Secular Song 576
The real struggle in life is not to give up, however we might become depressed but get up again to fight again to achieve the goal. At the sametime we have to accept the reality that when we fail, then naturally we become depressed and even want to give up. That time the best solution is to weep over our failures and get rid of the burden in the heart. Those who think that not weeping won’t help and it is the sign of weakness are wrong. Tears are also a gift of God like a smile. Both help us to overcome so many tensions in life and give hope and courage to face the reality in life.
Secular Song 576 வென்று காட்டணும்
போராடிப் பார்த்தாலும்
புலம்பித் தவித்தாலும்
இறுதியில் விடையோ
ஒன்றாக உள்ளது
இதுதான் விடையென
தெரிந்தத்தின் பின்னாலே
இரண்டாலும் பயனில்லை
நன்கு புரியுது
ஆயினும் போராடிப்
பார்த்ததின் விளைவாக
கிடைத்த அனுபவம்
புதிதாக இருக்குது
அதுபோலப் புலம்பித்
தவித்ததின் பயனாக
மனபாரம் சற்றுதான்
குறைந்து போகுது
இவை இரண்டும்
இல்லாமல் வாழ்வை
கொண்டு செல்வது
இயலாத காரியம்
போராடிப் பார்ப்பவர்
புலம்பிடும் நாள்வரும்
புலம்பி சோர்ந்தபின்
போராடும் குணம் வரும்
ஆகவே இரண்டும்
ஏதோ ஒரு விதம்
இலக்கினை நோக்கி
ஒட்ட வைத்திடும்
போராடி சோர்ந்தபின்
புலம்பி ஓயணும்
அதன்பின் மீண்டும்
போராட எழும்பணும்
அவையாலே நாம் பெறும்
அனுபவம் கொண்டு
நிச்சயம் வாழ்விலே
வென்று காட்டணும்
குருகுலம், 31-1-2022, இரவு, 10.15
Secular Song 576 Should Win
Whether we struggle
Or lament
The final answer
Remains the same
Once we know
this is the final result
There is use
In both of them
Still as we
Gained more experience
Though our
Struggles
When we lament
Over our failures
It will reduce
The heart burden
It is not possible
To carry the life
Without
Both of them
A day will come to mourn
For those who struggle
Once they mourn
They will get the spirit to struggle further
Therefore, both of them
In one way
Will push us to run
Towards the goal
Once we become tired
After a long struggle we should cry
Then we should get up
To fight again
Through the experience
That we gained
By them
We should win in life
Gurukulam, 31-1-2022, 10.15 pm.
Secular Song 577
Sharing our heart burden is very important for every human being. At the same time in the name of talking openly and straightforward there is no point in confronting others who created that burden. We should develop the art of indirectly communicating our disappointment and be careful enough to share with only those who will keep our burden as a confidential matter not making it a rumour.
Secular Song 577 சாத்தியம் ஆகும்
இனி பேசி பயனில்லை
என்கிற வார்த்தையை
எத்தனையோ முறை
நாம் சொன்னாலும்
பேசாமல் இருந்தால்
பாரம் பெருகும்
என்பதை நாமும்
அறியாமல் இல்லை
உள் வைத்தால் துக்கம்
சொன்னாலோ வெட்கம்
என்ற முதுமொழி
உண்மையாய் இருந்தும்
உள்ளே வைப்பதா
வெளியே சொல்வதா
என்கிற வாதமும்
அடிக்கடி வந்திடும்
சொன்னால் பாரம்
குறைந்த போதும்
அதுவே புரளியாய்
மாறிடக் கூடும்
என்று அனுபவம்
சொன்னதை நினைந்து
விடை தெரியாமல்
தவித்திடும் போது
யாரிடம் எதை
எப்படிச் சொல்லணும்
என்பதை அறிந்து
அதன்படி செய்யணும்
நேரடியாக சில
சொல்வதைச் சொல்லி
இலை மறைவாக
மற்றதைக் கூறி
ஒருபுறம் பாரத்தை
இறக்கி வைக்கணும்
மறுபுறம் புரளியாய்
மாறாமல் காக்கணும்
ஆனால் இதுவும்
எளிதல்ல அறிவோம்
அவரவர் நிலையும்
மாறாக இருப்பதால்
கால நேரம்
சரியாக பார்த்து
இடம் பொருள் ஏவல்
நன்றாக உணர்ந்து
சமநிலை தன்னை
அடையும் போது
சாத்தியம் ஆகும்
இந்த கலையும்
குருகுலம்,3-2-2023, மாலை,5.00
Secular Song 577 It is possible
‘There is no use
Talking further’
Though we utter
this several times
Still if we don’t share
Burden will increase
We also know
This very well
If we keep within
It will increase our sorrow
But if we share openly
It will bring shame
Therefore, a debate
Might come often
Whether to share
Or keep it in oneself
Though sharing
Might be reduced the burden
Several times it will
End up becoming a rumour
As the past experience
Has taught this clearly
As we struggle
Not knowing proper answer
We should know
To whom, how and
When to
Share and how much
Sharing few things
Openly and
Sharing rest
In indirect manner
On the one side
We should reduce the heart burden
On the other side guard
Not to create rumour
But this too is
Not that much easy
As each one’s situation
Is different from each other
Knowing proper time
And opportunity
And knowing place
And situation correctly
When we reach
A balance in this
This also
Will become easy for us
Gurukulam, 3-2-2023,5.00 p.m.
Questing about life, particularly to know some answers, clarity and direction to further proceed is important in life. AT the same time, how many questions that we might ask and try to resolve the issue by making decisions, only as we begin to live by implementing them, we can know for sure how to live. So better not to ask questions often in life. And try to live life as it comes.
Secular song 578
Secular Song 578 வாழ்வின் பகுதி
இதுபோல போகும்
என்னிந்த வாழ்வு
எதுவரை போகும்
என்பதே கேள்வி
எவ்வித பதிலும்
எனக்கு வேண்டாம்
ஏனெனில் அதனால்
பயனேதும் இல்லை
நான் சொன்னாலும்
பிறர் சொன்னாலும்
அதன்படி வாழ
போவதும் இல்லை
வாழ்ந்த பின்தான்
வாழ்வும் புரியும்
என்பது ஒன்றே
மாறாத உண்மை
பதில் வந்த பின்னே
கேள்விக்கு இடமேது
பதிலே கேள்வியாய்
மாறிடும் போது
ஆயினும் கேள்வி
வராமல் போகாது
அதுவும் வாழ்வின்
பகுதியாய் ஆனது
ஆகவே அதைப்பற்றி
எண்ணாமல் இருப்பது
அனுதின வாழ்வுக்கு
மிகமிக நல்லது
புரிந்த வாழ்வை
வாழ்வது முறையா
புரியாத கேள்வி
கேட்பது சரியா
இந்த கேள்விக்கு
பதிலைக் கூறு
அதன்பின் நடப்பதை
நீயும் பாரு
குருகுலம், 1-04-2022, இரவு 11.00
Secular Song 578 Part of life
My life which goes
Like this
Will go how long
Is the question now
I don’t need
Any kind of answers
As there is no
Use in them
Whether I decide
Or others guide
I am not going
To live accordingly
Life will become
Clear, only after living
This alone is
Unchanging Truth
Once this answer came
Where is the place for any questions
When the answer itself
Becomes a question
Yet, questions
Will definitely come
That also become
Part of life
Therefore not
To think about it
Is indeed
Good for life
It is correct to live the life
After clear understanding
Or is it correct asking
Unclear questions
First give answer
To this question
Then see
What will happen
Gurukulam, 1-04-2022, 11.00 pm.
Secular Song 579
Maturity will come in life only when we reduce our talk and try to keep our eyes shut, not observing too much about others’ lives. Proper training, resolution and deep conviction is essential for this. Once we develop this art of life, maturity will come on its own.
Secular Song 579 பக்குவம் தேவை
பார்ப்பதை தவிர்த்து
பேச்சையும் குறைத்தால்
பக்குவம் மனதில்
தன்போல் வந்திடும்
இவ்விரு புலன்கள்
செய்திடும் செயல்கள்
எத்தனை தாக்கம்
நம்மிலே தந்திடும்
கண்டதே காட்சி
கொண்டதே கோலம்
என்ற முதுமொழி
எதைச் சொல்ல வந்தது
சிறிய நாவால்
சொல்லிய சொல்லால்
விளைந்த விளைவுகள்
எத்தனை உண்டு
பார்க்க ஆயிரம்
நல்லவை இருந்தாலும்
அவற்றிலே மட்டும்
பார்வை பதியுமா
பேசிட நல்லவை
கோடியாய் இருப்பினும்
அவற்றை மட்டும்
நாவும் பேசுமா
இவ்விரு புலனும்
தன்போல் இயங்குமா
மனமின்றி அவையும்
இயங்கிட கூடுமா
பார்க்க பேச
பக்குவம் தேவை
அதனைப் பெற்றிட
மனதும் தேவை
ஆயினும் பக்குவம்
இல்லாது போனால்
பக்குவ மனதும்
எப்படி வந்திடும்
கண்ணையும் நாவையும்
கருவியாய் கொண்டு
பக்குவ மனதால்
அவற்றை வெல்ல
மனதில் பக்குவம்
மேலும் வளர
பக்குவ மனதும்
வந்திடும் தன்னால்
குருகுலம், 1-04-2022, 11.30 இரவு
Secular Song 579 Maturity is in need
Maturity will
Come on its own
If we rude our talk
And close our eyes
All that these two things
Are doing in life
How much they
Affect us
‘Don’t live the life
As it demands’@
What this proverb
Try to teach?
What are the consequence
That this small
Tongue has produced
After it uttered so many words
Though many
Good things are to watch
Will our eye
Notice only them
Though there are
Million things to talk properly
Will our tongue
Talk only them
Will both organs
Act on their own
Can they function
Without our mind
To talk and watch
Maturity is essential
To attain that
We need proper mind
But if there is
No maturity
How a matured
Mind will come
Using both
Eyes and tongue
Once we manged to win
Them with a matured mind
As maturity
Grow more and more
Matured mind will
Come on its own
@ This proverb is very difficult to tanslate
Gurukulam. 1-04-2022, 11.30 pm.
Secular Song 580
For comments see the article: Greatness of Women
580 பெண்மையின் மேன்மை
பெண்ணின் பெருமையை
பேசிட வார்த்தையுண்டோ
பெண்ணின் பொறுமையை
அளவிட வழியுண்டோ
கருணையும் கனிவும்
அவளிரு கண்களாம்
கடமையும் சேவையும்
அவளது அடையாளம்
கருவினில் தோன்றி
கல்லறை வரையில்
மனத்தாலும் உடலாலும்
பிறரை சுமந்திருப்பாள்
முதுமை வந்தாலும்
முடங்கியேக் கிடந்தாலும்
தள்ளாடி எழுந்தேணும்
தன்பணி செய்திடுவாள்
தன்னையேத் தருவதில்
தெய்வத்தை விஞ்சுவாள்
தாயாக தான்மாறி
தெய்வத்தைக் காட்டுவாள்
பெண்ணிலேத் தொடங்கி
பெண்ணிலே முடியும்
வாழ்வைப் புரிவது
மிகமிக அவசியம்
படைப்பின் முழுமையை
அவளிடம் வைத்தது
இறைவன் செய்திட
மாபெரும் இரகசியம்
அவளிடம் தொடங்கி
அவளோடு வாழ்ந்து
அவளிடம் முடித்தவர்
மட்டுமே அறிவார்
அந்த இரகசியம்
புரிந்த பின்னாலே
அவள்மூலம் தன்வாழ்வில்
நிறைவை அடைவார்
ஆணல்ல பெண்ணல்ல
அருவல்ல உருவல்ல
என்றே இறைவனை
எப்படிச் சொன்னாலும்
தாயாக நம்முன்னே
வாழ்ந்திடும் பெண்ணிலே
தானே அவளாகி
இறைவனும் இருப்பான்
இன்னும் எத்தனை
சொன்னாலும் போதாது
பெண்ணின் பெருமைக்கு
எல்லையும் ஏது
குருகுலம், 20-06-2022, 1.15 p.m.
Secular Song 580 The greatness of womanhood
Is there any language
To talk about the greatness of womanhood
Is there any measuring system
To measure the patience of woman
Compassion and Grace
Are her two eyes
Duty and Seva
Are her identity
From her birth
And till going to grave
She will carry others
Both in her body and heart
Though become old
And remain crippled
She will continue her seva
Even with much pain
She will overcome even God
In self-giving
Becoming a mother
She will show God to us
It is essential
To understand the life
Which begins with a woman?
And ends with her
Keeping the completeness
Of His creation in her
Is indeed the secret
That God has done
Those who
Began with her
And also end their life in her
Alone will understand this
Once they understood
That secret
They will become complete
Through her in their life
How much we say that God is
Neither a man nor woman
He is neither has form
Or remains formless
He also will
Dwell among us
By becoming like her
Who lived as a mother
before us?
How much more we say
It is not enough
Where is any limit
For the greatness of woman
Gurukulam, 20-06-2022 1.15 p.m.
Leave a Reply