத்த படித்தவர்
என்பதைக் காட்ட
நம்மையும் அவர் பின்னே
வந்திடச் சொல்கிறார்
அதைவிட நேராக
எளிய விடையேற்று
தெளிவாக வாழ்ந்திடும்
எளிமையே நல்லது
மத்திகிரி,28-1-2019, இரவு, 10.50
Secular Song 497 Too much knowledge/brain
Too much Knowledge
also become dangerous
It asks so many
Unnecessary questions
Though it founds
Its own answers
Then they also
Not become clear to it
While the
Simple answer is in front
Forming questions
For the non-existing answers
Giving thousands
Of explanation for that
Doing many kinds of
Research along with it
Compiling the
Non-existing answers properly
Debating, keeping
Them in front
Finally saying that
They too are
Not proper
Answers
Accepting that
Simple answer
They keep away
The non-existing answers
Not allowing us
To touch our nose straight
They ask us to touch it
By turning our hand around our head
In order to
Show that they are too much educated
They also ask us
To follow them
But better than that is
To accept that simple answer
By leading a
A simple life
Mathigiri, 28-1-2019,10.50 p.m.
Secular Song 498
This is my continuous reflection on the previous song’s topic. No one can live only for herself. At the same time no one can claim that she is living only for others. The only reality in life is that we are living ‘with’ others while living our own lives. Only such understanding alone will help us to implement the golden principle ‘live and let live’.
Secular Song 498உனக்கான வாழ்வு
உனக்கான வாழ்விது
என்பதை உணர்ந்து
விளக்கங்கள் தருவதை
நீயுமே மறுத்திடு
விளக்கங்கள் ஆயிரம்
நீதரும் போதிலும்
புரிந்திடும் அவசியம்
பிறருக்கு இல்லையே
அவரவர் வாழ்வினை
அனைவரும் வாழ்கிறார்
அதற்காகப் பிறருடன்
இணைந்து கொள்கிறார்
பிறருக்காக வாழ்வதாய்
சொல்கின்ற போதிலும்
அதற்குள்ளே தனக்காக
அவசியம் வாழ்கிறார்
உனக்காக மட்டும்
வாழவும் இயலாது
பிறர்காக மட்டுமே
வாழ்ந்திட இயலாது
தனக்காக வாழ
விரும்பிய போதிலும்
பிறரின் தயவின்றி
வாழ்ந்திட முடியாது
பிறரோடு வாழ்ந்திட
நாமும் வாழலாம்
நாமுமே பிறர் வாழ
உதவியாய் இருக்கலாம்
ஆயினும் அதனுள்ளே
இருந்திடும் ரகசியம்
புரிந்து கொள்ள
அனைவரும் வாழலாம்
அவரவர் வாழ்வு
அவரவர்க் கானது
அனைவரும் இதனையே
புரிவது நல்லது
அதன்படி வாழ
அனைவரும் வாழலாம்
உனக்கான வாழ்விலும்
பிறருக்காக வாழலாம்
மத்திகிரி,28-1-2019, இரவு, 11.30
Secular Song 498 Your own life
Stop giving explanation
After clear understanding
That this life which you live
Is your own life
Though you might give
Thousands of explanations
There is no need for
Others to understand it
Each one is living
Their own life
For this they
Join with others
Though they claim that
They are living for others
In that indeed
They life for them
You cannot live
Only for you
You cannot live
Only for others
Even if one wants
To live only for her
It is not possible
Without others’ help
When we live ‘with’ others
We too can live for us
We too can help
For others to live
But once we understand
The secret in it
Then understanding it
We all can live
Each one’s life
Belongs to her
It is better for
All to understand this
If we live accordingly
All can live
And in your life also
You can live for others
Mathigiri, 28-1-2019, 11.30 pm.
Secular Song 499
The only demand that my mind has with me is retirement. The only thing that I want to have is to escape from it. But in this hide and seek finally we both were defeated.
Secular Song 499 இருவரும் தோற்றோம்
என் மனம் ஆயிரம்
கேள்விகள் கேட்க
எவ்வித பதிலை
நானுமே தருவது
எத்தனைக் காலம்
இதுபோல வாழ்வது
என்று என்னிடம்
மல்லுக்கு நிற்குது
இரவு பகலாய்
உனக்காக உழைத்து
ஒட்டாய்த் தேய்ந்தேன்
என்று சொல்லுது
எப்போது எனக்கு
ஓய்வும் கிடைக்கும்
என்று என்னிடம்
நியாயம் கேட்குது
என்னவோ இதுவரை
என் சொல் கேட்டுமே
எல்லாம் செய்த்தாய்
வம்புக்கு இழுக்குது
என்நிலை அறிந்தும்
ஏனிதைச் செய்யுது
என்பது மட்டுமே
விளங்கிட மறுக்குது
என் மனம் என்னிடம்
ஓய்வு கேட்க
அதனிடமிருந்து நான்
தப்பிக்க பார்க்க
ஒருவரை ஒருவர்
குறை சொல்லி நிற்க
இருவரும் தோற்றோம்
வேறென்ன சொல்ல
மத்திகிரி, 1-2-19, காலை, 9.30
Secular Song 499 Both were defeated
My mind is asking
Thousands of questions
What kind of answer
Can I give to it?
‘How long can I
Live like this’
Saying like this
It wrestles with me
‘Toiling day and night
Only for you
I become worn out’
It says
‘When I am
Going to get my rest’
It asks
Justice from me
It draws me for
Unnecessary contention
As if it
Listened me so far
Knowing my condition
Why it does like this
Still I cannot
Understand it clearly
My own mind
Demanding rest from me
I also try to
Escape from it
As we blamed
Each other for this
Finally, we both were defeated
What else there so say
Mathigiri, 1-2-19, 9.30 a.m.
Secular Song 500
I watched a program (Sun T.V. 3-2-2019, 9.30 to 10.30 p.m. Today’s hero) in which disabled people with self respect and confidence stand on their own leg and challenge ordinary people. There is no point in saying that one does not know how to live. Converting that hardship into opportunity they show to the rest of able bodied person who laments that he does not know how to live. As I was reflecting about their life I wrote this song—dedicating to them. (Mavula started by Sri. Muhammad Gadhafi, who helps several physically, challenged people to lead a respectful and meaningful life)
Secular Song 500 வாழ்க்கை
வாழ்வே கடினம்
என்றுமே எண்ணவா
வாழ்த்தான் தெரியலை
என்றுமே சொல்லவா
இரண்டுமே உண்மை
என்பதை அறிந்து
ஏற்ற வழியை
அதற்குத் தேடவா
கடினமே காணாத
வாழ்க்கையும் வாழ்ந்தால்
வாழ்விலே சுவையும்
இல்லாது போய்விடும்
வாழ்வேத் தெரியலை
என்றுமே எண்ணிட
வாழ்ந்திடும் வாழ்வு
பயனற்றுப் போகும்
கடினம் என்பது
வாழ்விலே இல்லை
கருத்துடன் வாழ்வினில்
வாழ்ந்திடும் போது
வாழ்வேத் தெரியாத
வாழ்வுமே உண்டு
வாழ்வினை சரியாக
புரியாத போது
கடின உழைப்பு
பலந்தரும் போது
கடின வாழ்வுக்கு
இடமுமே ஏது
சரியாகப் புரிந்து
வாழ்ந்திடும் போது
தெரியாமல் வாழ்ந்திட
வழியுமே ஏது
கடினம் என்பது
வாழ்வுக்குத் தேவை
கவனமாய் வாழ்வினை
வாழ்ந்திட வேண்டின்
வாழ்வேத் தெரியாத
வாழ்க்கையும் இல்லை
சரியாக வாழ்வினை
புரிந்திடும் வரையில்
மத்திகிரி, 3-2-19, இரவு, 11.45
Secular Song 500Life
Should I think that?
Life is indeed very difficult one
Or should I say that
I don’t know how to live it?
Or knowing that
Both are real
Do I search for?
Proper means
If there is no life
Without difficulties
Then there won’t be
Any taste in life
If we think that
We don’t know how to live
Then the life that we live
Will be meaningless
There is no
Difficult in life
When we live
With some purpose
There are some people
Who do not know how to live?
As they don’t
Live the life properly
When the hard work
Brings proper results
Where is the place
For a difficult life
When we live
With proper understanding
Then where is the place
To live without knowing
Hardship is
Necessary for life
If we want to live
The life properly
There is no life
Without know how to live
When we understand
The life properly
Mathigiri, 3-2-19, 11.45 p.m.
Leave a Reply