Secular Songs 586 to 590

Secular Song 586

Sometimes these kinds of self assessments help me to understand me a little bit.

Secular Song  586 இரண்டின் கலவை

பித்தும் தலைக்கேற

உளறுறேன் என்று

புரியாத பலரும்

என்னை எண்ணுவார்

புரிந்த  சில பேர்

புரிவது கடினம்

என்று எண்ணி

விலகி நிற்பார்

அவரவர் பார்வையில்

இருவரும் சரியாக

இருப்பதை நான்

நான்கு புரிந்து

எனது பார்வையில்

என்னைப் பற்றி

அதன்பின் நானும்

எண்ணத் தொடங்க

முன்னிலும் நிலமை

மோசம் ஆனது

பித்தும்  என்னை

முழுதாய் பிடித்தது

அதுவும் ஒரு விதம் 

நல்லது என்று

அதையே நானும்

விரும்பி ஏற்க 

அங்கே ஒரு

உண்மை பிறந்தது

அதன்பின் என் நிலை 

நன்கு புரிந்தது

தெளிவாய் வாழ்வைப்

புரியும் போது

எத்தனை குழப்பம்

புதிதாக வருது

சித்தம் கலங்கி

புத்தி குழம்பிட 

தெளிவு அங்கே 

சரியாகப் பிறந்தது 

இந்தத்  தெளிவை

உள்ளே வைத்து 

பித்தனாய் வெளியே

நானும் நடித்து 

பிறரைக்  குழப்பி 

என்னுள் தெளிந்து 

குழப்பம் இன்றி

நானும் வாழ 

பித்தன் என்று 

பிறர் சொன்னாலும்

புதிராய் உள்ளேன் 

என நினைத்தாலும்

என்னை நானே 

நன்கு புரிந்து

இரண்டின் கலவையாய் 

என்றும் இருப்பேன்

குருகுலம், 30-07-2022, இரவு 11.30

Secular Song  586 A mix of both

Many think that

I am babbling too much

As they cannot

Understand me properly

Few, who managed

To understand a bit

Will keep away thinking that

It is very difficult to know about him

Understanding that

Both of them are

Correct from their

Point of views

Then as I

Began to think

About me

From my point of view

My later condition

Become worse

To the former

And completely become mad now

But accepting that

One way this is good

And as I began

To accept me as I am

Then a new Truth

Has dawned there

Then I clearly understood

About me

When we understand

The life clearly

How many confusions

Are coming more now

As my bhuddhi is confused

As I became mad

Now a new clarity

Has come now

Keeping this clarity

Within me and

Acting as a mad person

In the out

Confusing others

And remaining clear within me

I live

Without any confusion

If they say that

I am a mad person

Or that I remain

As a riddle

Understanding about me

Very well

I will remain a

Mix of both

Gurukulam, 30-07-2022, 11.30 pm.

Secular Song 587

Several times I find it difficult to convey my thoughts in a proper way due to my many limitations.  At the same time I clearly understood one thing that there is no need to communicate for others to understand about me.  Because irrespective of my attempts to communicate they are not going to understand me completely and each one will live with their own judgement.  This is equally applicable to me also.  As I interplay both ‘clarity’ and ‘understanding’ in a mixed way, like many other poems, this one is very difficult to translate in another language.

587 புரியாத தெளிவு

எதிலும் தெளிவு

இல்லாத போது

எதைச் சொல்லிப்

புரிய வைப்பது

என்னுள் புரிதல்

இல்லாத போது

தெளிவை எப்படி

நானும் பெறுவது

புரிதல் என்பது

புரியாமல் இருக்க

புதிரை நானும்

எப்படி அவிழ்ப்பது

புரிந்தபின் வந்திடும்

குழப்பத்தை எண்ணி

புரியாமல் இருப்பது

நலமாக இருக்குது

புரிந்தவர் என்று

எண்ணிய சிலரை

நாடியே நானும்

அவரிடம் கேட்க

புரிந்ததாய் அவரும்

எண்ணிய எதையும்

புரியும் படியாய்

கூற வில்லை

அவரைக் குறை கூறிப்

பயனும் இல்லை

அவரின் தவறு

அதிலேதும் இல்லை

எப்படித் தெளிவாய்

எவர் கூறினாலும்

எனக்குப் புரியாது

என்பதே உண்மை

இந்தத் தெளிவு

வந்ததன் பின்னர்

புரிந்திடும் ஆர்வம்

நீங்கியே போக

அதன்பின் தெளிவு

வந்தது மனதில்

ஆயினும் சொல்லிட

புரிதல்தான் இல்லை

தெளிவில்லா புரிதலும்

புரியாத தெளிவும்

இணைந்து வாழ்வை

இதுவரை நகர்த்த

புரிதலில் தெளிவும்

தெளிவான புரிதலும்

இல்லாது போனால்

எப்படி வாழ்வது

ஆகவே இரண்டின்

நடுவில் அகப்பட்டு

அலசடிப் பட்டு

ஓய்ந்த பின்னே

தெளிவும் வேண்டாம்

புரிதலும் வேண்டாம்

என்பதைப் புரிந்து

தெளிவாக வாழ்ந்தேன்

இப்படித் தெளிவாக

வாழ்வைப் புரிந்தபின்

இதனினும் தெளிவாக

எப்படிச் சொல்வது

குருகுலம், 10-08-2022, இரவு, 10.30

587 Unclear Clarity

When there is

No clarity in anything

How to help others

To understand me

When there is

No clarity within me

How I am going

To receive clarity

When ‘understanding’ itself

Remains not clear

How I am going to

Solve the riddle

Realizing the confusion

That comes after clear understanding

It is good

Not to understand

When finally

I approached others

Who I that that

They have clarity

They were unable to

Communicate anything clearly

Which they claim to have

Understood very clearly

There is no use

In blaming them

There mistake is

Nothing in this

How much clearly

Anyone communicate

I cannot understand

This is the true

Once this clarity

Has dawned

As the desire to

Understand about me also gone

Then I received

Clarity in my mind

But I don’t have clarity

To communicate it properly

As both Clear understanding

without any clarity

And unclear understanding

Have dragged my life so far

How am I going

To live when

I don’t have clarity in understanding

And clear understanding

Therefore when

Crushed in between them

And become

Tired completely

Neither clarity

Nor understanding is required

And understanding this clearly

I am living with clarity

When I live with

This much clarity

How to communicate

More clearly than this

Gurukulam, 10-08-2022, 10.30

Secular Song 588

I was thinking about various losses that I incurred in my life. But the valuable lesson that I learnt through them is so great that I never consider any loss as real loss but only an investment to gain wisdom.  Someone well said: Our wisdom comes out of experience and our experience comes out of our mistakes.  We should also include loss in this.

Secular Song 588 இழப்பின் நன்மை

எத்தனை இழந்தோம்

இதுவரை வாழ்வில்

இன்னும் இழப்போம்

அதற்கு குறைவில்லை

இழந்ததன் மூலம்

பெற்றது என்ன

என்பதை எண்ண

கவலை தீரும்

இழப்பின் மூலம்

கற்றது எத்தனை

என்பதை நாம்

எண்ண வேண்டும்

இழப்பு தந்திடும்

பாடத்தைப் போல

வேறேதும் நமக்குத்

தருவதே இல்லை

இதை உணர்ந்து

இழப்பது நன்று

என்று எண்ணி

நிம்மதி காண்போம்

எதற்கும் ஒரு

விலையென உண்டு

அதை முதலில்

புரிதல் நன்று

நாம் தந்தாலும்

பிறர் தந்தாலும்

அதுவும் ஒருவித

இழப்புதான் என்று

இழந்ததன் மதிப்பு

என்ன வென்று

பெறுவதன் மதிப்பில்

மட்டுமே உண்டு

பெறுவதன் மூலம்

கற்றிடும் பாடம்

அதற்கு என்ன

விலையும் உண்டு

கற்றதின் மூலம்

வந்திடும் ஞானம்

நிச்சயம் நம்மை

வழி நடத்த

அந்த அனுபவம்

பெற வென்று

இழப்பது ஒரு விதம்

மிகமிக நன்று.

குருகுலம், 20-8-2022, இரவு, 11.30

Secular Song 588 Benefit in losing

How much we have

Lost in life so far

We will lose more

There is no shortage for that

Once we think

All that we gained

Through the loss

Our worry will go

We should think

How much we learnt

Through losing

Something in life

Nothing can teach

Like a loss

A good lesson

In our life

Realizing this

Thinking that

Losing is one way good

Let us find peace

There is a cost

For everything in life

It is better to

Understand this first

Whether we pay it

Or someone else

It is also a loss

Realizing this

We can understand

The value of loss

Only by gaining

In exchange for that

What kind of

Price we can fix

For the lesson

That we learnt through loss

As the wisdom

That we gained

Through that less

Leading us

In order to

Gain that experience

It is good indeed

To lose something

Gurukulam, 20-8-2022, 11.30 pm.

Secular Song 589

Blessed is the man who knows his limitations.  Never bite more than what you can chew.  These golden rules one should follow when he or she promises to help others, particularly in their urgent need.  Simply making any commitment and later if one fails due to even genuine reasons, then the other person alone is more affected by us.  As I have witnessed in several people’s lives, I wrote this song.

Secular Song 589 வாயால் சுடுவார்

வாயால் சுடுவார்

வடையைப் பலரும்

வேண்டா வாதங்கள்

செய்வார் அவரும்

உதவி செய்ய

இயலாத போது

வாயால் சொல்லி

பயனேது கூறு

தன் நிலை அறிந்து

எதையும் சொல்லணும்

தன்பலம் உணர்ந்து

செயலை செய்யணும்

எடுத்தேன் கவிழ்த்தேன்

என்று பேசினால்

சொல்லும் செயலும்

பயனற்றுப் போகும்

சொன்னவரோடு

காரியம் நின்றால்

சொல்வது பற்றி

கவலை இல்லை

சொன்னதை நம்பி

எதிர்பார்த்து நின்றால்

அதன்பின் வந்திடும்

ஆயிரம் தொல்லை

தொடங்கவும் இயலாது

தவிர்க்கவும் முடியாது

செய்வதா விடுவதா

என்றும் புரியாது

ஏன்தான் நம்பினோம்

என்று வெம்பி

நொந்து போவார்

தனிமையில் புலம்பி

ஆகவே பிறருக்கு

உதவுறேன் என்று

அவசர கதியில்

வாக்கு தந்து

முடியா தென்பதை

பின்னாக உணர்ந்து

வருத்தப் படுவதை

தவிர்ப்பது நன்று

குருகுலம், 27-08-2022, இரவு, 11.00

Secular Song 589 Vain promise

Many will roast Vada/donut

Only through their words

They will put forth

So many good arguments [for that]

What is the

Use of giving promise

When one is

Unable to help

Knowing one’s situation

One should promise

One should act

Knowing his own personal resources

If we say something

Just for saying

Then both the action and

Promise will get lost

If the consequences

Stops only with those who promise

We need not worry

About all their promises

If we were expecting

And wait for that

Trusting

Their Promise to give

Unable to begin

Unable to give up

Not knowing whether

To begin or stop

They will get frustrated

Thinking, ‘why we trusted him’?

And lament

Later for that

Therefore giving

Promise in haste

To help

Someone else

Later realizing that

It is not possible

Better to avoid

Feel bad for that

Gurukulam  27-08-2022, 11.00 pm.

Secular Song 590

In taking any decision for common good, the strong should always keep in mind the right to live for the weak.  Doing anything with the principle, ‘might is right’ in the end brings pain to all.

Secular Song 590 எளியவர் உரிமை

நாமொரு எண்ணம்

மனதிலே கொண்டு

அதன்படி வாழ

நினைப்பதும் உண்டு

ஆயினும் சூழ்நிலை

மாறிடும் போது

எண்ணமும் மாற

வாய்ப்பு உண்டு

விட்டுக் கொடுத்து

போவது என்பது

மானுட வாழ்வில்

அவசியம் ஒன்று

ஆயினும் எதனை

விட்டுக் கொடுப்பது

என்கிற கேள்வி

வருகின்ற போது

எளியவர் தேவை

மனதிலே கொண்டு

முடிவுக்கு வருவது

மிகமிக நன்று

உடலாலும் மனதாலும்

பலவீனம் அடைந்து

வாழ்ந்திடும் மனிதர்

ஆயிரம் உண்டு

வாழ்ந்திடும் உரிமை

அவருக்கும் உண்டு

என்கிற எண்ணத்தை

மனதிலே கொண்டு

வலியவர் என்றும்

விட்டுக் கொடுக்கணும்

பிறரும் வாழ்ந்திட

தட்டிக் கொடுக்கணும்

இந்த எண்ணம்

மனதிலே கொண்டு

வாழ்ந்திட நாமும்

முயன்றிடும் போது

அனைவரின் எண்ணமும்

இசைந்து போக

அதன்பின் வாழ்வில்

மகிழ்ச்சி வந்திடும்

நம் எண்ணம் மட்டும்

உயர்ந்தது என்று

தூக்கிப் பிடித்து

வாழ்ந்திட முயன்றால்

எத்தனை வலிமை

நம்மிடம் இருந்தும்

நிச்சயம் வாழ்வு

தோல்வியில் முடியும்

8-9-2022, குருகுலம்,  இரவு 11.45

Secular Song 590 Rights of the weak

We might try to

Live keeping

Something for life

In our mind

But when circumstances

Changes

Our thought also

Will get changed

‘Give and take’

Is essential

For our life

As human

But when the question

Comes

Which one should be

Given up

It is better

To keeping the

Need of the weak

In our mind

Millions are living

Becoming weak

Both in

Body and mind

But they also

Have the right to live

And keeping

This thought in mind

Strong one should

Give up their rights

And should help

Others also to live

Keeping this thought

In our mind

When we try

To live

As all others thought

Also coordinating with it

Then joy will come

In our lives

But if we insist

That my way is highway

And try to live

Accordingly

How much strength

We might have

Indeed, life will

End in failure

8-9-2022, Gurukulam, 11.45 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *