Taking the courage that everything is decided by God and I have merely to obey, I wrote this song. The English translation never brings the original spirit and mood of this poem in Tamil.
70 முடியாது
போராட முடியாது இனிமேலே
புவியின் இவ்வாழ்வில் என்னாலே
இப்புலம்பலே அன்றி மனதாலே
புலப்படவில்லை வழி தன்னாலே
ஆயிரம் எண்ணங்கள் ஆட்கொள்ளவே
அலைமோதும் மனதுடன் போராட்டமே
துரும்புபோல் தடுமாறும் என்வாழ்வு
அடிவானம் தொடுகின்ற கடல்மீது
நம்பிக்கை என்னும் அலை கரை ஒதுக்க
அவநம்பிக்கை மீண்டுமே உள் இழுக்க
கரை தொட்டு நீர்மீளும் துரும்பிற்கே
புலப்பட வில்லை ஒரு வழி மீட்பினிற்கே
விதிவிட்ட வழி என்று ஓயவோ
மதிகாட்டும் வழியினிலே ஓடவோ
விதி-மதி இரண்டுமே ஓய்ந்தபின்
அவன் விட்ட வழியென்று வாழவோ
வாழ்ந்தாக வேண்டுமே இவ்வாழ்வினிலே
வந்துவிட்ட காரணத்தால் உலகினிலே
போராட்டம் ஓயாது தன்னாலே
புலம்பாதே மனமே இனி வீணாலே
தொடங்கிய வாழ்விற்கு ஒரு முடிவுண்டே
தொடர்ந்தே நீ எவ்விதம் ஓடினாலும்
துவங்கியவன் முடித்திடுவான் தளராதே
அதனால் துணிந்தே போராடு மனதாலே
கவிடம், ஆந்திரா, 30-6-1996, காலை 9.15
70 Impossible
In this life on earth
I can struggle no more
This alone become
The lament of my heart
I have to struggle with my wavering heart
As thousands of thoughts occupying my mind
Like a dust, my life too struggles
On the vast ocean
When the wave of hope takes me to the shore
The hopelessness drags me back to the sea
There is no hope for the dust to escape
Which often touching the shore and returns back to the sea
Should I continue to run as per the fate?
Or should I choose the path as per the guidance of my mind?
After both fate and mind failed
Should I live allowing Him to decide?
Somehow, I have to live this life
As I came into this world
The struggle will never come to an end
Oh my heart do not lament unnecessarily?
Anyhow, you continue to run
As the end definitely will come
Don’t give up as He who started will give an end
Therefore fight back taking courage.
Kavitam, Andhra, 30-06-1996, 9.15 am.
Leave a Reply