Secular Songs 516 to 520

Secular Song 516

When I finished reading one book, immediately I should take another book. Otherwise I will feel that I have missed something in life.  Several times I think that I become an addict to reading—however it is important for life.  But all that I learnt are not useful to me or I remember them all.  At the same time reading is not a hobby for me but part of my life.  However, I see several people who are wise in life never read any books.  In fact, many wise people have more practical wisdom than having any bookish knowledge.  But the tragedy is that even after seeing them I am not ready to repent and give up reading.

516 இதுதான் கொடுமை

படித்து எழுதி

காலத்தைக் கடத்தி

இழந்து பெற்றது

ஏதுமே இல்லை

இதுவரை படித்த

நூல்கள் பலவும்

நிலையாய் மனதில்

நிற்கவும் இல்லை

அறிந்து கொள்ள

படிப்பதாய் எண்ணி

ஆயிரம் நூல்கள்

இதுவரை படித்தேன்

ஆயிரம் ஆயிரம்

செய்திகள் அறிந்தும்

அறிவு மட்டும்

வளரவே இல்லை

நேரம் போக

இதுவரை படித்த

நூல்களின் கணக்கை

எப்படி சொல்ல

நேரமும் போனது

நாட்கள் நகர்ந்தது

ஆயினும் கற்றது

ஏதுமே இல்லை

படிக்காமல் கற்ற

மேதைகள் பலரும்

பாரினில் உண்டு

என்கிற உண்மை

படித்த பின்தான்

புரிந்தது எனக்கு

இதுவே படிப்பால்

நான் பெற்ற நன்மை

இத்தனை படித்தும்

அறிவில்லாமல்

வாழ்ந்திடும் பேதை

ஆனது உண்மை

படிக்காத மேதைகள்

பலரைப் பார்த்து

இன்னும் திருந்தல

என்பதே உண்மை

ஆயினும் படிப்பதை

நிறுத்தவும் மாட்டேன்

என்பது இங்கு

மாபெரும் கொடுமை

மத்திகிரி, 19 -08-2019, 11.50

Secular Song 516 This is the trouble with me

By reading and writing

By spending time

I haven’t gained or lost

Anything so far

All the books

Which I have read so far

Not remain

Permanently in my mind

Thinking that
I should know more

So far I have read

Hundreds of books

Though I received

Much information

I never grew

In my buddhi

How to count

All the books

Which I have read so far

To kill my time

Time has gone

And days also moved

But so far

I learned nothing

I realized the truth that:

There are many

Learned person

Without reading on this earth

I understood this truth

Only after reading many books

This is the only benefit

That I gained by reading

Though I read so much

I become a fool

And this is the

Only truth

Seeing so many

Learned persons who never read much

Still, I never repented

And this is also a truth

But I won’t stop

Reading books

And this indeed is

The trouble with me

Mathigiri, 19 -08-2019, 11.50, p.m.

Secular Song 517

For comments see: ‘Don’t Ignore’ in the blog.

517 உதறாதே

உதவாது என்று

எதையும் ஒதுக்காதே

உணரட்டும் என்று

எவரையும் தவிர்க்காதே

துரும்பும் பல்குத்த

உதவும் என்கிற

பழமொழி தன்னையே

ஒருபோதும் மறக்காதே

மூத்தாளும்முட்டுக்கு

உதவுவாள் என்கிற

முதுமொழி தன்னையும்

எதற்காகச் சொன்னார்

முடமாகி போன

வயதான நபர்

துன்பத்தில் உனக்கு

துணையாக நிறபார்

ஒன்றுக்கும் உதவாத

எவ்விதப் பொருளும்

வீணாக உலகில்

இதுவரை இல்லை

உதவாது என்று

தள்ளிய ஒன்றும்

ஒரு முறை முன்பு

உதவியே இருக்கும்

அதன் தேவை இன்று

முடிந்தத்தின் பின்னே

ஒதுக்கினேன் என்று

உணர்ந்திடு நன்று

புவியில் வாழும்

நாட்கள் எல்லாம்

பொருளும் மனிதரும்

நிச்சயம் உதவுவார்

அவற்றை நாமும்

கைக்கொள்ளும் விதத்தில்

அவையும் நமக்கு

உதவியாய் இருக்கும்

ஆகவே எதையும்

உதறிடும் முன்னே

அவசியம் ஒரு முறை

அதை நீ உணரு

அதன்பின் முடிவு

எடுப்பது உனக்கு

அவசியம் உதவும்

என்பதை நம்பு

மத்திகிரி, இரவு, 11.50

Secular Song 517 Don’t forsake

Don’t reject anything

Thinking that it is not useful

Don’t avoid anyone thinking that

Let them learn a lesson

Don’t forgot

The proverb that

Even a small stick

Will be useful as teeth-pick

Why they say that

Even the first wife will be

Useful to

Stand as a support for a falling roof@

Even the old people

Who now become crippled

Will come and support you

When you are in trouble

There is nothing

Remains un-useful

On this world

Unnecessarily

A thing which

We rejected now

Might remained

Useful once upon a time

Remember that

Once its usefulness is

Came to an end

Now I have rejected it

As long as we live

On this earth

Both things and people

Will remain useful to us

They will remain

Useful to us

As the way

We handle them

Therefore before

You reject anything

Think about it

One more time

Then taking

Any decision

Will be useful

Believe this

Mathigiri, 11.50 p.m.

