Song 21
Another, a song based on my struggle with my own mind. Neither can I live with it nor can I ignore it. Therefore, I try to work out a solution for this struggle which I work out at the end: either to overcome or to surrender.
என் மனதோடு போராடி பலமுறை தோற்கரப்ப எழுதிய பாடல்.
21 மனமே
மனமே உந்தன் நிலைதான் என்ன?
மதில் மேல் பூனை போல வாழ்கிறாய் நாளும்
நன்றும் தீதும் நன்கறிந்த போதும்
நாடுவது நீயேதோ? புரியவில்லை நாளும்
உன்னுடன் போராடி ஓய்ந்து விட்டேன் நானும்
உன்விருப்பம் போல்செய் உன்பாடு எனக்கென்ன
என்றெண்ணிக் கைக்கழுவ எவ்வளவு முயன்றாலும்
என்னிடமே முறைக்கிறாய். ஏற்றிடவே மறுக்கின்றாய்
வேடிக்கை என்னவென்றால் என் வாழ்வில் நீயும்
வேண்டாத விருந்தினனாக ஆகிவிட்ட போதும்
அழைத்துன்னைப் படைக்கின்றேன் அறுசுவை உணவு
அதன்பின் தவிக்கின்றேன் என்செயல் நினைந்தும்
உன்னையன்றி என்னாலே வாழ்ந்திடவே முடியாது
என்னையன்றி புகலிடம் உனக்குலகில் கிடையாது
எனவே நம்மிடை வேண்டும் ஒரு உடன்பாடு
இல்லையெனில் நம் நிலைமை ஆகிவிடும் பெரும்பாடு
பதவிப் போராட்டம் நம்மிடை இனி வேண்டாம்
நானின்றி நீயில்லை நீயின்றி நானில்லை
உன்னிச்சை போல செயல்படும் போதினிலே
என்நிலை தன்னை நீ சற்று எண்ணி விடு
‘மாட்டேன்’ என்று மறுத்து நீ நடந்தாலோ
மாற்று உண்டொன்று மருந்தாக என்னிடத்தில்
அடக்கி ஒடுக்க உன்னை ஆனமட்டும் முயன்றிடுவேன்
அதில் தோற்றால் உந்தனுக்கு அடிமை ஆகிடுவேன்
கோண்டா, உத்திரப் பிரதேசம்16-8-1993
21 Oh my mind
Oh my mind what is your condition
You live like the cat on the wall
Though you know good and bad
Which one do you seek? I cannot understand
‘I become tired by struggling with you
Do whatever you want; what can I do’?
Though I tried escape from you by telling this
You rebel against me and refuse to accept even that decision!
The funny thing is that
Though you become an unwanted guest in my life
I invite you and serve you tasty food!
Then I get frustrated by that act (of hosting you).
Without you I cannot live,
Without me you don’t have any other place for you on this earth to abide.
Therefore, we should reach for an agreement
Otherwise, our situation will become worse.
Therefore, let us not have the power struggle between us
Without me you are not there and without you I am also not here!
So, when you do as you wish
Think a bit about my condition also!
If you refuse to listen to me
I have one alternative remedy.
I will try to control you at my best
And if I get defeated in it, then I will become a slave to you
Gonda, U.P. 16-8-1993
Song 22
The following poem I wrote in my response to the article that came in India Today, June 15, 1994, pp. 146-152: Playing Mixed Doubles, which shared about ‘woman swapping’ in cities. I am against moral policing respecting individual freedom. But as social animals, we should not allow when individuals or a group cross the Lakshman Reka that will threaten the very fundamentals of any society.
இந்தியா டுடே என்ற ஆங்கில வார இதழில் [India Today, June 15, 1994, pp. 146-152: Playing Mixed Doubles] தன் மனைவிகளை ஒருவருக் கொருவர் மாற்றிக் கொள்வது பற்றி படித்த போது எழுதிய பாடல்.
22 மாக்கள்
பாரமே இந்த உலக வாழ்க்கை
பாவம் நிறைந்ததோர் கடின வாழ்க்கை
ஆருளர் ஐயகோ இதில் கடைத்தேற்ற?
அழிந்திடும் எம் நிலை முற்றிலும் ஆக
காமம், குரோதம், லோபம், மோகம்
கட்டறுந்த நிலையிலே போட்டியிடும் ஆட்டம்
எத்தனை முயன்றாலும் இதை மேற்கொள்ள
யாராலும் முடியாது ஐயோ என் சொல்ல?
கணநேர சுகமே பெரிதென எண்ணி
காமத் தீயில் மனதைத் தள்ளி
கட்டுக்கடங்காமல் இம் “மாக்கள்” போடும்
காமக் களியாட்டின் முடிவென்ன ஆகும்
பிறர் மனைவி தன்னையே பெண்டாள எண்ணி
தன் மனைவி தன்னையே தனியாக பண்ணி
தறிகெட்ட மிருகமாய் தம்மையுமே மாற்றி
தடுமாறும் மாந்தரின் நிலைமை என்ன?
சீர்கெட்ட இந்நிலை மாற்றிட வேண்டும்
சேதம் பெருகும் முன் காத்திட வேண்டும்
நேர்மை விரும்பிடும் மாந்தரே வாரும்
காரியம் கைமீறும் முன் போராட இங்கு
22 Non-humans
The life on this earth is a burden indeed
A difficult life full of sins.
But who is there to save us
Before we perish completely?
Desire, anger, lust, and greed
Are gone beyond their limits.
How much we try
We find it hard to overcome them.
Thinking the temporary pleasure as permanent one
And drowning the heart in lust
What will be the end result of this?
Game of lust which these ‘non-humans’ are playing
Thinking to enjoy another man’s wife
And pushing one’s own wife to commit adultery
What to say the condition of such people
As they change themselves like non-humans without any limitation?
This unethical practice should go
And before they do much damage, we should protect the society
Those who want to uphold dharma
Should join hands to fight against it
Before it goes beyond anybody’s control
15-6-1994, Lucknow
Song 23
This is a constant struggle in my life. I know what my problems are, but I never had the strength to overcome them.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில தவிர்க்க முடியாத சூழ்நிலையில மத்தவங்க குறைய சுட்டிக்காட்டற சூழ்நில ஏற்படற போதுஅப்புறம் என்கிட்ட உள்ள குறைங்கஎனக்கு பெரிதா தெரியும். அப்படி ஒரு சூழ்நிலையில எழுதின பாடல்
23 பிளவை
இதுதானே வேடிக்கை என்னிலே
எதை நான் பிறர் வாழ்விலே
இருப்பதைக் கண்டு பலமுறை
இடித்துரைத்து அவர் குறையை
வெளிப்படையாகக் கடிந்த போதிலும்
அவை அனைத்தும் என் வாழ்விலே
அப்படியே இருப்பினும் அதுகண்டு
அலட்சியமாக வாழ்ந்திடும் போது
அரிபிளவை போல் படர்ந்து
அக்குறை தானும் அடியேனை
அடிமையாகவே மாற்றிடுதே
அந்தோ என்நிலை என்சொல்வேன்
20-6-1994, Lucknow
23 Cancer
This is the thamasha in my life!
Though I rebuke others
Openly pointing out their shortcomings,
But as they remain in my life also
As they are forever
As I live
showing indifference to them
They spread like cancer
Began to dominate me
What can I say about such
Wretched conditions in my life!
20-6-1994, Lucknow
Song 24
From the morning there was too much struggle in my mind. As I tried to analyse it, I began to laugh at myself. Then I wrote this song.
மஹரி மதியம் 12.30. காலையிலிருந்து ஒரே மனப்போராட்டமாய் இருந்தது. பல முறை குழப்பம். சிலமுறை என் நிலையை எண்ணி எனக்குள்ளே சிரித்தேன். அப்பொழுது எழுதிய பாடல்;
வாழ்வில ஏற்படற பலவித போராட்டங்கள பத்தி பலரும் பலவிதம் புலம்பினாலும் எது போராட்டம் என்கிறத தீர்மானம் செய்வதே பலருக்குப் போராட்டமா போயிடுது. அத குறிச்சுசிந்திக்கறப்ப எழுதின பாடல்
24. போராடப் பொழுதில்லை
போராட்டம் என்கிறார்
வாழ்க்கையைப் பலர்
பொழுது போக்கு
என்கிறார் சிலர்
பொழுதும் போனது
இதைத் தீர்மானம் செய்வதில்
(இப்போராட்டம் தன்னிலே)
போராடப் பொழுதில்லை
அதனாலே இனிமேலே
Mahari, Rewa, M.P. 8-11-1994
24. No time to struggle
Some say the life is
Full of struggles!
Others say that
It is nothing but a recreation!
Time went in
Deciding which one is it?
Therefore, there is
No more time to struggle.
Mahari, Rewa, (M.P). 8-11-1994.
Song 25
My expectation turned into mere disappointment about starting an ashram in Rewa with the help of some disciples. Then I said that both expectation and disappointment are part of life. Like the two wings for a bird, we too need them both. Otherwise we won’t move further in life.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ஒரு பறவைக்கு உள்ள இரண்டு சிறகுகள் போல மனித வாழ்விலும் இன்றி அமையாதது. இவை இல்லாம நம்மால் வாழ்வில முன்னேறவே முடியாது.
25 எது உண்மை
எது உண்மை
இங்கு வாழ்விலே
எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ
எதிர்பார்த்து நின்றால்
ஏமாந்தே போவாய்
ஏமாறுவேன் என்றால்
எதிர்கொள்ள மறுப்பாய்
எதிர்பார்ப்பு ஏமாற்றம்
இவ்விரண்டும் தேவையே
இவையில்லா வாழ்வுமோ
சிறகில்லா பறவையே
Mahari, Rewa, M.P. 8-11-1994
25 Which is correct?
Which one is correct
In this life?
Expectation or disappointment?
If you only expect
You will get disappointed
And if you thought that you will get only disappointment
Then you won’t be ready to face it!
Both expectation and disappointment are
Needed in life,
Without them
The life become like a bird without both wings

Leave a Reply