Secular Songs 596 to 600

Secular Song 596

A familiar Indian theme: So many proverbs, songs in various languages point out the mixture of good and evil; benefit and loss, joy and suffering in every area of life.  Even in suffering and evil there will be something good.  Only a discerning person can see that and not much disturbed by all the negativities in life

A familiar Indian theme: So many proverbs, songs in various languages point out the mixture of good and evil; benefit and loss, joy and suffering in every area of life.  Even in suffering and evil there will be something good.  Only a discerning person can see that and not much disturbed by all the negativities in life

Secular Song 596 நன்மை தீமை

நன்மை என்று

செய்வது எல்லாம்

நம்மையாய் என்றும்

இருப்ப தில்லை

தீமை என்று

செய்யாமல் விடுவது

தீமையாய் முடிந்து

போவதும் இல்லை

நன்மை தீமை

செயலில் இல்லை

நம் மன ஓட்டத்தை

பொறுத்ததே அவையும்

முடிந்த பின்னர்தான்

முடிவும் தெரியும்

எவ்விதம் செயலும்

முடிந்தது என்று

எப்படி முடியினும்

எல்லா செயலிலும்

எதோ நன்மை

ஒன்று இருக்கும்

தீமையாய் முடிந்த

செயலிலும் கூட

தந்திடும் படிப்பினை

நன்மையாய் இருக்கும்

நன்மையை மட்டுமே

நாடி நில்லாமல்

தீமையைக் கண்டு

ஒடி விடாமல்

இரண்டும் இல்லாத

வாழ்வும் இல்லை

என்பதை அறிந்து

வாழ்ந்திட வேண்டும்

ஒன்றினுள் ஒன்று

கலந்து நிற்கும்

இரண்டையும் ஏற்று

வாழ்ந்திடும் போது

எவ்விதத் தீமையும்

நம்மை வெல்லாது

நன்மையில் தீமை

காண்கின்ற போது

10-6-2023, குருகுலம், இரவு 11.00

Secular Song 596

All that we do

As Good

Won’t remain

Completely good

Anything that

We avoid as bad

Won’t end up

As bad

Both good and bad

Is not in our action

It depends upon

Our own approach

After the result alone

We would know

How an action

Ended—good or bad

However an action ends

In every action

There will be

Something good

Even the action

That ended as bad

Might teach

A good lesson

Not only seeking

Good in everything

And not shunning

Always bad things

There is no life

Without them both

And realizing this

We should live

When we accept

Them both and live

There will be a

Mix of both

No bad thing will

Overcome us all the time

When we manage to see

Something good in it.

Gurukulam, 10-6-2023, 11.00 pm.

Secular Song 597

Secular Song 597 ஞானத்தின் எல்லை மோனம்

எழுத்தையும் படிப்பையும்

நிறுத்த வேண்டும்

எண்ணத்தைக் கூட

தொலைக்க வேண்டும்

சித்தத்தை அடக்கி

“சும்மா” இருக்கும்

வித்தையை நானும்

கற்க வேண்டும்

புரியாமல் உளறி

தெரியாமல் பேசும்

பழக்கத்தைக் கூட

நிறுத்த வேண்டும்

அறிவும் கொஞ்சம்

அறிந்ததும் கொஞ்சம்

சொற்களில் மட்டும்

பஞ்சம் காணோம்

ஞானத்தின் எல்லை

மோனம் என்று

ஒளவை சொன்ன

மூதுரை நினைந்து

மவுனம் காக்கும்

வித்தையைக் கற்றால்

என்றோ ஒருநாள்

ஞானம் கூடும்

அதுவரை இந்த

அலையும் மனதின்

பசிப் பிணி போக்க

தீனி போடாது

படிப் படியாக

படிப்பதை நிறுத்த

விரதம் காக்க

பழக வேண்டும்

படிக்கப் படிக்க

குழம்பம் பெருகுது

தெளிவும் வந்திட

ஏனோ மறுக்குது

தனது அனுபவம்

பிறருக்குச் சொல்ல

தனக்குப் புரிந்ததை

எழுதி வைத்தார்

அவருக்குப் புரிந்தது

நமக்கு பொருந்துமா

அவரின் அனுபவம்

நமக்கு வருமா

நமது தேவைக்கு

நாமே தேடி

பிறரின் அனுபவம்

பாடம் ஆக்கி

பார்த்துப் புரிந்ததை

பட்டுப் புரிந்தால்

நாமும் கற்கலாம்

வாழ்க்கைப் பாடம்

அதை விடுத்து

பலதைப் படித்தால்

கனவில் கண்ட

காசாய் போகும்

திருப்பூந்துருத்தி, 22-8-2023, மாலை,  4.15 pm.

Since I came here, particularly after July 16th, I have been reading so many books like a reading machine.  I read them deeply and as per my habit even took notes and wrote reviews to share.  But this evening after my regular reading, I refused to take the next book to read without any gap, I stopped reading and sat quietly thinking about the use of reading so many books like this like a machine. As I was contemplating this, I wrote this song.  But no use, I continued my reading as I have to complete so many books before I leave during the first of October.

Secular Song 597 Silence is the result of wisdom

I should stop

Both reading and writing

I should even lose

My thinking process

I should learn

The art of

Remaining ‘silent’

By controlling the mind

I should stop

Babbling a lot

Not knowing well

And uttering without understanding

I have limited buddhi

And what I know is very little

But there is no scarcity

For words to utter and write

Remembering that

‘Silence is the result of wisdom’

A proverb

By Owai

If I learn

The art of silence

One day I can

Attain that wisdom

Till that time

Not feeding

To the hunger

Of this wavering mind

I should learn

To practice the vow of

Stopping reading

Gradually

Confusion increases

As I read more

Somehow clarity

Refuses to come

In order to

Share their experience

They have

Written a lot

Will be it be useful to us

What they understood

Can we gain

Their own experience

Seeking what

Is our need

And keeping other’s experience

As a lesson for us

We can learn

The lesson of life

By understanding what we observed

Through our own experience

Leaving that

If we began to read much

It would end up like

The wealth that received in a dream

Thirupputhuruthi, 22-8-2023, 4.15 pm.

Secular Song 598

Again one young man, confused a lot about life asked me, ‘ultimately what life actually is’.  I gave my regular answer ‘live and learn’.  There is no other way to understand life.  None can teach that to you. No reading can help you.  When you thought that you have settled in life, some sudden unexpected events might come and completely unsettle your life forcing you to learn further only through your experience.  After he left, as I was reflecting about this I wrote this song.

Secular Song 598 வாழ்ந்து பார்

எதுதான் வாழ்வு

என்பதை அறிய

வந்த வாழ்வை

வாழ்த்து பாரு

பிறரின் வாழ்வு

புரிந்திட முடியாது

நமது வாழ்வே

புரியாத போது

கடந்த வாழ்வின்

அனுபவத் தோடு

இன்றைய வாழ்வின்

புரிதலும் சேர

எதிர்கால வாழ்வு

சரியாகச் செல்ல

ஓரளவு நாம்

யோசிக்க முடியும்

எதிர்பாரா திருப்பம்

பலவும் வந்து

அன்றாட வாழ்வை

புரட்டியும் போட

எவ்விதத் திட்டம்

நாம் போட்டாலும்

எல்லாம் அதுபோல்

நடக்காமல் போகும்

ஆகவே மானுட

வாழ்வின் அர்த்தம்

அன்றாடம் வாழாமல்

புரிய இயலாது

ஆயினும் இந்த

நிலையில்லா தன்மை

எண்ணித் திகைத்தால்

வாழ்ந்திட முடியாது

அனுபவம் தந்த

பாடத்தின் மீது

நடைமுறை சாத்திய

உண்மையை ஏற்று

நம்பிக்கை யோடு

நாளைய வாழ்வை

இன்று போல் வாழ்ந்து

எதிர் கொளவேண்டும்

பல வழி உண்டு

வாழ்வினைப் புரிய

எதுசரியென வென்று

எப்படி அறிய

இதற்கு சரியான

விடையைத் தந்தவர்

எவரேனும் இருந்தால்

அவர் வழி செல்லு

இல்லாது போனால்

உன் வழி வாழ்ந்து

எது உண்மை என்று

அறிந்து கொள்ளு

திருப்பூந்துருத்தி, 24-8-23, 3.30 மாலை

Secular Song 598 Live to learn

To know

What life actually is

Better you live

And learn

We cannot

Understand other’s life

When we cannot understand

Our own life

Adding with the

Past experience

Adding new understanding

From today’s life

For the future life

To go relatively smoothly

We can think

Properly for that

As sudden and

Unexpected events

Turn the

Everyday life

Whatever we might have

Planned

All won’t go

Accordingly

Therefore unless

We live everyday life as it is

We can never understand

The human life

At the same time

If we are bewildered

Thinking about this kind of life

Then we can never able to live

Along with

The experience we gained

Accepting the reality of

Practical life

We should face

The future life

With much hope

As we live this day

There are many

Ways to understand life

But how to say

Which one is correct

If there is someone

Who can give correct answer

Then try to

Follow their way

Otherwise living

Your life by your own way

Learn which one is

Correct life

Thirupoonthuruti, 24-8-23, 3.30 pm.

Secular Song 599

When I shared my previous song [598] with my friend Kannan at Erode, he sent the following response in poetic form.  This is the first time he is attempting to write a poem.  As I liked it, I sent the following response, again as a poem to him.

தந்த வாழ்வு புரியாத போது

தத்துவங்களும் தன்போல் பிறக்கும்

தாங்குவேன் என்றுரைத்த

தந்தானை மனதில் என்றும்

தவறாமல் மறவாது தாளடி பணிந்து

தாழ்ந்தே வாழ்த்துவோம்

வாழ்த்து காட்டுவோம்

கண்ணன், ஈரோடு, 26-8-23

தந்த வாழ்வு புரியாத போது

தத்துவங்களும் தன்போல் பிறக்கும்

தாங்குவேன் என்றுரைத்த

தந்தானை மனதில் என்றும்

தவறாமல் மறவாது தாளடி பணிந்து

தாழ்ந்தே வாழ்த்துவோம்

வாழ்த்து காட்டுவோம்

When the given life is not clear

Philosophies will come automatically

Always worshiping God

who promised to uphold us

in our hearts, let us praise Him with much humility

and let us show His might by living

Kannan, Erode,  26-8-23

Secular Song 599

ஈரோடுக் காரரை

பேச்சிலே மிஞ்ச

எவரேனும் இனிமேல்

பிறந்தாக வேண்டும்

பெரியாரின் பூமியில்

பிறந்தோருக் கெல்லாம்

பேச சொல்லித்

தரவா வேண்டும்

ஆனால் சில பேர்

இதை உணராமல்

பிதற்றித் திரிகிறார்

பேச்சாளர் என்று

ஆயினும் என் நண்பன்

மெருகேற்றிக் கொண்டால்

இன்னும் மிளிரலாம்

கவி பல பாடி

அதற்கொரு நல்வாய்ப்பு

தற்போது அமைந்தது

அவனின் இல்லாலின்

செவித்திறன் குறைந்ததால்

ஆகவே என் நண்பன்

எதையும் பேசலாம்

ஏனென்றால் இல்லத்தில்

எதிர்ப்பு வாராது

ஆனால் வெளியே

வாய் மூடிக் கொண்டால்

அதுவே அனைவர்க்கும்

மிகமிக நல்லது

என் போல் எழுதி

உளறவும் வேண்டாம்

ஏச்சுக்கும் பேச்சுக்கும்

ஆளாக வேண்டாம்

எதோ எனக்கு

தெரிந்ததை சொன்னேன்

இனி எதுவானாலும்

அவனது பாடு

திருப்பூந்துருத்தி, 26-8-23, 8.00 இரவு 

Secular Song 599

Who can win

Someone born at Erode

That person has

Yet to born on earth

Do anyone need

To teach to those

Who were born

In the land of Periyar?@

But few

Not realising this

Roaming around

Calling themselves as ‘Speakers’

But if my friend

Improves a lot

He can shine

Writing more poems

A good opportunity

Has come now to him

As his wife’s hearing power

Has come down

Therefore, my friend

Can talk anything at home

As no objection

Would come to that

But if he keeps

Quiet outside

That would be

Good for everyone

He need not babble

Writing like me

And need not be

Mocked by all

I say what

I know for good

Rest is

His own funeral

@ E. V. R. Ramaswamy The Founder of Dravia Party in Tamilnadu, a reformer from Erode.

Thirupoonthuruthi, 26-8-23, 8.00 pm. 

Secular Song 600

As I listened to one wonderful Carnatic music vocal performance by the late Bharat Ratna Srimathi M. S. Subbulakshmi, who was also born in Madurai, wrote this short tribute both to her and goddess Meenakshi who resides at Madurai.  Considering the play of word ‘rule’ in Tamil, I cannot translate this song in other languages.

Secular Song 600 உங்கள் ஆட்சி

என்ன ஒரு பேறு பெற்றாய்

மதுரை மீனாட்சி உன் மண்ணில்

எம் அன்னை வந்துதித்து

உன்னாட்சி தனைப் பாடி

எம்மிடையே இசைமாச்சி

தன்னை உயர்த்தி என்மனதில்

என்றென்றும் ஒராட்சி செய்கிறாள்

உன்னிலும் கோலோச்சி

எப்படியோ இருவரும்

நல்லாட்சி செயவதால்

நாங்களும் காண்கிறோம்

எந்நாளும் இறைமாட்சி

திருப்பூந்துருத்தி, 28-8-23, இரவு, 11.30 pm.

Secular Song 600 Your rule

என்ன ஒரு பேறு பெற்றாய்

மதுரை மீனாட்சி உன் மண்ணில்

எம் அன்னை வந்துதித்து

உன்னாட்சி தன்னைப் பாடி

எம்மிடையே இசைமாச்சி

தன்னை உயர்த்தி என் மனதில்

என்றென்றும் ஒராட்சி செய்கிறாள்

உன்னிலும் கோலோச்சி

எப்படியோ இருவரும்

நல்லாட்சி செயவதால்

நாங்களும் காண்கிறோம்

எந்நாளும் இறைமாட்சி

What a blessing you received

Goddess Meenakshi, in your soil

As my mother has born to

Sing the glory of your rule

Among us uplifting the

Glory of Carnatic music

MSS Amma is ruling for ever

More than you

Somehow as you both

Give a good Kingdom by ruling well

We always see Godliness

In both your rules

Thirupoonthururuthi,  28-8-23, 11.30 pm. Pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *