Whenever I write diary, I feel as well as know that I am not honest to myself. I hide several facts and only record that much which won’t reveal all about me. I am not remaining honest and true to myself in this area also. When I thought about this, I wrote this poem.13-12-95, Lucknow; 8.10 Am
51 உத்தமன் எவன்?
உள்ளதை உள்ளபடி பகிர்ந்து கொள்ளும்
உத்தமன் எவனும் உலகில் இல்லை
ஊர்மெச்ச கூறுவோம் பல பொய்கள்
உள்ளது மறைக்க வழியும் நம்மில்
பார்மெச்ச வேண்டுமென நடித்தோம் நாமும்
பாவலன் எனக்கூற மழிந்தோம் நாளும்
ஆ! என்சொல்ல உண்மை நிலை
அந்தோ பரிதாபம் நம் மனதின் நிலை
பெற்ற புகழினால் பெருகியது கர்வம்
கர்வம் பெருகியதால் கண்ணும் சொருகியது
குருடன் என உணராமல் வழிகாட்ட எத்தனிக்க
குழியில் விழுவதன்றி வழியும் வேறெது?
குற்றமில்லா மனசாட்சி, குறையில்லா வெளிவாழ்க்கை
மற்றவரை மதிக்கின்ற மாண்பான மனதின் நெறி
பணிவான வார்த்தை, பாசமுடன் சேவை
பாரில் இவையன்றோ பறை சாற்றும் நம் நெறியை
ஐயோ! என் சொல்வேன் ஆடிடும் நாடகத்தை
போடுவதெல்லாம் வேடம் மேடையில் ஆடும் வரை
ஆட்டம் முடிந்தபின்பு அனைவரும் சென்ற பின்பு
வேடம் களைந்தபின்பு காண்கிறேன் உண்மை நிலை
Lucknow, 13-12-1995, 8.10 a.m.
51 Who is perfect?
There is no perfect person
Who shares the truth as it is
We tell so many lies for others to appreciate us
And we have means to hide them.
We acted for others to praise us
And we rejoiced when others said that we are wise
But to say about our real nature
It is indeed a very pitiable one.
We become very proud as we become famous
As we become very famous, we become blind
Not realizing our blindness as we try to lead others
What else will happen other than falling in the pit?
A pure conscience; a transparent life
A real noble nature which will respect others
Humble words, doing service with real affection
All these alone will proclaim our true nature!
But what to say about the drama which I enact
I put merely a mask as long as I act on the stage
Once the drama is complete and the audience left
As my mask is removed, I see my true nature.
Lucknow, 13-12-1995, 8.10 a.m.
Leave a Reply