Emotion is a wonderful gift. But we should never allow it to clash with our common sense. Otherwise we will lose the balance and face lots of turbulence in life. And the aim of spirituality is to attain that balance. At the same time we should not confuse emotion with sentiment that we have. This is a big subject in which only a proper psychologist who has done lots of research and counselling alone can give proper guidance.
79 சமநிலை
சிறு தடுமாற்றம் சிந்தையிலே
தவறவிடும் நம் வாழ்வினையே
சீலம் என்பது வேறல்ல-அது
சிந்தையில் தோன்றும் சமநிலையே
உணர்வும் உள்ளமும் மோதும் போது
உணர்ச்சியில் தோன்றும் சங்கமம்
அதன் வேகத்தில் நிலை தடுமாறும் போது
வேதனை ஒன்றே எஞ்சிடும்
உணர்ச்சியில் தோன்றும் உரசல்கள் எல்லாம்
விரிசலின் எல்லையைக் கண்டிடும்
உள்ளம் ஒரு சமநிலை கண்டால்
உறவே நிலை நின்றிடும்
உணர்வு-உணர்ச்சி இவைகளின் இடையே
மனதின் சமநிலை முக்கியம்
அதை அடைவது எவ்விதம் என்பதே
ஆன்மீகத்தின் லட்சியம்
ஈரோடு, காலை 7.45
79 Balance
A small disturbance in the mind
Will bring damage in our life
Morality is nothing but
A balance in our mind
When feeling and heart clash with each other
There comes a merger (sangam) of emotion
If we are carried in its current
Suffering is the end result it
Every turbulence in the emotion
Will bring crack in so many ways
If the mind manages to strike a balance
It will sustain everything
Balance of the mind is important
In the clash between sense and emotion
The aim of spirituality is
How to attain it
Erode, 7.45
Leave a Reply