@ A Tamil proverb.

Secular Song 518

When I saw one whatsapp message in which many exchanged some idealistic view about their life and plan about it in future, it a bit amused me.  They too know very well that such dreams about future life are not real, and still they find some consolation in such talk.  Particularly their concept of some ‘community life’ with like minded people is mere imagination.  Even among the religious communities where they make such a commitment for a community life to live to serve others or for spiritual life, there will come some rift when small differences of opinion will trigger when conflict of interest comes.  This happened in several such religious and spiritual communities.  At least in India, where social life is very strong, it is only a family that can give some kind of solace and comfort to any person but not any imagined community of like minded people. Even the Old Age home where they claim that they are living a community life, I don’t agree with.  There no one is committed for anyone and money alone will talk. Of course where they serve freely the inmates live as there is no other option left with them.  Even if some like minded people come together to live as family, when some need comes back in the life of their children then they have to move back to them and cannot continue to live in such a community.  As I was thinking about it I wrote this song.

Secular Song 518 கனவுலகம்

கற்பனை உலகில் வாழ்ந்திருப்பார்

காற்றினில் ஏறி பறந்திந்திருப்பார்

வித்தைகள் பலவும் காட்டிட்டுவார்

வேடிக்கையாகவும் பேசிடுவார்

கனவு முடிந்து எழுந்தவுடன்

கற்பனை யாவும் ம(றை)றந்துவிடும்

கண் முன் உள்ள வாழ்வு மட்டும்

உண்மை என்று புரிந்துவிடும்

கனவு காண்பது தவறல்ல

கற்பனை செய்வதும் குற்றமல்ல

அதன்படி வாழ்வும் அமையவேண்டி

ஆசைப்படுவதும்  வீணுமல்ல

ஆயினும் நடைமுறை என்னவென்று

அவசியம் நாம் பார்க்க வேண்டும்

அதை விடுத்து பிறரைப் பார்க்க

காணும் கனவு மறைந்துவிடும்

தனது பொறுப்பை உணர்ந்து கொண்டு

அமைந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு

அதில் பிறரை இணைத்துக் கொண்டு

வாழும் வாழ்வே நிறைவு தரும்

மத்திகிரி, 21-10-2019, இரவு 11.00

Secular Song 518 Dream world

They will live in a dream world

And they will soar in the air to fly

They will show several magic

And they will talk very amusingly

When they wake up from the dream

All their imagination will disappear

Then they will realize that

The present life which is before them alone is real

Nothing wrong in dreaming (about life)

It is not a crime to imagine about life

It is not a vain desire

To have a life accordingly

But we should also see

What is practical?

Leaving it, if we began to see others’ life

Then our dream will disappear

The life which one lives

Realizing one’s own responsibility

Accepting the life which has come joining others in it

Alone will give satisfaction

Mathigiri, 21-10-2019, 11.00 p.m.

Secular Song 519

When I read a few messages which were exchanged in one Whatsapp group where they wrote a lot about life with much thinking, contemplation and reflection, I wrote this song.  As long as we have a mind or brain to think we cannot avoid thinking about various things in life.  However there are millions of people who instead of thinking too much about life stoically they try to live the life soberly as it comes. But those who have the luxury of time and means to sit and think too much about life alone write such things about life.  Doing this they are unable to live their life as it comes with content and satisfaction.  But they live with some kind of frustration with melancholic notes.  They not only think about their life but also begin to think for others who do not want to think too much about life or do not have time, energy and luxury to think.  And try to impose their ideas and ideals on them. But thankfully common people, not even having time and access to read such babblings about life, continue to live soberly enjoying their everyday life as it comes without much confusion about life.  As long as we have a mind or brain we cannot avoid thinking and nothing wrong in it or also writing about it (like this song and reflection).  But we all should realize that there is a limitation even for this thinking and we should not allow our thought process to disturb our life too much.  As I too often think too much I live with some kind of frustration and negativity about life, though I try to live as per my golden principle of ‘one day at a time’.

Secular Song 519 சிந்தையால் இழந்தோம்

சிந்தித்து சிந்தித்து வாழ்வை/வாழ மறந்தோம்

வாழும் வாழ்வை சிந்திக்க மறந்தோம்

சிந்தையின் படியே வாழ நினைத்தால்

சிந்திக்கும் திறனை முற்றிலும் இழப்போம்

சிந்திக்க நேரம் ஏதுமே இன்றி

சிந்திக்கத் தேவை ஏதுமே இன்றி

வந்திடும் வாழ்வை ஏற்றுக் கொண்டு

வாழ்ந்து முடித்தவர் கோடியில் உண்டு

அவரின் வாழ்வை ஆய்ந்து பார்த்து

அதற்கு ஆயிரம் விளக்கமும் தந்து

எவரும் புரியாத விடைகளும் சொல்லி

சிந்தையால் தோற்றவர் பலரும் உண்டு

சிந்திக்கத் தேவை இன்றி வாழ்வோர்

சிந்திக்க வேண்டும் என்று எண்ணி

சிந்தித்து வாழ்வை இழந்த சிலர்

சிந்தித்து தத்துவம் பலவும் தந்தார்

நல்ல வேளை நன்கு வாழ்வோர்

அவற்றை யெல்லாம் படிக்க வில்லை

ஆகவே அவர் குழம்ப வில்லை

அவரின் வாழ்வில் குழப்பமும் இல்லை

சிந்தை ஒன்று இருக்கும் வரையில்

சிந்திக்கத் தேவை நிறையவே உண்டு

ஆயினும் அதற்கோர் எல்லையும் உண்டு

அதை சிந்தித்து வாழ்வது நன்று

மத்திகிரி, 22-10-2019, இரவு, 11.00

Secular Song 519 We lost because of our mind (thinking)

As we think too much we forget to live

(As we think too much we failed to live)

And we refuse to think about the life which we are (actually) living

If we want to live only as per our thoughts

Then we will completely lose our mind

Millions are there who lived their life properly

Without having time to think too much

Without any need to think too much (about life)

Accepting the life which they are living

At the same time there are many who were defeated in life by

Analysing other’s life properly

Giving thousands of explanations to it

Giving many answers which no one understands

Thinking that those who live without any need to think

Should think about (their life) properly

Many who lost their life (by thinking for others?)

Gave many philosophies about life to others

Fortunately, those who live properly

Never read those writings

Therefore, they were not confused (about life)

And there is also no confusion in their life

As long as we have a mind

There are many needs to think

But there is also a limit for that

It is better to live properly ‘thinking’ about it

மத்திகிரி, 22-10-2019, இரவு, 11.00

Secular Song 520

Already in one previous song I lamented my infatuation with reading.  I know there is much benefit in reading and many people become very wise people because of their reading.  But sometimes I feel that I become addicted to reading.  Anyhow I think that it is a good addiction.  As long as scholars are there to write I won’t stop reading books.  Anyhow as there are some limitations even for the brain, I think one day I have to stop it and with this hope I continue to read.

520 நூலென இளைத்தேன்

நூல் பல படித்து

நூலென இளைத்தேன்

நேரத்தை காலத்தை

வீணிலே கழித்தேன்

மூளைக்கு அதிக

வேளையும் கொடுத்தேன்

மூடன் என்ற

பெயருமே எடுத்தேன்

படித்தது ஒன்றும்

நினைவிலே இல்லை

நினைவில் நின்றது

பயன்தர வில்லை

என்னவோ பொழுது

போயிட வென்று

ஏனோ நானும்

நூல்பல படித்தேன்

இது ஒரு மனநோய்

என்று எண்ணவா

இல்லை அவசியம்

என்று உணரவா

இதுவரை படித்து

அறிந்தவையாலே

கண்ட பயனேது

என்று கேட்கவா

படிக்காத மேதைகள்

பாரினில் இருக்க

படித்தவர் பலருமே

அவரினும் தாழ்ந்திருக்க

அறிய வேண்டி

நானும் படிப்பதால்

அறிவிலும் வளரவில்லை

அதிகமாய் அறியவில்லை

இதுவரை நானும்

அறிந்தவையாலே

எவ்வித பயனும்

எவரும் பெறவில்லை

ஆயினும் நானும்

படிப்பதை விடவில்லை

அதற்கான காரணம்

கிடைக்க வில்லை

எழுதிட சான்றோர்

இருக்கின்ற வரையில்

படிப்பதை நிறுத்த

எனக்கும் வழியில்லை

என்றேனும் ஒரு நாள்

இதுவும் நின்றிடும்

என்கிற நம்பிக்கை

மட்டும் விடவில்லை

மத்திகிரி, 24-10-2019, இரவு, 11.00

Secular Song 520 I worn out

Reading many books

I become worn out

I wasted my days and time

Unnecessarily

I gave too much

Work to my brain

And earned the

Name as a fool

I don’t remember

All that I read so far

There is no use

Because of which I still remember

In order to

Kill the time

Somehow

I am reading books

Should I think that?

This is some sickness of mind

Or should I think that

This is essential in life?

Or should I ask

What is the use?

Because of

All the readings so far

As there are many

Unlearned wise men

And all those who learned

Remain lower to them

As I too read

Merely to gain information

I neither grew in my intellect

Nor I knew many things

No one ever

Gained anything

Because of

All my readings

Still I didn’t

Give up my reading

And I couldn’t find

The reason for this

As long as there are

Scholars to write

There is no hope

For me to stop reading

But I never give up

The hope that

One day this

Also will come to an end

Mathigiri, 24-10-2019, 11.00 p.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *