In a discussion with some people I shared about the need of self-discipline and giving up some personal rights for the common good for many. Some are chosen to do it and they need to learn self-discipline in every area, not giving place of too much emotion in life. As I was thinking about it, after the discussion I wrote this song.
80. பத்தியம்
அடங்கி ஓட முயன்றிடுவாய்
ஆகாதவனாய் நீ போகாதபடி
ஆர்ப்பரிக்கும் உன் உணர்ச்சிகளை
அர்ப்பணிக்க முயன்றிடுவாய்
உடலின் தேவையின் உணர்வெல்லாம்
மானிட வாழ்வில் அவசியமே
ஆனால் ’மனித’ வாழ்வின் ஓட்டத்திலே
’மாமிச’ சிந்தைகள் தீமைகளே
உணர்ச்சியே இல்லா வாழ்வென்பது
உப்பே இல்லா உணவாகும்
ஆனால் ’பத்தியம்’ என்பது சிலருக்குப்
பாங்காய் அமைந்த நியமங்களாம்
பலரின் வாழ்வின் நன்மைக்காய்
சிலரது தியாகங்கள் தேவைகளே
அதன் பலனை உலகில் காணும்போது
தோன்றும் உன்னத உணர்வுகளே
பொக்கரா, நேபாள், 6-2-1997, மாலை 6.15
80. Self discipline
Try to live with self discipline
So that you won’t become a waste
Ty to control
Your roaring emotions
Every need of the body
Is necessary in human life
But in this human life
Need of the body alone is evil one
Life without emotion
Is like food without salt
But for some people
Self discipline is a kind of sadhana
For the welfare of many
Some should try to sacrifice
When one sees the result of it
Then noble thoughts will come in mind
Pokhara, Nepal, 6-2-1997, 6.15 p.m.
Leave a Reply