Secular Songs 506 t0 510

Secular Song 506

For comments see ‘Regionalism nationalism and our Identity’.

Secular Song 506 அந்நியர் கருத்து

தூரத்தில் நின்று

நூல் பல படித்து

அடுத்தவர் பற்றி

ஆயிரம் சொல்லலாம்

புது புது வார்த்தைகள்

பலவுமே சமைத்து

அதற்கான விளக்கம்

அவரும் தரலாம்

தாம் கொண்ட கருத்தை

ஆழமாய்த் தொகுத்து

நூல பல வடித்து

நம்மிடம் தரலாம்

ஆழ்ந்த ஆராய்ச்சி

பலவும் செய்தாலும்

அதற்கான தரவுகள்

எத்தனை சேர்த்தாலும்

பிறர் பற்றி சொல்லும்

கருத்துக்கள் யாவுமே

ஒருவழிப் பாதையாய்

இறுதியில் இருந்திடும்

ஆகவே எவரும்

எதையும் சொல்லினும்

எதுவும் முழுமையாய்

இருந்திட முடியாது

நேற்று சொன்னது

நாளைக்கு மறையும்

கருத்தோடு காட்சிகள்

நாள்தோறும் மாறும்

மாற்றம் ஒன்றுதான்

மாறாது என்பதால்

பிறர் பற்றி சொல்லும்

கருத்துமே மாறிடும்

அருகில் சென்று

உறவாடி அறிந்தாலும்

அவர் போல நம் வாழ்வு

மாறாத போது

எவர் பற்றி எவரும்

எதுவும்சொன்னாலும்

அந்நியர் சொல்லிடும்

எண்ணங்கள் யாவும்

தூரம் நின்று

சொல்வது என்பதை

இறுதியில் நாமும்

உணர்ந்து கொள்ளணும்

மத்திகிரி, 8-4-2019, இரவு, 10.50

Secular Song 506 Outsider’s view

Standing at a distance

Reading many books

One can say many things

About others

Coining new words

They might give

New kind of

Meanings to them

Compiling their views

After proper research

They might present them

In book form

Though they might have done

Deep research

And produce many

Evidences for that

What they say

About outsiders

Will always remained

As one way traffic

Therefore whoever

Might say anything

Nothing will become

Complete one

What they told yesterday

Will disappear tomorrow

Along with opinions

Situations also will change each day

As change alone

Is unchangeable one

What they say about others

Will also get changed

Though we move close

And have fellowship with them

When our life won’t change

Like that of others

Whoever might say?

Anything about others

Always will remain

An outsider’s opinion

We too should realize

That what they say is

Only shared

By standing from at a distance

Mathigiri, 8-4-2019, 10.50

Secular Song 507

Identity is essential to name anything.  To name a place as a grave it needs a dead body.  To call a place home some need to live in a house.  Similarly to call ourselves as ‘human’ beings we need the character of a human.  Though there are several theories going around about giving various explanations to decide who is a human, the minimum is ‘live and let live’ is the best one.  But what to say about the terrorists who kill others giving their right to live?  So I dedicate this song to all those innocent people killed in terrorism and particularly those who were killed in Sri Lanka on April 18, 2019.

Secular Song 507 யார் மனிதன்

பிணமொன்று இல்லாமல் சமாதி இல்லை

பிள்ளையும் இல்லாமல் பெற்றோர் இல்லை

குணம் ஒன்று இல்லாமல் மனிதரும் இல்லை

குறிக்கோள் இன்றியும் வாழ்க்கையும் இல்லை

எந்த இடமும் சுடுகாடாய் மாற

எரிக்கப் புதைக்க பிணமும் வேண்டும்

இதுபோல நாமும் மனிதராய் இருக்க

மனித குணமும் நம்மிலே வேண்டும்

வெறும் நான்கு சுவற்றுக்கு மேலே

கூரை இருந்தால் வீடாக மாறாது

குணமில்லாமல் நாமும் வாழ்ந்தால்

மனிதர் என்ற பெயர் இருக்காது

அடையாளம் ஒன்று தெளிவாக வேண்டும்

அதற்கொரு காரணம் அவசியம் வேண்டும்

அதுபோல நாமும் மனிதராய் வாழ

அதற்கேற்ற குணம் நம்மிடம் வேண்டும்

ஆயினும் குணமென்று எதை நாம் சொல்ல

அதற்கான விளக்கம் பலர் தரும் போது

ஆயினும் அதை நாம் மறுக்க முடியாது

ஆயிரம் விளக்கங்கள் வலம் வந்த போதும்

தன் போல் பிறரை எண்ணி வாழ்ந்து

தீங்கொன்று மனதிலே செய்யாது இருந்து

பிறர் செய்யக் கூடாது என்று நாம் சொல்வதை

பிறருக்கு செய்யாமல் இருப்பதே குணமது

மத்திகிரி, 21-4-2019, இரவு, 11.30

Secular Song 507 Who is human?

Without a dead body there is no grave

Without children there is no parenthood

Without character there is no human being

Without aim there is no life

To become a place as a grave

A dead body is need for that

In the same way for us to remain as human

We too need human nature within us

A roof over a four wall

Won’t become a house

Without character if we live

We won’t have the name as human being

We need a clear identity

For that we need a clear reason for that

Similarly for us to live as human being

There should be character in us

But which one we can call as character

When many give various explanations for that

But we cannot also deny it

Though thousands of explanations are going around

Living thinking others as oneself

Not doing evil in our heart

What we think we should not do for us others

If we don’t do it, then that is called ‘Character’.

Mathigiri, 21-4-2019, 11.30 p.m.

Secular Song 508

As my Mami came to stay with us, I gave my room to her and used the hall for me.  When she left this morning, as I returned back to my room, I realized how much I missed it.  Particularly I would prefer to sit stretching my legs on my cot and pushing the chair back when I read books.  When I do my meditation, I do the same. Then naturally that relaxation also gives some inspiration to write poems.  Now I understand why mother does not want to go anywhere else in this old age. She not only finds her room comfortable but also the furniture which she uses provides some sense of security.  So after completing my reading when I closed my eyes for meditation I said that we rejoice when we get back something which we lost in life.  So it is better not to miss a few things which give comfort to your life.  Of course which one we should not miss differs person to person as each one has her priority like –health, relationship, honour, wealth etc.  But whichever it might be, when we get it back, we really rejoice in it.

Secular Song 508 இழப்பு

இழந்ததைப் பெறும்போது

எத்தனை ஆனந்தம்

இழந்துமே பெற்றால்தான்

இதுவும் புரியும்

இழக்காமல் இருப்பது

இயலாத காரியம்

இழக்காமல் இருக்க

எப்படி இயலும்

ஆயினும் எதை

இழக்காமல் இருக்கணும்

என்பது அவசியம்

நமக்குத் தெரியணும்

ஆயினும் இதிலேயும்

கருத்துக்கள் மாறிடும்

அதை நாமும்

ஏற்கத்தான் வேண்டும்

எதை இழந்தால்

இறுதி வரையில்

மீண்டும் கிடைக்க

வாய்ப்பற்றுப் போகும்

என்பதை உணர்ந்து

சிந்தித்து வாழ்ந்து

அதை காக்க

நாமும் முயலணும்

ஆகவே இதனை

அடுத்தவர் சொல்லி

அதன்பின் நாமும்

செய்யாமல் இருந்து

இதன்பின் இழந்த

வலியை உணர்ந்து

அனுபவம் தந்திடும்

பாடத்தை அறியணும்

அதையே மீண்டும்

செய்யாமல் இருந்து

அதன்படி வாழ்ந்து

அமைதி காணணும்

மத்திகிரி,  2-05-2019,  இரவு, 11.15

Secular Song 508 Losses

How we rejoice

When we get back which we lost

This we can realize

Only by losing and get it back

It is impossible

Not to lose something (in life)

How is it possible

To live without some losses

But we should know

For sure that

Which one

We should not lose

But even in this

There will be several opinions

And we should

Accept this also

Which one we

Might not get back

Once we

Have I lost it?

Realizing this

And thinking properly

We should

Try to guard it

Therefore others

Not telling this

And then we

Stop not doing it

Knowing the pain

Of the loss which we already had

We should know

The lesson which our experience taught us

Not repeating

The same again

We should find peace

By living accordingly

Mathigiri, 2-05-2019, 11.15

Secular Song 509

For comments see ‘Woman are Great’.

Secular Song 509 பெண்ணின் பெருமை

பெண்ணின் பாரம்

புரிந்தவர் இல்லையே

பொறுமையில் பெண்ணுக்கு

ஈடிணை இல்லை

கருவினில் சிசுவை

சுமப்பதில் பொறுமை

பெற்றபின் வளர்ப்பதில்

அதனினும் பொறுமை

வளர்த்தபின் பிள்ளைக்காய்

வாழ்வதில் பொறுமை

பூமியை மிஞ்சும்@

பொறுமையில் பெண்மை

என்னதான் ஆண்கள்

துணையிருந்தாலும்

பெண்ணின் துணிவு

ஆண்களுக் கில்லை

கூடவே வாழ்ந்து

பார்க்கின்ற போதும்

புரிகின்ற புத்தி

ஆண்களுக்கில்லை

மனித உடலில்

ஒன்றாய் இருந்தும்

மனதில் மட்டும்

எத்தனை வேற்றுமை

உடலுக்காய் வாழும்

மானிட வாழ்வில்

மனத்துக்காய் வாழும்

பெண்மைதான் மேன்மை

எத்தனை முயன்று

பார்க்கின்ற போதும்

ஆணுக்குப் புரியாது

இந்த உண்மை

ஆயினும் அதனை

அறிந்த பின்னும்

அமைதி காப்பது

பெண்ணின் வலிமை

கருவினில் தொடங்கி

கல்லறை வரையில்

பாரம்  சுமந்து

பழகிய பெண்மை

இறுதி வரையில்

இறக்க வழியின்றி

என்றும் சுமப்பாள்

தன்னுடன் நம்மை

@பூமியை பொறுமை மிக்க தாயாகக் கூறுவது மரபு (மனைவியாக அல்ல)

மத்திக்கிரி, 27-04-2019, இரவு 11.00

Secular Song 509 Women are great

No one has understood

The burden of women

There is none equal in patience

Like women

She has patience

While carrying the baby in the womb

She will have it when

Brings up the child

After bringing up

She will have patience in living for it

Woman will exceed in patience

Even than the earth@

How much men give

Company to them

Men do not have

The courage of women

Men do not have

The buddhi to understand them

Though they

Live with women

Though both are the same

In the body

How much they differ

In their heart

In this life in which

We live for our physical needs

Women are great indeed

As they live for the heart

How much they strive

Men cannot

Understand this

Truth

Even after knowing this

The way women keep silence

Is their

Strength

Women who used with

Carrying the burden from

Womb to

The grave

Will continue to carry us along

With her burdens

Without having any means

To unload them

@ Earth is personified as a patience mother (note not a wife)

Mathigiri, 27-04-2019, 11.00 p.m.

Secular Song 510

We are often involved in some activities just to show how liberal or generous we are.  When it leads to unnecessary complication, unable to leave at the same time unable to involve further we get trapped.  In this those who are with us suffer more than us.  And to whom we do such generous service often takes advantage of our weakness.  For many they cannot easily get rid of this nature even after getting pounded repeatedly. The only good thing about it is that others around us can learn good lessons from such activities and spare themselves from them.

Secular Song 510 வேண்டாத வேலை

விடவும் முடியாது

விட்டிடத் தெரியாது

வீணான காரியம்

ஆயிரம் உள்ளன

வீம்புக்கு விலைபேசி

வேண்டாத விலைதந்து

ஆயிரம் காரியம்

நாமாகச் செய்கிறோம்

ஊர்மெச்ச வேண்டி

பிறர்காண வென்று

செய்வது எத்தனை

நாம்மட்டும் அறிவோம்

பிறர்க்கும் பயனின்றி

தனக்கும் தொடர்பின்றி

விழலுக்கு இரைத்த

நீராக்கிப் போகிறோம்

சொன்னாலும் கேட்காமல்

தன்னாலும் புரியாமல்

பட்டபின் புலம்பி

வீணாக அழுகின்றோம்

ஆனாலும் அதையே

அடியோடு மறந்து

அடுத்த நொடியிலே

அதையே செய்கிறோம்

அதற்கான விளக்கம்

ஆயிரம் தந்து

அதையே மீண்டும்

பலமுறை செய்கிறோம்

இந்த குணம்கொண்டு

வாழ்ந்திடும் நாமும்

நம்மோடு வாழ்வோர்க்கு

பாரமாய்ப் போகிறோம்

என்னதான் முயன்றாலும்

இக்குணம் மாறாமல்

இறுதி வறையிலே

வாழ்ந்து முடிக்கின்றோம்

நம்போல பிறறேதும்

செய்யாமல் இருந்து

நலமாக வாழ்ந்திட

வழிகாட்டிச் செல்கின்றோம்

இந்த பயனொன்று

நம்மாலே உள்ளது

என்பதை எண்ணியே

நிம்மதி கொள்கிறோம்

மத்திகிரி, 6-5-2019, இரவு, 11.45

Secular Song 510 Unnecessary tasks

There are

Thousands of tasks

That  cannot be removed?

And we don’t know how to give up

We voluntarily

Do thousands of things

Unnecessarily by

Paying a cost for it

We alone know

How do we do many things?

Only for

Others to appreciate

We become like the water

Which was irrigated to the weeds?

Without any use of anyone

And without having any connection to us

Not understanding on our own

Not listening to when others give advice

We lament

Once we burnt our fingers

But completely

Forgetting it

Next second

We get ready to do the same

We give thousands of

Explanations to it

And we do it

Again and again

Finally, we become

 A burden to those who live with us

As we always live

With this nature

How much try, unable to

Get rid of this nature

Somehow, we

Manage to live till the end

But we leave

A lesson for others

Not do the same

Like us

Finally, we take

Some satisfaction that

At least there is

This one benefit because of us

Mathigiri, 6-5-2019, 11.45 p. m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *