Voice of the Mind: 651
One person with a romantic spirit wrote in one of his poems that he doesn’t want to donate his eyes after death because he believes he will see his beloved only through them. This sentiment aligns with the romantic notion of seeing one’s beloved everywhere. However, offering an alternative perspective, I emphasized the importance of donating one’s eyes if you wish to see not only your beloved but also your near and dear ones—those you might miss, or who might miss you. By donating your eyes, you ensure that your vision can continue to bring comfort to others.
While Hinduism teaches that the merits of charity (dana) accompany us to the next world, providing us with some credit, those effects typically end with our death—though those who benefited from our charity may remember us. However, by donating your eyes, there is a chance for the benefits of your charity to continue on this earth, even after you pass away. In this sense, donating one’s eyes could be considered the greatest of all danas—this is my personal view.
Mind’s Voice: Song 651 — A Second Look
Even after death,
To see her again,
If there’s a chance,
I wish to find.
By donating my eyes,
I will admire her,
Gaze upon her once more,
And cherish the sight.
With love and care,
I embraced and lived
With those around me,
Full of affection.
If you wish
To see them again,
Donate your eyes,
Both of them.
Other donations,
Whatever they may be,
End with death,
And fade away.
But donating eyes
Will let us continue
To see those we cherish,
Even after we’re gone.
If you desire
To regain lost love,
And reunite with
The affection you once had,
Then donate your eyes,
Both of them,
And love and care
Will return to you.
Even after death,
If you long to regain
Unforgotten relationships,
And cherish them once more,
Donate your eyes,
And you will find
The lost bond again,
Reunited forever.
— Sisu, Home, 28-8-2024, 5:00 AM
மறையூறார் ஒரு காதலன் பார்வையில் அழகிய பாடலை எழுதிஇருக்காரு . இது காதல் உணர்வுக்கு நல்லா இருக்கு. ஆனால், நான் மாற்று பார்வையா இந்த பாடல எழுதி இருக்கேன். தானா தருமம் செஞ்சா அதோட புண்ணியம் இறந்த பிறகு நமக்கு கிடைக்கும். ஆனா கண்தானம் செஞ்சா நாம போன பிறக்கும் இந்த உலகில அதன் பலன் தொடர்ந்து கிடைக்கும். இது மறு பார்வை. எதிர் கருத்து இல்ல
மனதின் குரல்: பாடல் 651 — மறு பார்வை
இறந்த பின்னும்
என்னவளை
மீண்டும் காணும்
வாய்ப்பு கிடைக்க
எனது விழியை
தானம் செய்து
மீண்டும் அவளை
பார்த்து ரசிப்பேன்
பாசம் கொண்டு
நேசம் காட்டி
அணைத்து வாழ்ந்த
சுற்றம் தன்னை
மீண்டும் காணும்
வாய்ப்பு வேண்டின்
விழி இரண்டை
தானம் செய்வீர்
மற்ற அனைத்து
தானம் எல்லாம்
இறக்கும் போதே
மறைந்து போகும்
விழி இரண்டை
தானம் செய்தால்
தொடர்ந்து நம்மை
பார்க்க வைக்கும்
பிரிந்த நேசம்
இழந்த பாசம்
மீண்டும் உமக்கு
கிடைக்க வேண்டின்
விழி இரண்டை
தானம் செய்வீர்
பாசம்-நேசம்
மீண்டும் பெறுவீர்
மறைந்தும் மறவா
உறவு தன்னை
மீண்டும் பெற
விருப்பம் கொண்டால்
விழி இரண்டை
தானம் செய்து
மறைந்த உறவை
மீண்டும் பெறுவீர்
— சிசு, குடில், 28-8-2024, காலை 5.00
Voice of the Mind: 652: Law of nature
When I moved to this area to live in my ‘Kutil’ near a forest it was quiet and calm. Rarely I can hear any artificial noise. Even to reach to a near by house, I have to walk minimum 10 minutes. Rarely I will hear the noise of a bus in the distant road and rarely a vehicle will go near the place in the mud road. Most of the time I will listen the sweet voice of birds and night rarely the voice of some forest animals that move around for hunting. But after nearly 20 years things have changed. Though there is not much air pollution now lots of noise pollution often disturbs me. The cement road near by allows the movement of so many vehicles from near by villages. There are so many vehicle moving on the distant road. This being in this once remote place, what to say in other parts of the world where I often hear about landslides burying people alive who destroyed forest to live. What we sow we have to reap. Noone can escape from this law of nature—but fortunately such rule never exists for Nature as it never survives by destroying the other.
Voice of the Mind: Unchanging Fate 652
Destroying the forests,
To develop the land,
The destroyed forests,
Will return with vengeance.
Losing both forests and land,
Both vanish away,
Here, mankind
Withers in dismay.
“Raise another’s child,
As if your own,
Then your own child
Will also thrive alone.”
Though this ancient wisdom
We know so well,
Our nature alone
Does not seem to change.
Even in the forests
There’s a struggle for life,
Where the worthy
Survive in strife.
Yet, even the fallen
Trees and shrubs,
Turn into fertilizer,
And serve a noble purpose.
But here, without helping,
Even as fertilizer,
We destroy each other,
Leaving no room for life.
Depriving everyone
Of space to live,
Such actions
Are truly a grave sin.
If done in error,
We may correct,
But when done knowingly,
What can be said?
What we have sown
We must also reap,
This truth of fate
We must keep.
— Sisu, Kudil, 28-8-2024, 5.00 pm.
இருபது வருடங்களுக்கு முன் இப்பகுதிக்கு நான் வாசிக்க வந்த போது, இயற்கை ஓசையைத் தவிர அதிகமான செயற்கை ஓசைகள் கேட்டது கிடையாது. ஆனால் இப்போ காற்று மாசு இல்லாடாலும் ஓசை மாசு வர ஆரம்பிச்சுடுத்து. அதோட தாக்கம் அதிகமாறத நினைச்சு எழுதின பாடல். எத விதைக்கறமோ அதத்தான அறுக்கணும்
மனதின் குரல்: மாறா நியதி 652
காட்டை அழித்து
நாட்டை வளர்க்க
அழித்த காடு
பழியும் வாங்க
காடு நாடு
இரண்டும் இழந்து
வாடுது இங்கு
மானுடம் நன்கு
‘ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
தனது பிள்ளை
தானே வளரும்”
என்ற முதுமொழி
அறிந்த போதும்
நம்குணம் மட்டும்
மாறவே காணோம்
காட்டிலும் கூட
போராட்டம் உண்டு
தகுதி உடையது
வாழும் நின்று
ஆயினும் அழிந்த
மரம், செடி கூட
எருவாய் மாறி
பயன்படும் நன்கு
எருவுக்கும் உதவா
உடலைக் கொண்டு
ஒருவரை ஒருவர்
அழிந்து இங்கு
எவரும் வாழ
இடமின்றி செய்யும்
மானுடன் நிலையோ
மிகவும் பாவம்
தவறி செய்தால்
திருத்திக் கொள்ளலாம்
தெரிந்தே செய்தால்
என்ன செய்யலாம்
எதை விதைத்தோமோ
அதையே அறுக்கணும்
இந்த நியதியை
முதலில் நினைக்கணும்
–சிசு, குடில், 28-8-2024, 5.00 pm.
Voice of the Mind: 653
A Senior Parent’s Voice of Entitlement
Voice of the Heart 653: Entitlement or Duty
Duty alone
Always for me,
Only rights
Always for you.
If both slightly
Swap places,
Then you will understand
The situation.
Did I raise you
Thinking it as debt?
Did I nurture you
Thinking it as duty?
Even after
Old age came to me,
I refused to ask
For my rights.
You demand
Many things
And always say
It’s yours alone.
I followed
And did everything,
You said even that
Was my duty.
Now you’ve grown
And become an adult,
You’ve got your
Own family too.
Why do you
Forget me now,
When it’s your turn
For duty?
I accepted this
And silently endured,
Worked hard
Until the end for you.
At least the final debt,
Would you please pay?
I have this right
In my heart.
If you repay
This debt alone,
Your debt
Will be fulfilled too.
I didn’t say this
For the debt of
Raising and nurturing you.
There’s no way
To erase this debt,
It’s a debt
Without interest.
If there’s a right
To ask for rights,
Then there’s a duty
To repay the debt.
Kudil, 29-08-2024, 6:30 AM
மனதின் குரல் 653
ஒரு வயதான பெற்றோரின் உரிமைக் குரல்
மனதின் குரல் 653: உரிமையா கடமையா
கடமை ஒன்றே
என்றும் எனக்கு
உரிமை மட்டும்
என்றும் உனக்கு
இரண்டும் சற்று
இடம் மாறினால்
அதன்பின் புரியும்
நிலைமை உனக்கு
கடனே என்றா
பெற்று போட்டேன்
கடனே என்றா
உன்னை வளர்த்தேன்
முதுமை எனக்கு
வந்த பின்னும்
எனது உரிமை
கேட்க மறுத்தேன்
உரிமையோடு
பலவும் கேட்பாய்
உனக்கே உனக்கு
என்றும் சொல்வாய்
அனுசரித்து
அனைத்தும் செய்தேன்
அதுவும் எனது
கடமை என்றாய்
நீயும் வளர்ந்து
பெரியவனாகி
உனக்கும் குடும்பம்
வந்த பின்னே
எனக்கு கடமை
வந்தது என்று
என்னை இப்போ
ஏனோ மறந்தாய்
அதையும் ஏற்று
அமைதி காத்தேன்
இறுதி வரையில்
உனக்கு உழைத்தேன்
இறுதி கடனை
மட்டுமாவது
எனக்குச் செய்வாய்
என்று சொன்னேன்
இந்த உரிமை
எனக்கு உண்டு
அதையேனும்
மனதில் கொண்டு
இந்த கடனை
மட்டுமேனும்
செய்தால் உனது
கடனும் தீரும்
பெற்று வளர்த்த
கடனுக்காக
இதை நானும்
சொல்ல வில்லை
வட்டி இல்லா
கடன் என்று
தட்டிக் கழிக்க
வழியும் இல்லை
உரிமை கேட்கும்
உரிமை இருந்தால்
கடனைத் தீர்க்கும்
கடமை உண்டு
குடில், 29-8-2024 , காலை 6.30
Voice of the Mind 654: Philosophy
See: https://dayanandbharati.in/philosophy/
Voice of the Mind: 654 – Philosophy
They said, “Touch and understand.”
They said, “Feel and realize.”
I, too, tried the same,
Touching something,
I, too, realized something.
They gave it a form,
And then explained it in many ways.
Everyone tried to explain,
“This is what you understood.”
Being born without sight,
How can I understand
Their explanation?
Yet, within my brain,
Some form seemed to settle.
Then, my mind
Gave thousands of explanations.
Later, I went to them and asked,
“Is this understanding correct?”
They replied,
“We did not understand what you said,
Nor did we see such a form.”
Then they said to me,
“This is what you must understand.”
And thus, philosophy was born,
This is what you must understand today.
Even if both understandings are correct,
Explaining it to others became a mistake.
Was the listener wrong?
Was the speaker wrong?
I am not sure.
Yet, if you read this too,
That would be your greatest mistake.
Gurukulam, 29-8-2024, Evening 5:00
மனதின் குரல்: 654 – தத்துவம்
தடவிப் பார்த்து
தெரிந்திடு என்றார்
தொட்டுப் பார்த்து
உணரு என்றார்
அதையே நானும்
செய்து பார்த்தேன்
தொட்டு எதையோ
நானும் உணர்ந்தேன்
அதற்கொரு உருவம்
அவரும் தந்தார்
அதன்பின் விளக்கம்
பலவும் சொன்னார்
இதுதான் நீ
உணர்ந்தது என்று
புரியவைக்க
யாவரும் முயன்றார்
பார்வை இன்றி
பிறந்த நானும்
எப்படி புரிவேன்
அவரின் விளக்கம்
ஆயினும் எனது
மூலையின் உள்ளே
உருவம் ஏதோ
பதிந்தது தன்போல்
அதன்பின் அதற்கு
எனது மூளை
ஆயிரம் ஆயிரம்
விளக்கம் தந்தது
அதன்பின் நானும்
அவரிடம் சென்று
இந்தப் புரிதல்
சரியா என்றேன்
நீ சொன்ன ஏதும்
புரியவே இல்லை
அதுபோல உருவம்
கண்டதே இல்லை
என்று எனக்கு
பதிலும் தந்தார்
இதைதான் நீயும்
புரியனும் என்றார்
அங்குதான் பிறந்தது
தத்துவம் முதலில்
இதைதான் நீயும்
புரியனும் இன்று
இருவர் புரிதலும்
சரியான போதிலும்
பிறரிடம் சொன்னது
தவறாக்கிப் போனது
கேட்டவர் தவறா
சொன்னவர் தவறா
என்பது எனக்கு
நிச்சயம் தெரியாது
ஆயினும் இதையே
நீயும் படித்தால்
அதுதான் நீ செய்யும்
மாபெரும் தவறு
குடில், 29-8-2024, மாலை 5.00
Voice of the Mind 655:
I joined a Facebook group exclusively dedicated to sharing poems and useful thoughts. They also had many terms and conditions for joining. However, when I noticed that some members regularly posted messages like “Good Morning,” “Good Evening,” and “Good Night,” along with a lot of kisses, it started to irritate me. In which household in India, especially in Tamil Nadu, do people openly give lots of kisses to each other, except to children? While we are influenced by Western values, going to the other extreme by imitating them artificially won’t help us become Western. This reminds me of the famous story of a turkey dancing, imitating a peacock, imagining itself to be a peacock. I don’t know how to quit that group. If possible, I would prefer to leave it at the earliest rather than get irritated by such acts.
Voice of the Mind 655: Poet or Trash?
Saying Good morning
And Good evening
Also giving
One in the night
Along with kisses,
they send many,
messages and I know not
are the poems or trashs
There’s a group for this,
And a name for that,
But why?
I do not know.
But still,
What else can I do?
For now,
This is poetry.
Without wasting
Time and moments,
If you convey
A thoughtful message,
It would be nice
To hear and read,
Everything else
Becomes trash.
Those with time,
Will do just that,
While I,
Just focus on my work.
It wasn’t arrogance,
That made me speak,
And it wasn’t frustration,
That made me complain.
When I have an opinion,
Hiding it
Is of no use.
Kudil, 30-8-2024, Morning 7.30
மனதின் குரல் 655:
நான் கவிதைகள் மற்றும் பயனுள்ள சிந்தனைகளை பகிர்வதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு முக நூல் குழுவில் சேர்ந்தேன். அதில இணைய பல விதி முறைகளா வச்சுருக்காங்க . ஆனால் சிலர் அவ்வப்போது ‘காலை வணக்கம்,’ ‘மாலை வணக்கம்,’ மற்றும் ‘இரவு வணக்கம்’ போன்ற செய்திகளை அனுப்பி, அதோடு நிறைய முத்தங்களையும் சேர்த்து அனுப்புவது எரிச்சலா இருக்கு. நம்ம நாட்டில, குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த வீட்டில், குழந்தைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு இதுபோல நிறைய முத்தங்களை வெளிப்படையா கொடுப்பாங்க? நாம் மேற்கத்திய பண்புகளால் பாதிக்கப்பட்டாலும், அவர்களை போல நடிக்க முயல்வது நம்மை மேற்கத்தியவர்களாக மாற்றாது. இது ஒரு வான்கோழி தன்னை மயிலாக பாவித்து சிறிய தன் இறகை விரித்து ஆடினது போல இருக்கு . அந்த குழுவிலிருந்து எப்படி விலகுவது என எனக்குத் தெரியல, இப்படிப்பட்ட செயல்களால் எரிச்சலடைவதற்குப் பதிலாக அதை விரைவில் விட்டு செல்ல விரும்புறேன்.
:
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்துத்–, தாநுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போதுமே
கல்லாத்தான் கற்ற கவி –மூதுரை, 14
மனதின் குரல் 655: கவியா குப்பையா
காலை, மாலை
வணக்கம் சொல்லி
மற்றொன்று இரவு
மீண்டும் சொல்லி
அத்துடன் முத்தம்
பலவும் தந்து
அனுப்பும் செய்தி
கருதா கவியா
இதற்கொரு குழுமம்
அதற்கொரு பெயர்
எதற்கு என்று
எனக்குத் தெரியலை
ஆயினும் நானும்
வேறென்ன செய்ய
இதுதான் இப்போ
கவிதை ஆனால்
காலத்தை, நேரத்தை
வீணாக்காமல்
கருதாய் ஏதேனும்
செய்தி சொன்னால்
கேட்க, படிக்க
நன்றாய் இருக்கும்
மற்றவை எல்லாம்
குப்பை ஆகும்
நேரம் உள்ளவர்
அதையே செய்ய
நான் மட்டும் எனது
வேலையை பார்த்தேன்
தலைகனம் ஏறி
சொல்லவில்லை
தற்குறி ஆகி
புலம்பவில்லை
எனக்கொரு கருத்து
இருக்கும் போது
அதையும் மறைத்து
பயனும் இல்லை
குடில், 30-8-2024, காலை 7.30
Leave a Reply