Secular Songs 571 to 575

Secular Song 571

For comments see the article: Mustache and Porridge

Secular Song 571 எட்டாத ஒன்று

எட்டாத ஒன்றை

பறித்திட்ட நினைத்தால்

எம்பி குதிக்கணும்

வழி வேறு இல்லை

கால்களும் நொந்திடும்

கைகளும் வலித்திடும்

கழுத்து இறுகி

தலையும் சுற்றிடும்

ஆயினும் ஆசை

பட்டது கிடைக்காது

உள்ளம் தவித்திடும்

உதவியைத் தேடிடும்

உதவிக்கு வருபவர்

பங்கு கேட்ட

நம்பங்கு கிடைத்தாலும்

மனம் வருந்தும்

கொடுக்க மனமின்றி

மறுக்க  வழியின்றி

இறுதியில் மனதும்

பேரம் பேசும்

எத்தனைக் கொடுப்பது

எவற்றைக் கொடுப்பது

என்றெண்ணி குழம்பி

மனது சோரும்

உதவிக்கு வந்தவர்

கேட்காமல் இருக்கணும்

நாமாகத் தருவதை

வாங்கி செல்லணும்

என்கிற எண்ணம்

நமக்குள்ளே இருக்க

வெளியாக நடித்து

பயனும் இல்லை

எட்டாது என்று

தெரிந்த பின்னாலே

முற்றாக அதை

மறந்திட வேண்டும்

அடையலாம் என்று

ஆசை பட்டால்

அடுத்தவர் பங்கை

நிச்சயம் தரணும்

கூழுக்கும் ஆசை

மீசைக்கும் ஆசை

என்பது நடக்காது

இதையும் உணரணும்

கூழை குடித்து

மீசையைத் துடைத்தால்

வயிறு நிரம்பும்

மீசையும் இருக்கும்

குருகுலம், 3-10-2021, இரவு, 10.45

Secular Song 572

Haste is Waste in every act.  In the name of discipline if we rebuke others unnecessarily only keeping our interest then it will damage the relationship.  At the same time in the name of patience if we tolerate indiscipline then it will bring more trouble to all.  Keeping a balance in between is the art of life.  But in anything we should avoid haste.

Secular Song 572 பதறிய காரியம் சிதறும்

ஆத்திரப் பட்டு அவசரப் பட்டு

செய்திடும் எந்த காரியம் ஆயினும்

தந்திடும் பாதிப்பு தனக்கும் பிறர்க்கும்

கொஞ்சமாவது நாம் சிந்திக்க வேண்டும்

நீடித்த பொறுமைக்கும் எல்லை உண்டு

நிச்சயம் அதற்கொரு வரையறை உண்டு

பொறுமையின் பெயரால் செய்திடும் தாமதம்

பலவித இடைஞ்சல் தருவதும் உண்டு

இரண்டுக்கும் இடையில் சம நிலை கண்டு

காரியம் செய்வதில் பயனும் உண்டு

ஆயினும் அந்த சமநிலை தன்னை

அடைவது பற்றி கேள்வியும் உண்டு

சுயத்தேவை மட்டும் மனதிலே கொண்டு

செயல்பட நினைப்பது நிச்சயம் தவறு

பிறர் தேவை தன்னை எண்ணிடும் போது

சமநிலை தன்போல் வருவதும் உண்டு

சுயத்தேவை பிறர் தேவை இரண்டுக்கும் நடுவிலே

பலவிதப் போராட்டம் இருப்பதும் உண்டு

சுயத்தேவை தன்னை முற்றாக துறக்க

பிறர் தேவை நிறைவேற்ற முடியாது நம்பு

தன் போல் பிறரையும் நேசிக்கும் போது

பிறருக்காக நாம் வாழ பெலனும் கிடைக்கும்

தன் காலில் தான் நிற்க முடிந்தால் மட்டும்

நம் தோளில் பிறரை சுமந்திட முடியும்

தனித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை

பிறருக்காக வாழ்வது முற்றிலும் மாயை

தன்னோடு பிறரையும் பிறரோடு தன்னையும்

சேர்த்து வாழ்வதில் உள்ளது சமநிலை

குருகுலம், 27-11-2021, காலை 5.00

Secular Song 572 Haste is Waste

Anything done in haste

Will bring damage

To oneself and others

About this  we should thinking

But long endurance is impossible

There is a limitation for that also

The delay that we take

In the name of patience might bring further troubles

Finding a balance in between them

If we act, there will be profit in it

But what is that balance

Is a million dollar question

It is indeed wrong doing things

Only keeping our personal interest

When we think about others need

That balance might come on its own

There might be several struggles

In between self interest and others need

But we cannot fulfil others need

At the cost of our own need, believe this

When we love as others as oneself

We will get strength to live for others

When we manage to stand on our own legs

Then alone we can carry others on our shoulders

Living a lonely life is not life indeed

But living only for others is completely an illusion

But the balance is in when we live

For living WITH others and also for us

Gurukulam, 27-11-2021, 5.00 am.

Secular Song 573

Life is full of contradictions.  Merely asking some question about the contradiction won’t solve the problem.  Sometimes it is better to live with contradiction as that is not only part of life but several times remain the nature of life.

Secular Song 573 முரண்பாடு

வேண்டாத கேள்வியும்

விரும்பாத பதிலும்

ஒன்றாக சேர்ந்து

வந்திடும் போது

கேள்விக்கு விடையை

தேடியே போகவா

பதிலுக்கு பதில்

கேள்வி கேட்கவா

இதுபோன்ற தருணம்

வாழ்வில் வரும்போது

எளிதாகக் கடந்திட

வழியும் உள்ளது

முரண்பாடு கொண்டதே

வாழ்க்கை என்பது

முதலிலே நாமும்

முற்றாக உணரணும்

எளிதாக முரண்பாட்டை

போக்குதல் என்பது

எளிதல்ல என்பதை

நன்றாக புரியணும்

ஒருவாறு புரிந்து

முரண்பாட்டை கடந்து

எளிதாக நாமும்

சென்றிட்ட போதும்

அதனால் உண்டான

பக்க விளைவுகள்

அடிக்கடி வந்து

தொல்லைகள் தந்திடும்

அவை கண்டு கலங்கி

அச்சமும் கொண்டால்

தொடர்ந்து பயணிக்க

இயலாது போகும்

ஆகவே கேள்வி

கேட்பதை விட்டு

வந்த வாழ்வை

ஏற்றுக் கொள்ள

கேள்வி பதிலுக்கு

வேலையே இல்லை

கேட்டாலும் கேள்விக்கு

பதிலேதும் இல்லை

30-11-2021, குருகுலம், இரவு, 11.00

Secular Song 573 Contradictions

When unnecessary question

And unwanted answer

Come together

In life

Should we search answer

To that question

Or should we ask

Another question to the question

When such situations

Come in life

There is a simple

Way to escape from it

we should

Recognize that

Life is

Full of contradictions

We also should

Understand that

It is not that much easy

To remove all the contradictions

Somehow if we

Mange to understand

The contradictions

And move ahead

The consequences

Of that choice

Might come often

And give lots of troubles

If we are afraid of it

And bewildered by it

Then we couldn’t

Proceed further in life

Therefore by

Giving up asking

Unnecessary questions

And if we accept the life as it comes

There is no need

For answer to any question

Even if we ask questions

There won’t be any answer to them

Gurukulam, 30-11-2021, 11.00 pm.

Secular Song 574

Being a boss is a lonely thing.  This is not only applicable to any leader but also anyone who accepts some responsibility anywhere—be it big or small.  Before we do, no one will give proper suggestions or come forward to help.  But once we accomplish our best, finding lots of fault in it, will ask so many unnecessary questions.  This might further irritate us.  But there is no use arguing with them or trying to give a proper response.  Better keep quiet and do your best.

