BT Song 611
It is good to get defeated in between small successes as it will help us to understand our own nature. Personally, I feel that God, in order to protect and safeguard us, allows regular defeat in several areas of our life so that we will be reminded about our true nature and also cleanse the pride which naturally accumulates with small successes.
BT Song 611 தோல்வி தந்தாய்
இறுதியில் உன் பாதமே
வந்து நான் சேர்ந்தேன்
பலவிதம் போராடித்
தோற்ற பின்னாலே
இதுகூட நன்மைக்கு
என்று நான் அறிந்தேன்
உள்ளான அகந்தையும்
அழிந்த பின்னாலே
சிறுசிறு வெற்றிகள்
பெற்றிட்ட போது
ஏறிய போதைக்கு
அளவு ஏது
எவரையும் மதிக்காது
என்னுள்ளம் திமிர
ஏற்ற நேரத்தில்
விழுந்தது பிரம்பு
அடைந்த தோல்விக்கு
ஆயிரம் காரணம்
அறிவின் துணையினால்
நானும் வைக்கலாம்
ஆயினும் உன்னிடம்
தோற்ற பின்னால்
அதனையும் ஏற்றேன்
உன்ணெண்ணம் போலே
என்னுள்ளே தாழ்மை
இயல்பாக இல்லை
எத்தனை முயன்றாலும்
அகந்தையும் நீங்கலை
ஆயினும் என்னை நீ
ஆட்கொண்டதால்
என்னை காத்திட
தோல்வியைத் தந்தாய்
இன்னும் என் மீது
இரக்கம் வைத்ததால்
ஏற்ற நேரத்தில்
மீண்டும் காத்தாய்
எஞ்சிய காலத்தில்
உன் சித்தம் செய்ய
அண்டி வந்தேன்
திருவடி மீண்டும்
மத்திகிரி, 24-1-17, (25-1-17) இரவு, 12.15
BT Song 611 Allowed me to be defeated
Finally, I come
Unto your feet
After get defeated
By struggling in many ways
Once my ego
Is get perished
I understood that
This is also for my good
How much I am
Intoxicated
When I get
Small victories
Not minding about anyone
When I become very arrogant
In proper time
You strike me with your stick
I can present
Thousands of reasons
Intellectually
For my defeat (defence)
But once get
Defeated in you
I accepted it
As per your wish/will
I never had
Humility as my nature
How much I try
My pride never goes
Yet as you have
Redeemed me
In order to protect
You gave defeat
As you have
Mercy upon me
In proper time
You saved me
To do your will
In the rest of life
I come again
Unto your feet
Mathigiri, 24-1-16 (25-1-17), 12.15 am.
BT Song 612
Though this could be never practical or reality, yet the joy that overflows within us when we are with the lord alone is difficult to give up. Of course, I long to be more and more of it and do not want to come out of it, but like any other emotion, our mortal body or fluctuating mind cannot sustain it for more than a few seconds or minutes.
BT Song 612 ஒரு ஏக்கம்
சந்தம் இசைத்து பாடுகிறேன்
சன்னதி ஒன்றே@ நாடுகிறேன்
சிந்தையால் உன்னை சேவிக்கிறேன்
சேவடி தன்னில் வாழ்கிறேன்
முந்தைய தீவினை போனதுவே
முப்பாழும் தன்னால் நீங்கினவே
முக்தேசனே உன் சத்திய வார்த்தையால்
மும்மலங்கள் முற்றாய் ஓய்ந்தனவே
அண்டங்கள் அனைத்தும் படைத்தவனை
அறிந்திடும் மேன்மையைத் தந்ததனால்
தொண்டனும் எளிய சொல் கொண்டு
சொல்லிட வந்தேன் துதிகளுமே
சில நொடி உன்னடி அமரும்போது
சீவனை உன்னுடன் இணைக்கும்போது
உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்க
உன் புகழ் பாடிட தோன்றிடுதே
எண்ணத்தால் உன்னைத்தான் எண்ணும்போது
என்னுள்ளில் ஆனந்தம் பொங்குதே
உலகை அந்நேரம் நான் மறக்க
ஊனுடல் உனக்கென ஆகிடுதே
அந்த பேரின்ப வெள்ளத்திலே
அமிழ்ந்து திளைத்து மூழ்கும்போது
கரையேறி மீண்டும் வந்திடாமல்
அதில் ஆழ்ந்திட ஏங்கிடுதே
மத்திகிரி, 28-1-17, (29-1-17) இரவு 12.15
BT Song 612 A longing
I sing adding tunes
I seek only your presence
I always worship you by my mind
And I live at your feet
All the past karmas have gone
All the three fetters completely get removed
Oh Muktesa due to your truthful words
All the three filthies have gone completely
As you gave me the opportunity to know
About the one who created the entire cosmos?
This slave also came
To sing praises with simple words
When I sit even for few seconds
And mingle my atman with you
As the joy overflows within me
I am prompted to sing your glory
When I think you through my thoughts
Bliss overflows in my heart
As I forgot the entire world that time
This mortal body becomes yours
In that flood of joy
When I drown and dwell
Not to come out and reach the shore
I long to be there all the time.
Mathigiri, 28-1-17, (29-1-17), 12.15 am.
BT Song 613
The eternal compassion and long standing patience of the Lord is the only reason for me to be redeemed again and again in spite of my defeats and failures in life.
BT Song 613 உனதென்று ஆனேன்
நான் உனதென நாதனே ஆனபின்
எனக்கென இங்கு ஏதும் இல்லை
உனக்கு உள்ளதை எனக்கென தந்தபின்
எனக்கென தனியாக கேட்கவும் இல்லை
அன்றே என்னை ஆட்கொண்ட பின்னே
அடிமை என்றுதான் உன்னடி வந்தேன்
அதன்பின் என்னை நானும் மறந்து
என்னை நீயாள முழுமையாகத் தந்தேன்
சுயபுத்தி சார்ந்து நான் சில செய்த போது
சரியில்லை என்று நீ சொல்லி விட்டாய்
உன் சித்தம் மட்டும் ஆகட்டும் என்று
ஒரு வார்த்தை பேசாது பணிந்து நின்றேன்
அறியாமை என்னும் மனயிருள் கவ்வ
அடிக்கடி தவறுகள் நான் செய்த போது
ஏற்றபடி நீ என்னைத் திருத்தி
மீண்டும் உன் வழி ஓட்டி வந்தாய்
நீ காட்டும் கருணையை நான் எண்ணும்போது
ஏனிந்தக் கரிசனை என்று நான் எண்ண
நீடித்த பொறுமையின் எல்லை காட்ட
நாயனைப் பலமுறை நீயும் மீட்டாய்
இந்த உண்மை உணர்ந்த பின்னானே
உனதென்று என்னை நான் தந்துவிட்டேன்
ஏழை என்னையும் ஏற்றுக் கொண்டபினே
எனதென்ற எண்ணத்தை இழந்துவிட்டேன்
மத்திகிரி, 28-1-17 (29-1-17), இரவு 12.45
BT Song 613 I become yours
Oh Lord once I become your own
I have nothing of mine here
Once you gave all of you to me
I never seek anything separately for me
Once you have redeemed me
I came unto you as your slave
After that forgetting myself
I gave to you completely to lord over me
When I have done something depending on my own mind
You said that they are not correct
Then let your will be accomplished,
I too obeyed you without uttering even one word (against it)
As the darkness of ignorance overcame
Though I have often done many mistakes
Disciplining me properly
You brought me back to your path again
When I think about your long standing compassion
I thought ‘why this kind of special concern’ (for me)
You redeemed this dog many times
Because of your eternal patience
Once I realized this truth
I gave me as your own
As you accepted this poor one again
I gave up the thought of ‘my own’.
Mathigiri, 28-1-17 (29-1-17), 12.45 am.
BT Song 614
As I began to read the book of Job for my regular reading, this night I was reflecting back all the arguments that Job had with his friends. Then stepping in his shoe I said to the Lord what is the use of dragging me to His court. Whatever his final verdict would be, as He also has to bear the burden, I need not worry about the verdict.
BT Song 614 கவலையில்லை
என்னோடே வீணே வழக்காடி
என்னென்ன ஆதாயம் நீயடைந்தாய்
என் மீது குற்றங்கள் சுமத்தியதால்
எவ்விதம் நீயும் பயனடைந்தாய்
ஒருபோதும் ஓய்வாக இருந்ததில்லை
உள்ளான அமைதியைக் கண்டதில்லை
பட்ட பாட்டுக்கு கணக்குமில்லை
பாரம் சுமக்காமல் வாழ்ந்ததில்லை
தப்பிக்க எத்தனை எத்தனித்தும்
ஒரு முறைகூட வென்றதில்லை
பெற்ற சிற்சில வெற்றிகளும்
நிரந்தரமாய் இருந்ததில்லை
வழக்கு என்று வந்த பின்னே
வாய்மூடி இருந்து பயனுமில்லை
என் பக்க நியாயத்தை எடுத்துரைக்க
என்னை விட்டால் இங்கு யாருமில்லை
ஆயினும் உன்னிடம் வாதாடி
எவ்விதப் பயனும் கண்டதில்லை
முன்னே நீ தீர்மானம் செய்த பின்
எதிர்வாதம் செய்வதில் பயனுமில்லை
தீர்ப்பு எதுவான போதிலும்
திண்டாடப் போவதோ நானுமில்லை
ஏனென்று உனக்கு அது தெரியும்
அதனால் கவலையும் எனக்குமில்லை
மத்திகிரி, 30-1-17, இரவு 11.30
BT Song 614 I am not worried
What are the gains that you got?
By contending with me
In what way you have benefitted
By accusing me
I never remained leisurely
And never found the inner peace
There is no account for all the trouble I underwent
And I never lived without carrying any burden
Though I tried to escape many times
I never managed even one time
Even the small escapes
Never remained permanently
Once you dragged me for contention
There is no use of remaining silence
There is no one to plead
To prove my side of reasons
But there is no use in arguing with you
I never found any benefit in it
Once you have already decided
There is no use in counter arguing (with you)
Whatever might be the verdict?
I am not the one who is going to be troubled
You know the reason for that
Therefore, I am not worried about it
Mathigiri, 30-1-17, 11.30 pm.
BT Song 615
As I went for my evening walk when I began to pray, I said to the Lord this is the only one thing that I know: coming to His feet. Even He cannot deny my right as there is no alternative which he can even recommend or provide.
BT Song 615 எனக்குரியது
எனக்குத் தெரிந்தது
இது ஒன்று மட்டும் தான்
எப்போதும் உன்னடி
பற்றுவது மட்டும்தான்
இதுகூட உனக்கும்
தெரிந்த ஒன்றுதான்
ஆயினும் சொல்லுறேன்
அடிக்கடி வந்துதான்
வேறென்ன செய்வது
போக்கிடம் இல்லை
வேண்டாம் என்றாலும்
விடுவதற் கில்லை
மாற்று இதுவென்று
ஏதேனும் சொன்னால்
மனதார அதனையும்
ஏற்றுக் கொள்கிறேன்
இல்லாத ஒன்றுக்கு
நீ எங்கு போவாய்
எனக்கு உரியதை
ஏனிழக்கச் சொல்லுவாய்
தள்ளாடும் மனதிற்கு
நங்கூரமாய் ஆனபின்
அதைத் தள்ளிவிட்டுப்
போகவா சொல்லுவாய்
3-2-17 மத்திகிரி, மாலை 5.30
BT Song 615 I don’t know
This alone I know
To do
It is always
Coming to your feet
You too know
About it
Yet I come often
To tell it to you
What else can I do?
As there is no other means
Even if you say ‘no’
I cannot let you go
If you could tell
‘This is the alternative’
Then I will accept
Whole heartedly
Where will you go?
For the one which does not exist
Why would you tell me?
To give up what belongs to me
Once you become
The anchor for me wavering mind
Will you ask me to go?
Forsaking it
3-2-17 Mathigiri, 5.30 pm.
Leave a Reply