Secular Song 574 எளிதாய் கேட்பார்

கேட்பவர்க் கென்ன

எளிதாக கேட்பார்

பதிலைத் தந்தால்

நம்மிடம் முறைப்பார்

வீணான கேள்வி

அவரும் கேட்டால்

வேண்டாத பதில் வரும்

என்பதை மறந்தார்

நாம் படும் வேதனை

வலிகள் எல்லாம்

புரிய மறுத்து

வாதங்கள் செய்வார்

நம் நிலை அவருக்கு

எடுத்துச் சொல்லியும்

இதுபோன்ற கேள்விகள்

மீண்டும் கேட்பார்

புரியவைத்து இனி

பயனில்லை என்பதை

நாம் நன்கு

புரிந்து கொண்டு

ஒன்று நாம்தான்

ஒதுக்கிப் போகணும்

அல்லது தக்க

பதிலடி தரணும்

ஆயினும் இரண்டாலும்

பயனும் இல்லை

ஏனெனில் வேதனை

அதிகம் ஆவதால்

வெந்த புண்ணில்

வேலையும் பாய்ச்சி

பிடுங்கி நம் கையில்

மீண்டும் கொடுப்பதால்

இதுபோன்ற மனிதர்

இருக்கும் வரையில்

நம் போல் பலரும்

வேதனைப் படுவார்

ஆயினும் இது ஒன்றும்

புதியதும் இல்லை

ஆண்டாண்டு காலம்

தொடர்ந்து வருவதால்

அவர் போல நாமும்

இல்லாது இருக்க

அவர் மூலம் பாடம்

நாமுமே கற்று

பிறரின் துன்பத்தை

போக்கிட உதவணும்

இல்லை என்றால்

ஒதுங்கி நிற்கணும்

அதை விடுத்து

உதவுறேன் என்று

இடக்கு முடக்காய்

கேள்விகள் கேட்டு

எரிச்சல் கோபம்

இன்னும் கிளப்பாமல்

வாயை மூடி

வாழப் பழகுவோம்

குருகுலம், 30-1-2022, இரவு, 10.30

Secular Song 574 Questioning easily

Those who question us

Will ask very easily

When we give the answer

They will become upset

They will forget that

If unnecessary questions

are asked, the same kind of

Answers will come

They will argue

Not realizing

All our troubles

And pains that we under go

Though we try to

Help them to understand

Our situation, they will

Continue to ask similar questions

Either we should

Keep away realizing that

There is no means

To help them to understand

And we should

Keep away from them

Or we should give

Proper response

But there is no use

In both of them

As it will increase

The pain further

By adding insult

To the injury

They will plug the arrow

And give back to us

As long such people

Exists on earth

Many like us

Would suffer

But this also is

Not new one on this earth

As this story

Continues from long past

Learning a lesson

From them so that

We won’t behave

Like them

We should strive

To remove others’ pain

Otherwise, we should

Keep away from it

Leaving that

In the name of helping

By asking unnecessary

Questions to them

Not provoking them

Further, better let us

Try to live

Remain quietly

Gurukulam, 30-1-2022, 10.30 pm.

Secular Song 575

I don’t know the reason why I even wrote this poem. From the morning the first four lines of this poem were echoing in my mind continuously and even when I was busy with other works.  So, before my morning meal, as inspiration came, I wrote this song and shared it with few.  And one person in her response asked: Vazhkai kanakku is nice.  Add and subtract (or multiply and divide) at the same time—can you please elaborate.  And in response I wrote:

Adding and subtracting is: income and expenses. Dividing  while multiplication  is savings and protection. This is applicable in all the areas of life like,  education,  learning,  wealth,  health, relationship,  bhakti etc. But the end result will remain the same for all.  However, it depends upon everyone’s need and talent to put the number on the right or left side of the result. If you put on the right side you belong to the right wing, and left wing if you put on the left side.

கூட்டும்போதே கழிப்பது: வரவு செலவு, பெருக்கும்போதே வகுப்பது : யோகக்ஷேமம் (சேமிப்பு-பாதுகாப்பு). இது கல்வி, கேள்வி, செல்வம், உறவு, ஆரோக்யம், பக்தி என வாழ்வின் அனைத்திற்கும் பொருந்தும். ஆனால் இறுதி விடை அனைவர்க்கும் ஒன்றாக இருக்கும். வந்த விடைக்கு வலது, இடது புறமாக இலக்கத்தை போட்டுக் கொள்வது அவரவர் தேவை மற்றும் திறமையைப் பெருத்தது. வலது பக்கம் போட்டால் வலது சாரி, இடது பக்கம் போட்டால் இடது சாரி. 

Secular Song 575 வாழ்க்கைக் கணக்கு

கூட்டி கழித்து

பெருக்கி வகுத்து

வாழ்வு தன்னை

வாழ்ந்த பின்னே

வந்த விடை

என்ன வென்று

யாரும் எனக்கு

சொல்ல வில்லை

கூட்டி முடித்து

கழித்து பார்த்தேன்

பெருக்கி முடித்து

வகுத்து பார்த்தேன்

வந்த விடை

தன்னைக் கண்டு

தலை சுற்ற

நானும் நின்றேன்

இந்த கணக்கு

புரிய வில்லை

என்று புலம்பி

நானும் இருக்க

விடை எனக்குத்

தெரியும் என்று

வாழ்ந்த மனிதர்

வந்து சொன்னார்

கூட்டும் போதே/முன்னே

கழிக்க வேண்டும்

பெருக்கும் போதே/முன்னே

வகுக்க வேண்டும்

வாழ்வு என்ற

கணக்கை மட்டும்

மாற்றி செய்து

பார்க்க வேண்டும்

என்று அவரும்

சொன்ன பின்னே

அதையே நானும்

செய்து பார்த்து

வந்த விடையை

கண்ட பின்னே

மீண்டும் சென்று

அவரைக் கேட்டேன்

“இந்த விடை

அன்றி வாழ்வில்

எந்த விடையும்

வந்திடாது

வந்த விடையை

மாற்றி எழுத

இறைவானாலும்

முடிந்திடாது”

என்று அவரும்

சொன்ன பின்னே

விடையை கேட்டுப்

பயனும் இல்லை

அவர வரே

போட்டுப் பார்த்து

அறிவ தன்றி

வழியும் இல்லை

குருகுலம், 24-1-2023, காலை, 11.00

575 Life’s arithmetic

After living

The life

By adding, subtracting

Multiplying and dividing

No one has

Revealed the answer

Which they

All received

I detected

After adding

After multiplying

I divided

Seeing the answer

Bewildered much

I stand still

As my head was rolling

When I lamented

That I cannot

Understand this

Arithmetic of life

Those who lived

Came and told me that

They know

The correct answer

When you add [or before add]

You have to subtract

When you multiply [or before that]

You have to divide

We have to

Do the life’s arithmetic

Completely in a

Different manner

Once they

Told like this

After I have

Done the same

When I saw the

Result that came

I went again

And asked them:

“Other than

This result

No other

Result will come

Even God cannot

Change the result

That has

Already came”

Once they

Answered like this

There is no use in

Revealing the result

Unless each one

Do the calculation

On their own

To know the answer

Gurukulam, 24-1-2023, 11.00 am.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *